அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஒன்றைக் கொடுங்கள்: கடவுள் சொல்லும் நற்செய்தி!, உண்மையான இறைநம்பிக்கை—சந்தோஷமான வாழ்வுக்கு வழி!, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள், பைபிள்—ஒரு கண்ணோட்டம், நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். மறுசந்திப்பு செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள், அல்லது இன்னும் அதிக பொருத்தமாக இருக்குமானால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். செப்டம்பர், அக்டோபர்: பின்வரும் துண்டுப்பிரதிகளில் ஒன்றைக் கொடுங்கள்: துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்!, சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி, உங்கள் வாழ்க்கை விதியின் கையிலா?, துன்பத்திற்கு விடிவுகாலம் வருமா?, உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை எப்படி நடத்துகிறோம் எனச் செய்து காட்டுங்கள். நவம்பர்: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்புகள் செய்யும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள். அல்லது, இன்னும் அதிக பொருத்தமாக இருக்குமானால், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் சிற்றேட்டையோ கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டையோ பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள்.
◼ டிசம்பர் 23, 2013 வாரம் தொடங்கி, சபை பைபிள் படிப்பில் பைபிள்—ஒரு கண்ணோட்டம் சிற்றேட்டைப் படிப்போம். இந்தச் சிற்றேடு தேவைப்படும் சபைகள் அடுத்த முறை பிரசுரங்களை ஆர்டர் செய்யும்போது இதைத் தருவிக்க வேண்டும்.
◼ செப்டம்பர் முதல், “அன்பும் விசுவாசமும் எப்படி இந்த உலகை வெல்லும்” என்ற தலைப்பில் வட்டாரக் கண்காணிகள் பொதுப் பேச்சு கொடுப்பார்கள்.
◼ நன்கொடை வெப்சைட் இப்போது இயங்கத் தொடங்கியிருக்கிறது. நன்கொடைகளை ஆன்லைனில் அனுப்பலாம்; ஆனால் உங்களிடம் சரியான இந்திய பாஸ்போர்ட் இருக்க வேண்டும்; அதோடு, வெப்சைட்டின் நன்கொடை பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் வங்கியுடன் இன்டர்நெட் பேங்கிங் வசதி இருக்க வேண்டும்.
◼ யெகோவாவின் அமைப்பு தயாரித்திருக்கும் டிவிடிகள் முன்பு ஒவ்வொரு சபைக்கும் ஒரு பிரதி மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது அவை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுக்கப்படும். இந்த டிவிடிகளை எல்லாக் குடும்பத்தாரும் பெற்றுக்கொண்டு குடும்ப வழிபாட்டுக்கும் தேவராஜ்ய போதனைக்கும் பயன்படுத்தும்படி உற்சாகப்படுத்துகிறோம்.