ஆகஸ்ட் 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 9-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 21-22
எண் 1: 1 இராஜாக்கள் 22:1-12
எண் 2: ஒருவன் சுதந்திரத்திற்காக ஆசைப்பட்டு உலகத்தின் மாதிரியைப் பின்பற்றினால் அவன் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் வருகிறான்? (rs-TL பக். 191 பாரா. 1–2)
எண் 3: ஜெபம் செய்வது பற்றி எலியாவின் உதாரணம் நமக்கு என்ன கற்பிக்கிறது? (யாக். 5:18)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல். ஆகஸ்ட் 2004 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 1-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துவதற்கும் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்க மாணாக்கர்களுக்கு உதவுவதற்கும் இலக்கு வைக்குமாறு பிரஸ்தாபிகளை ஊக்கப்படுத்துங்கள்.
10 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 4. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 116, பாரா 1 முதல் பக்கம் 117, பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. பெத்தேலில் சேவை செய்கிற/செய்த அல்லது ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியில் உதவி செய்த ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். இந்தச் சேவையில் அவர்கள் அனுபவித்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி கேளுங்கள்.
10 நிமி: “கிறிஸ்தவ ஊழியர்களுக்கான ஓர் ஏற்பாடு.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. வரவிருக்கும் வட்டார மாநாடு நடைபெறும் தேதி உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை அறிவியுங்கள். சமீபத்தில் நடந்த வட்டார மாநாட்டில் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மைகளைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.