ஜூலை 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 133; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 21 பாரா. 8-13, பெட்டி பக். 169 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 18-21 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 20:17-38 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்து காணக்கூடியவராய் மேகத்தில் தோன்றி, பின்பு உலகம் பார்த்துக்கொண்டிருக்கையில் உண்மையுள்ள கிறிஸ்தவர்களைப் பரலோகத்துக்குள் எடுத்துக்கொள்வாரா?—நியாயங்காட்டி பக். 313 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: நாம் கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருப்பதை எப்படிக் காட்டலாம்?—ரோ. 8:6 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—ஆர்வமுள்ளவர்களை யெகோவாவின் அமைப்பினிடம் வழிநடத்துதல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 99 பாரா 2-லிருந்து பக்கம் 100 பாரா 1 வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. மாணாக்கர்களை அமைப்பிடம் வழிநடத்த இன்று யெகோவாவின் சித்தத்தைச் செய்பவர்கள் யார்? சிற்றேட்டை எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: யெகோவாவைச் சோதித்துப் பார்த்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். (மல். 3:10) ஒழுங்கான பயனியர்களில் இரண்டு மூன்று பேரைப் பேட்டி காணுங்கள். பயனியர் சேவையில் அவர்கள் மிகவும் அனுபவித்து மகிழ்வது எது? கடவுளிடம் நெருங்கிவர பயனியர் சேவை அவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறது? ஏதேனும் நல்ல அனுபவங்கள் இருந்தால் அதைப் பகிர்ந்துகொள்ளும்படி கேளுங்கள். முடிவாக, செப்டம்பர் மாதத்தில் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—யோவேல்.” கேள்வி-பதில்.
பாட்டு 54; ஜெபம்