டிசம்பர் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 28-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 12-15
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: எப்படிப் பதிலளிப்பது. உங்களுடைய பிராந்தியத்தில் பொதுவாக எதிர்ப்படும் ஆட்சேபணைகளைப் பற்றிச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். இந்த ஆட்சேபணைகளில் ஒன்றைச் சமாளிப்பதைச் சுருக்கமாக நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 64-68-ஐப் பாருங்கள்.)
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். உங்களுடைய பிராந்தியத்தில் மறுசந்திப்புகளின்போது பைபிள் படிப்புகளை அறிமுகப்படுத்தியதால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன? உங்கள் பிராந்தியத்தில் என்ன அணுகுமுறை பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என்பதைச் சொல்லும்படியோ நடித்துக்காட்டும்படியோ ஒரு பயனியரிடம் அல்லது பிரஸ்தாபியிடம் கேளுங்கள். எதிர்ப்பு உள்ள பிராந்தியங்களில், ஒருவருக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே, ஒருவேளை ஓரிரு மறுசந்திப்புகள் செய்த பிறகே, பைபிள் படிப்பை அறிமுகப்படுத்துவது ஞானமானதாய் இருக்கும்.
10 நிமி: ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பு. இப்புத்தகத்திலுள்ள அம்சங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள். வீட்டுக்காரர் உண்மையிலேயே ஆர்வம் காட்டும்போது மட்டும் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளியுங்கள். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையில், எப்படி விவேகத்தோடு இந்தப் புத்தகத்தை அளித்து பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைப் பற்றி ஒரு பிரஸ்தாபியுடன் உரையாடுங்கள். இந்த மாதத்தில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க இலக்கு வைக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்; அதோடு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 16-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிலை வழிபாடு போன்ற மத நம்பிக்கைகளைப் பற்றிப் பேசும்போது விவேகமாக நடந்துகொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.