ஜூன் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 28-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதிகாரம் 8, பாரா. 19-26, பக். 106, 109-லுள்ள பெட்டிகள்
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 3–6
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ஜூலை மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்குப் பத்திரிகைகளின் பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்ன கேள்விகளைக் கேட்டு, எந்த வசனங்களைப் பயன்படுத்தி பத்திரிகைகளை அளிப்பார்கள் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். மறுசந்திப்பின்போது பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டுகிற இன்னொரு நடிப்போடு பேச்சை நிறைவு செய்யுங்கள்.—km 8/07 பக். 3-ஐக் காண்க.
15 நிமி: சிசுப் பருவத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுதல். சபையாருடன் கலந்தாலோசிப்பு. தீமோத்தேயு, நற்செய்தியை அறிவிப்பதில் பக்திவைராக்கியமிக்கவர், திறம்பட்டவர் எனப் பெயரெடுத்திருந்தார். (பிலி. 2:20-22) இதற்கு ஓரளவு காரணம், சிசுப் பருவத்திலிருந்தே அவர் தன்னுடைய அம்மாவிடமிருந்தும் பாட்டியிடமிருந்தும் பெற்ற பயிற்சி ஆன்மீக அடித்தளமாய் அமைந்ததே. (2 தீ. 1:5; 3:15) பைபிள் சார்ந்த பின்வரும் ஆலோசனைகள், நற்செய்தியைத் திறம்பட அறிவிப்பதற்குத் தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கப் பெற்றோருக்கு உதவும். (1) உங்கள் பிள்ளையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊழியத்திற்குக் கூட்டிச் செல்லுங்கள்; வயதுக்கும் திறமைக்கும் ஏற்றவாறு ஊழியத்தில் பங்கேற்க அவனுக்கு/அவளுக்குப் பயிற்சி அளியுங்கள். (நீதி. 22:6) (2) ஊழியத்திற்கு முதலிடம் கொடுப்பதில் முன்மாதிரி வையுங்கள். (பிலி. 1:9, 10) (3) குடும்ப வழிபாட்டின்போதும் பிற சந்தர்ப்பங்களிலும், நற்செய்தியை அறிவிக்கும் வேலைமீது அவர்களுக்குப் பிரியத்தையும் போற்றுதலையும் படிப்படியாக அதிகரியுங்கள். (உபா. 6:6, 7) (4) உங்கள் மனப்பான்மையிலும் சரி பேச்சிலும் சரி, ஊழியத்தின்மீது நல்ல கண்ணோட்டத்தை வைத்திருங்கள். (பிலி. 3:8; 4:8; 1 தீ. 1:12) (5) ஊழியத்தில் குடும்பமாகக் கலந்துகொள்வதை வழக்கமாக்குங்கள். (அப். 5:41, 42) (6) பக்திவைராக்கியமுள்ள ஊழியர்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள். (நீதி. 13:20) ஊழியத்தைச் சந்தோஷமுள்ளதாகவும் பலனுள்ளதாகவும் ஆக்கிக்கொள்வதற்குத் தங்கள் பெற்றோர் எந்தெந்த விதங்களில் தங்களுக்கு உதவினார்கள் என்பதைக் குறிப்பாகச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.