டிசம்பர் 21-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 21-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
my பகுதி 8, கதை 114
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 9-11
எண் 1: யோசுவா 9:1-15
எண் 2: அர்மகெதோன் சீக்கிரம் வருமென எப்படி சொல்லலாம்? (lr அதி. 47)
எண் 3: கடவுளுடைய சமாதானமான புதிய உலகம்—நீ எப்படி அங்கு வாழலாம் (lr அதி. 48)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். ஒரு நடிப்பில், தொகுதிக் கண்காணி தான் தயாரித்த அணுகுமுறையை ஓர் இளம் பிரஸ்தாபியிடம் சொல்கிறார்; அதை எதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் என்ன கேள்வியையும் வசனங்களையும் பயன்படுத்துவார் என்பதையும் விளக்குகிறார். அந்த இளம் பிரஸ்தாபி தான் யோசித்து வைத்திருந்த ஓர் அணுகுமுறையை அவரிடம் சொல்லி, அதைச் சரிசெய்ய உதவும்படி கேட்கிறார். அந்தப் பிரஸ்தாபி யோசித்து வைத்திருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் இருவருமாக ஒரு கேள்வியைத் தயாரிக்கிறார்கள், வசனங்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.
15 நிமி: “மாணாக்கர்களுக்கு ‘உங்கள் உயிரையே கொடுங்கள்’.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 2-ஐச் சிந்தித்த பிறகு, ஒரு பிரஸ்தாபி தனது மாணாக்கர்களிடம் என்ன நடைமுறையான வழிகளில் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார் என்பதைப் பேட்டி காணுங்கள். அதனால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? அதோடு, பைபிள் படிப்பு நடத்தியவர் காட்டிய தனிப்பட்ட அக்கறையால் பயனடைந்த ஒரு பிரஸ்தாபியையும் பேட்டி காணுங்கள்.