பிப்ரவரி 25-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 53; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 15 பாரா. 8-12, பெட்டி பக். 118 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மாற்கு 5-8 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: “இன்னும் கொஞ்ச நேரம் செய்ய முடியுமா?” கலந்தாலோசிப்பு.
10 நிமி: தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்—2013 சிறுபுத்தகத்திலிருந்து பயனடையுங்கள். கலந்தாலோசிப்பு. 3-4 பக்கங்களில் உள்ள வருடாந்தர வசனத்தைச் சுருக்கமாகச் சிந்தியுங்கள்; பக்கம் 5-ல் “இதைப் படிப்பதற்கான வழி” என்ற தலைப்பிலுள்ள தகவலையும் சிந்தியுங்கள். பின்பு, தினவசனத்தை எந்த நேரத்தில் படிக்கிறார்கள், எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள் என்று சபையாரிடம் கேளுங்கள். முடிவாக, ஒவ்வொரு நாளும் தினவசனத்தைப் படித்து பயனடையும்படி எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’—அடுக்குமாடி குடியிருப்புகளில்.” பாரா 1-11 வரை கேள்வி-பதில். மூப்பர் கையாள வேண்டும். இதிலுள்ள ஆலோசனைகளைச் சபை பிராந்தியத்தில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று அவர் சொல்ல வேண்டும்.
பாட்டு 96; ஜெபம்