பிப்ரவரி 11-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 123; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 14 பாரா. 11-20 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 26-28 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 27:24-44 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுள் பொறுமையாக இருப்பது எப்படி நமக்கு மீட்பை அளிக்கிறது?—2 பே. 3:9, 15 (5 நிமி.)
எண் 3: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘தீர்க்கதரிசனத்தின்பேரில் நீங்கள் மட்டுக்குமீறிய அழுத்தம் வைக்கிறீர்கள்’—நியாயங்காட்டி பக். 298 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மத்தேயு 6:19-21-ஐயும் லூக்கா 16:13-ஐயும் வாசியுங்கள். இந்த வசனங்கள் ஊழியத்தில் எப்படி நமக்கு உதவலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “நீங்கள் துணை பயனியர் செய்வீர்களா?” கேள்வி-பதில். ஊழியக் கண்காணி நடத்துவார். பாரா 2-ஐ கலந்தாலோசித்த பின்பு, மார்ச் மாதத்தில் துணை பயனியர் செய்ய திட்டமிட்டிருக்கும் இருவரைப் பேட்டி காணுங்கள்; அவர்களில் ஒருவர் முழுநேர வேலை பார்க்கிறவர், மற்றொருவர் உடல்நலப் பிரச்சினையால் அதிகம் செய்ய முடியாதவர். பயனியர் ஊழியம் செய்வதற்காக அவர்கள் என்னென்ன மாற்றங்கள் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் எனக் கேளுங்கள். பாரா 3-ஐ கலந்தாலோசித்த பின்பு, ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில் ஒரு தம்பதியர் அல்லது பிள்ளைகளை உடைய குடும்பத்தார், ஊழியத்தில் இன்னும் அதிகமாய் ஈடுபடுவதற்காக ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி தங்களுடைய குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுகிறார்கள்.
பாட்டு 122; ஜெபம்