டிசம்பர் 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 85; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 11 பாரா. 5-12, பெட்டி பக். 89 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நாகூம் 1–ஆபகூக் 3 (10 நிமி.)
எண் 1: ஆபகூக் 2:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சத்தியத்தைப் பற்றி ஏன் முழு நம்பிக்கையோடு பேச வேண்டும்?—2 தீ. 1:7, 8 (5 நிமி.)
எண் 3: உண்மையான அறிவையும் ஞானத்தையும் நாம் எவ்வாறு அடையலாம்?—நியாயங்காட்டி பக். 288 பாரா 3-பக். 289 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: டிசம்பர் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. இந்த மாத காவற்கோபுரம் மக்களை எப்படி கவருகிறது என்பதை 30-லிருந்து 60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு ஆர்வத்தைத் தூண்டும் என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகைகளை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: துண்டுப்பிரதிகளைக் கொடுத்த அனுபவங்கள். கலந்தாலோசிப்பு. ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். நவம்பர் மாதத்தில் துண்டுப்பிரதிகளைக் கொடுத்ததால் கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். வீட்டுக்குவீடு ஊழியத்தில் அப்படிக் கொடுத்து வெற்றி கண்ட இரண்டு பிரஸ்தாபிகள் அதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 96; ஜெபம்