தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 28, 2009-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. உபாகமம் 14:1-ல் உள்ள நியமத்தை இன்று கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றலாம்? [w05 1/1 பக். 28; w04 9/15 பக். 27 பாரா 5]
2. உபாகமம் 20:5-7-ல் உள்ள நியமத்தை இன்று கிறிஸ்தவ சபையில் எப்படிப் பின்பற்றலாம்? [w04 9/15 பக். 27 பாரா 6]
3. போர் சம்பந்தப்பட்டதில் இஸ்ரவேலர் எவ்வாறு மற்ற மக்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தார்கள்? (உபா. 20:10-15, 19, 20; 21:10-13) [cl பக். 134-135, பாரா 17]
4. மனமகிழ்ச்சியோடு யெகோவாவைச் சேவிக்க எது நமக்கு உதவும்? (உபா. 28:47) [w95 1/15 பக். 16 பாரா. 4-5]
5. இஸ்ரவேலரிடம் யெகோவா காட்டிய அன்பைப் பற்றி உபாகமம் 32:9, 11, 12-ல் கொடுக்கப்பட்டுள்ள ஒப்புமையிலிருந்து பெற்றோர்கள் எப்படிப் பயனடையலாம்? [w01 10/1 பக். 9 பாரா. 7-9]
6. வேவுகாரர்களைத் தேடிவந்த ராஜாவின் ஆட்களிடம் ராகாப் பொய் சொன்னதை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? (யோசு. 2:4, 5) [w93 12/15 பக். 25 பாரா 1]
7. யோசுவா 3:15, 16-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இஸ்ரவேலரின் உதாரணம் நமக்கு என்ன பாடத்தைப் புகட்டுகிறது? [w04 12/1 பக். 9 பாரா 6]
8. ஆகான் களவாடிய சம்பவத்தை யோசுவா கையாண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (யோசு. 7:20-25) [w04 12/1 பக். 11 பாரா 4]
9. கடவுளுடைய வார்த்தை நிச்சயம் நிறைவேறும் என்பதை யோசுவா 9:22, 23 எப்படிச் சிறப்பித்துக் காட்டுகிறது? [w04 12/1 பக். 11 பாரா 3; si பக். 44, பாரா 13]
10. காலேபின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன ஊக்கத்தைப் பெறுகிறோம்? (யோசு. 14:8, 10-12) [w04 12/1 பக். 12 பாரா 2; w-E93 5/15 பக். 29 பாரா 1]