அறிவிப்புகள்
◼ ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் பழுப்பேறி உள்ளதும் 1992-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றைப் பிரஸ்தாபிகள் அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம், உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? ஆகிய புத்தகங்களில் ஒன்றை அளியுங்கள். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விடாமுயற்சி செய்யுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும்.
◼ மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வட்டாரக் கண்காணிகள் புதிய பொதுப் பேச்சைக் கொடுக்கத் துவங்குவர்; அதன் தலைப்பு, “உலகக் கனவுகளை உதறித்தள்ளுங்கள், ராஜ்ய நனவுகளை நாடித்தொடருங்கள்.”
◼ இந்த வருடம் ஏப்ரல் 9, வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இயேசுவின் மரண நினைவுநாளை அனுசரிக்க சபைகள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவுநாளை அனுசரிக்க வேண்டும். பொதுவாக, ஒரே ராஜ்ய மன்றத்தைப் பல சபைகள் பயன்படுத்தும்போது, அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் வேறொரு இடத்தில் நினைவுநாளை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கூட்டுறவு கொள்வதிலிருந்தும் எல்லாரும் முழுமையாகப் பயன் அடைவதற்கு வசதியாக, இந்த அனுசரிப்பை அடுத்த சபை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் குறைந்தபட்சம் 40 நிமிட இடைவெளி விடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
◼ ஜனவரி 26-ல் துவங்கும் வாரத்தில் ஊழியக் கூட்டத்தின்போது கலந்தாலோசிப்பதற்கு வசதியாக இரத்தமின்றி சிகிச்சை–மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவைப் பார்த்து வரும்படி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
◼ சபை பைபிள் படிப்பிற்காக என்னுடைய பைபிள் கதை புத்தகத்திலிருந்து தயாரிக்கும்போது, கூடுதல் கேள்விகளோடு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைச் சபையார் முன்கூட்டியே வாசித்துவிட்டு வர வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் சபை பைபிள் படிப்பை முடிப்பதற்காக இந்த அறிவுரையைப் பின்பற்றும்படி எல்லாரையும் ஊக்கப்படுத்துகிறோம்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
“கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்” —ஆங்கிலம்
இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுப்பு 2 —ஆங்கிலம்
◼ கிடைக்கும் புதிய டிவிடி-கள்:
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் —அமெரிக்க சைகை மொழி