ஜனவரி 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 12-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 6-10
எண் 1: ஆதியாகமம் 9:1-17
எண் 2: கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களுக்கு பதில் அளித்தல் (rs-TL பக். 150 பாரா 2–பக். 151 பாரா 3)
எண் 3: அன்பான கடவுள் எழுதிய கடிதம் (lr-TL அதி. 2)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதால் வரும் நன்மை. சபையாருடன் கலந்தாலோசிப்பு. தம் செய்தியைக் கேட்ட மக்களை, உதவி தேவைப்படுகிற செம்மறியாடுகளாக இயேசு கருதினார்; இவ்விஷயத்தில் அவர் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். (மத். 9:36–38) சவுலைச் சந்திப்பதற்கு அனனியா ஆரம்பத்தில் பயப்பட்டபோதிலும், பிற்பாடு தன் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள எது அவருக்கு உதவியது? (அப். 9:13–15) பவுலிடம் அவர் பேசிய விதம் அவருக்கு நம்பிக்கையான மனநிலை இருந்ததை எப்படிக் காட்டுகிறது? (அப். 9:17) நம் பிராந்தியத்திலுள்ள மக்களை நம்பிக்கையான மனநிலையோடு அணுக நமக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன? ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது எப்படி அதிக பலனைத் தரும்? ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலை காட்டியதால் நல்ல பலன்களைப் பெற்ற பிரஸ்தாபிகளில் ஒருவரை அல்லது இருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
10 நிமி: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்துவது? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 7-8-ன் அடிப்படையில் ஊழியக் கண்காணி அல்லது வேறொரு மூப்பர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: “எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்?”a
[அடிக்குறிப்பு]
a அறிமுகக் குறிப்புகளுக்கு அதிகபட்சம் ஒரு நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், அதன்பின் கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.