ஏப்ரல் 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 135; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 17 பாரா. 8-14, பெட்டி பக். 137 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லூக்கா 13-17 (10 நிமி.)
எண் 1: லூக்கா 16:16-31 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நாம் அபூரணர்களாய் இருப்பதால் யெகோவா நம்மை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று நினைப்பாரா?—சங். 103:8, 9, 14; கலா. 6:9 (5 நிமி.)
எண் 3: எல்லா மனிதரும் கடவுளுடைய பிள்ளைகளா?—நியாயங்காட்டி பக். 303 பாரா 3-பக். 304 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு.
10 நிமி: ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 2. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 112 பாரா 3 முதல் பக்கம் 114 பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஓரிரு பயனியர்களைப் பேட்டி காணுங்கள். பயனியர் செய்ய என்ன மாற்றங்களைச் செய்தார்களெனக் கேளுங்கள்.
10 நிமி: வேலையிடத்தில் சாட்சி கொடுக்கிறீர்களா? பின்வரும் கேள்விகளின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. (1) நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை சக பணியாளர்கள் தெரிந்திருப்பது ஏன் நல்லது? (2) அதை அவர்களுக்கு எப்படித் தெரியப்படுத்தலாம்? (3) வேலையிடத்தில் சாட்சி கொடுக்க என்னென்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம்? (4) பைபிளையும் பிரசுரங்களையும் கைவசம் வைத்திருப்பது ஏன் நல்லது? (5) வேலை நேரத்தில் அதிக நேரம் சாட்சி கொடுப்பதைத் தவிர்ப்பது ஏன் சிறந்தது? (6) வேலையிடத்தில் சாட்சி கொடுத்த நல்ல அனுபவங்கள் உங்களுக்கு இருக்கிறதா?
பாட்டு 45; ஜெபம்