யெகோவாவைத் துதிக்க இன்னும் அதிக வாய்ப்புகள்
1. ‘யெகோவாவை அதிகமாகத் துதிக்க’ என்ன புதிய ஏற்பாடு நமக்கு உதவும்?
1 மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் வட்டாரக் கண்காணி சபையைச் சந்திக்கிற மாதத்திலும் துணை பயனியர் செய்பவர்கள் 30 மணிநேரம் அறிக்கையிடலாம் என்ற புதிய ஏற்பாடு கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பமானது. ஒருவேளை, வட்டாரக் கண்காணியின் சந்திப்பு மாத இறுதியில் ஆரம்பித்து அடுத்த மாதத்தில் தொடர்ந்தால், அந்த இரண்டு மாதங்களில் ஏதாவது ஒரு மாதம் 30 மணிநேரம் அறிக்கை செய்து துணை பயனியர் ஊழியம் செய்யலாம். ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்களுக்காக வட்டாரக் கண்காணி நடத்துகிற முழு கூட்டத்திலும் துணை பயனியர்கள் கலந்துகொள்ளலாம். துணை பயனியர் சேவையில் 50 மணிநேரம் எட்ட முடியாதவர்கள் இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம் வருடத்திற்கு நான்கு முறை துணை பயனியர்களாய் 30 மணிநேரம் அறிக்கை செய்து ‘யெகோவாவை அதிகமாகத் துதிக்க’ முடியும். எப்பேர்ப்பட்ட அருமையான பாக்கியம்!—சங். 109:30, NW; 119:171.
2. வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது துணை பயனியர்கள் எவ்விதங்களில் ஊக்கம் பெறுவார்கள்?
2 வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது: வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது இனி அநேகர் துணை பயனியர்களாகச் சேவை செய்ய முடியும், அவரோடு சேர்ந்து ஊழியம் செய்வதால் ஊக்கம் பெறவும் முடியும். (ரோ. 1:11, 12) வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பு எடுத்து அவரோடு ஊழியம் செய்வதற்கு பொதுவாக அநேக துணை பயனியர்கள் ஏற்பாடு செய்வார்கள். வார நாட்களில் வேலைக்குப் போகும் துணை பயனியர்கள் வார இறுதி நாட்களில் ஒரு நாள் தங்களோடு ஊழியம் செய்ய முடியுமா என்று அவரைக் கேட்கலாம். அதோடு, ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்களோடு சேர்ந்து பயனியர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்வது துணை பயனியர்களுக்கு எவ்வளவாய் ஊக்கமளிக்கும்!
3. துணை பயனியர் சேவை செய்ய நினைவுநாள் அனுசரிப்புக் காலம் ஏன் மிகச் சிறந்த காலம்?
3 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின்போது: நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் துணை பயனியர்களாக 30 மணிநேரம் அறிக்கை செய்த அனைவரும் இப்போது தங்களின் “புகழ்ச்சிப் பலியை” இரட்டிப்பாக்க முடியும். (எபி. 13:15) துணை பயனியர்களாக உங்கள் ஊழியத்தை விரிவாக்க மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகச் சிறந்த மாதங்கள். நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில், ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சிக்காக அனைவரையும் அழைக்க ஒரு விசேஷ வினியோகிப்பில் நாம் சந்தோஷமாய் ஈடுபடுகிறோம். கூடுதலாக, நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் அநேகர் தங்கள் ஊழியத்தை விரிவாக்குவதால், வித்தியாசமான பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்கிற சந்தோஷத்தைப் பெறுகிறோம். நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதியவர்களை மீண்டும் சந்தித்து அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகிறோம், விசேஷப் பொதுப் பேச்சைக் கேட்க வருமாறு அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். துணை பயனியர் செய்வதற்கான இந்தக் கூடுதல் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த உங்கள் இருதயம் உங்களை உந்துவிக்குமா?—லூக். 6:45.