தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 28, 2010-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மே 3 முதல் ஜூன் 28, 2010 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. அப்னேர் இறந்த சமயத்தில் தாவீது புலம்பி அழுததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (2 சா. 3:31-34) [w05 5/15 பக். 17 பாரா 6; w06 7/15 பக். 21 பாரா. 9-10]
2. நாத்தான் என்ன தவறு செய்தார், தீர்க்கதரிசியாக இல்லாதபடி அவரை ஏன் யெகோவா நிராகரித்துவிடவில்லை? (2 சா. 7:3) [rs பக். 134 பாரா 8]
3. இஸ்போசேத் கொலை செய்யப்பட்டு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் தாவீது இஸ்ரவேலர் எல்லார்மீதும் ராஜாவாக்கப்பட்டார்? (2 சா. 5:1, 2) [w05 5/15 பக். 17, பாரா 2]
4. மேவிபோசேத்துக்கு தாவீது எப்படி அன்புள்ள தயவு காட்டினார், இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (2 சா. 9:7) [w02 5/15 பக். 19, பாரா 5]
5. கித்தியனாகிய ஈத்தாய்க்கும் தாவீது ராஜாவுக்கும் இடையே இருந்த உறவிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்? (2 சா. 15:19-22) [w09 5/15 பக். 27-28]
6. மேவிபோசேத் மீது சீபா சுமத்திய குற்றச்சாட்டுகள் தவறென வேத வசனங்களிலிருந்து நாம் எவ்வாறு விளக்கலாம்? (2 சா. 16:1-4) [w02 2/15 பக். 14-15 பாரா 11, அடிக்குறிப்பு]
7. எண்பது வயதான பர்சிலாவைத் தன் அரண்மனையில் வசிக்குமாறு தாவீது கேட்டுக்கொண்டபோது, பர்சிலா கிம்காமைச் சிபாரிசு செய்தது ஏன்? (2 சா. 19:33-37) [w07 6/1 பக். 24 பாரா 13]
8. யெகோவாவின் மனத்தாழ்மை எப்படி தாவீதைப் பெரியவராக்கியது? (2 சா. 22:36) [w07 11/1 பக். 5 பாரா 2; w04 11/1 பக். 29]
9. தாவீது உயிரோடிருந்தபோதே ஆட்சியைக் கைப்பற்ற அதோனியா ஏன் துடித்தான்? (1 இரா. 1:5) [w05 7/1 பக். 28 பாரா 5]
10. ஞானத்தையும் பகுத்துணர்வையும் கேட்டு சாலொமோன் செய்த ஜெபத்திற்கு யெகோவா ஏன் பதிலளித்தார்? (1 இரா. 3:9) [w05 7/1 பக். 30 பாரா 2]