மார்ச் 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 30-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 1-6
எண் 1: யாத்திராகமம் 1:1-19
எண் 2: ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார் (lr-TL அதி. 12)
எண் 3: நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக் கொண்டு அற்புதச் சுகப்படுத்துதல் செய்யப்படுகிறதா? (rs-TL பக். 156-157 பாரா 3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள். நினைவுநாள் அனுசரிப்பு சம்பந்தமாக ஏதேனும் அறிவிப்புகள் செய்ய வேண்டியிருந்தால் செய்யுங்கள்.
15 நிமி: நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்ட ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ தயாராய் இருங்கள். பைபிள் மாணாக்கர்கள், செயலற்ற பிரஸ்தாபிகள், தெரிந்தவர்கள், குடும்ப அங்கத்தினர்கள் போன்று நினைவு அனுசரிப்புக்கு வந்திருந்தவர்களுக்கு உதவ பிரஸ்தாபிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைப்பூட்டும் விதத்தில் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. (மார்ச் 2008 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ஐக் காண்க.) நினைவுநாள் அனுசரிப்புக்கு வந்திருந்த ஆர்வமுள்ள ஒருவருக்கு எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டும் சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நினைவுநாள் பைபிள் வாசிப்புப் பகுதி ஏப்ரல் 5, ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாவதை எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். இதை எப்படி வாசிக்கலாம் என்பது பற்றிய நடைமுறை ஆலோசனைகளைக் கொடுங்கள்.
15 நிமி: முதிர்வயதிலும் ஆன்மீகக் கனி தருபவர்கள். ஜூன் 1, 2007 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-22, பாராக்கள் 1-6-ன் அடிப்படையில் ஊக்கமூட்டும் பேச்சு. யெகோவாவை நீண்டகாலமாகச் சேவித்துவரும் உண்மையுள்ள ஊழியர் ஒருவரைப் பேட்டி காணுங்கள். யெகோவாவுக்கு எப்போதும் சந்தோஷமாகச் சேவை செய்ய எது அவருக்கு உதவியிருக்கிறது என்று கேளுங்கள்.