தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
பிப்ரவரி 25, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. “துக்கப்படுகிறவர்கள்” சந்தோஷமானவர்கள் என இயேசு ஏன் சொன்னார்? (மத். 5:4) [ஜன. 7, w09 2/15 பக். 6 பாரா 6]
2. “சோதனைக்கு இணங்கிவிட எங்களை அனுமதிக்காதீர்கள்” என ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தபோது எதை அர்த்தப்படுத்தினார்? (மத். 6:13) [ஜன. 7, w04 2/1 பக். 16 பாரா 13]
3. “மனிதகுமாரன் வருவதற்குள்” சீஷர்கள் பட்டணங்களில் எல்லாம் பிரசங்கித்து முடிக்க முடியாது என்று இயேசு ஏன் சொன்னார்? (மத். 10:23) [ஜன. 14, w10 9/15 பக். 10 பாரா 12; w90 9/1 பக். 8 பாரா 5]
4. கடுகு விதை பற்றி இயேசு சொன்ன உவமை என்ன இரண்டு விஷயங்களைச் சிறப்பித்துக் காட்டுகிறது? (மத். 13:31, 32) [ஜன. 21, w08 7/15 பக். 17-18 பாரா. 3-8]
5. “நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டு சிறுபிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், ஒருபோதும் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டீர்கள்” என்று சொன்னபோது என்ன பாடத்தை இயேசு கற்றுக்கொடுத்தார்? (மத். 18:3) [ஜன. 28, w07 2/1 பக். 9-10 பாரா. 3-4]
6. யூதாஸ் எதைக் குறித்து மனம்வருந்தினான்? (மத். 27:3-5) [பிப். 11, w08 1/15 பக். 31]
7. இயேசு ‘ஓய்வு நாளுக்கும் எஜமானர்’ என ஏன் அழைக்கப்படுகிறார்? (மாற். 2:28) [பிப். 18, w08 2/15 பக். 28 பாரா 7]
8. தன் தாயிடமும் சகோதரர்களிடமும் இயேசு ஏன் அப்படி நடந்துகொண்டார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (மாற். 3:31-35) [பிப். 18, w08 2/15 பக். 29 பாரா 5]
9. மாற்கு 8:22-25-ன்படி, இயேசு ஏன் ஒரு குருடனுக்குப் படிப்படியாகப் பார்வை அளித்தார், அதிலிருந்த நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [பிப். 25, w00 2/15 பக். 17 பாரா 7]
10. மாற்கு 8:32-34-ன்படி, பேதுரு இயேசுவை கடிந்துகொண்டபோது, இயேசு நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? [பிப். 25, w08 2/15 பக். 29 பாரா 6]