அக்டோபர் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 26-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உபாகமம் 11-13
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். பேச்சு. அந்தப் பத்திரிகைகளின் பொருளடக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்; எந்தெந்தக் கட்டுரைகள் உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டலாம் என்பதைச் சிறப்பித்து காட்டுங்கள். ஊழியத்தில் பேச ஒரு பிள்ளைக்குப் பெற்றோர் எப்படி உதவுகிறார் என்பதைக் காட்டும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அந்தப் பெற்றோரும் பிள்ளையும் சேர்ந்து ஒரு கட்டுரையைத் தேர்ந்தெடுக்கிறார்கள், வீட்டுக்காரரிடம் என்ன கேள்வியைக் கேட்பது, அவருக்கு எந்த வசனத்தை வாசித்துக் காட்டுவது எனவும் தீர்மானிக்கிறார்கள். பின்னர் பிள்ளை அதை நடித்துக் காட்டுகிறது, நன்கொடையைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
10 நிமி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? சபையாருடன் கலந்தாலோசிப்பு. இப்புத்தகத்திலுள்ள எந்த அதிகாரங்களைக் காட்டிப் பேசுவது சபைப் பிராந்தியத்தில் அதிக பயனுள்ளதாய் இருந்திருக்கிறது என்று சபையாரிடம் கேளுங்கள். புத்தகத்தை அறிமுகப்படுத்தும்போது என்ன கேள்வியை, படத்தை, அல்லது வசனத்தை அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்? அதில் ஒன்றை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு. பெட்டியிலுள்ள வசனங்களை வாசித்துக் கலந்தாலோசியுங்கள்.