ஜூன் 17-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 125; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 20 பாரா. 1-7, பெட்டி பக். 156 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: அப்போஸ்தலர் 5-7 (10 நிமி.)
எண் 1: அப்போஸ்தலர் 5:17-32 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவாவால் அறியப்பட்ட நபராக இருக்க என்ன செய்ய வேண்டும்?—2 தீ. 2:19 (5 நிமி.)
எண் 3: இயேசுவின் பலியிலிருந்து பயனடைவதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன?—நியாயங்காட்டி பக். 311 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியத்தில் மரியாதை காட்டுவது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 190 பாரா 1-லிருந்து பக்கம் 192 பாரா 1 வரையிலுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஒரு பிரஸ்தாபி வீட்டுக்காரருக்கு மரியாதை காட்டாமல் பேசுவது போலவும், பிறகு மரியாதை காட்டி பேசுவது போலவும் இரண்டு சுருக்கமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: உங்கள் பைபிள் மாணாக்கர் பிரஸ்தாபி ஆவதற்கு உதவுங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 79-80-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
10 நிமி: “யெகோவாவைத் துதிக்க இன்னும் அதிக வாய்ப்புகள்.” கேள்வி-பதில். வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது துணை பயனியர் ஊழியம் செய்த ஓரிரு பிரஸ்தாபிகளைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 9; ஜெபம்