ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: அன்போடு, தாராளமாய் கொடுக்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். நவம்பர் 15, 2008, காவற்கோபுரம், பக்கங்கள் 6-7-ன் அடிப்படையில் மூப்பர் தரும் பேச்சு.
20 நிமி: “நம்மிடமுள்ள பொக்கிஷங்களை வாரி வழங்குவோம்.” a பாரா 2-ஐ சிந்திக்கும்போது, எந்த பைபிள் சத்தியம் யெகோவாவின் அமைப்பிடம் தங்களைக் கவர்ந்திழுத்தது அல்லது எந்த சத்தியத்தை ஞானஸ்நானம் பெற்றது முதல் தாங்கள் நெஞ்சார நேசிக்கிறார்கள் என்பதை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
நவம்பர் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அறிவிப்புகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி.b
20 நிமி: “நீங்களும் போதகர் ஆகலாம்!” c முன்னர் பைபிள் படிப்பு நடத்த தனக்குத் திறமையில்லையென நினைத்துக்கொண்டிருந்த, ஆனால் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டிருக்கிற ஒரு பிரஸ்தாபியையோ பயனியரையோ பேட்டி காணுங்கள். உதவியைப் பெற யெகோவாமீது அவர் எப்படிச் சார்ந்திருந்தார்? திறம்பட்டவராவதற்குக் குறிப்பாய் என்னென்ன வழிகளில் அமைப்பு அவருக்கு உதவியிருக்கிறது? பைபிள் படிப்பு நடத்துவதன்மூலம் அவர் என்னென்ன பலன்களைப் பெற்றிருக்கிறார்?
நவம்பர் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை பிராந்தியத்தில் சபையார் எந்தளவு வினியோகித்திருக்கிறார்கள் என்பதை சபையின் ஊழியக் கண்காணியிடம் கேளுங்கள். டிசம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்; அதை அளிப்பதைக் காட்டும் ஓரிரு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: சபை தேவைகள்.
15 நிமி: அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரத்தையும் அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு!-வையும் அளியுங்கள். இந்தப் பத்திரிகைகளை சபையார் ஏற்கெனவே ஊழியத்தில் அளித்து வருவதால், என்னென்ன நல்ல பலன்களைப் பெற்றிருக்கிறார்களென அவர்களிடம் கேளுங்கள். எந்தெந்த கட்டுரைகள் தங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன என்பதையும் கேளுங்கள். கட்டுரைகளை அறிமுகப்படுத்த என்னென்ன கேள்விகளையும் வசனங்களையும் பயன்படுத்தலாம்? நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். பிராந்தியத்திற்குப் பொருத்தமான ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி பத்திரிகையை அளிப்பதைப் போன்ற சுருக்கமான மற்றொரு நடிப்பை ஒரு மூப்பர் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
டிசம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நவம்பர் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்களைப் தயாரித்தல். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 9, பாராக்கள் 1-2-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. டிசம்பர் மாத அளிப்பை எப்படிக் கொடுக்கலாம் என்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “எதிர்ப்பை எதிர்கொள்ள புதியவர்களைத் தயார்படுத்துங்கள்.” d பாரா 2-ஐ கலந்தாலோசிக்கும்போது, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் “யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பின் கீழுள்ள தகவல், தங்கள்மீது அக்கறையுள்ள உறவினர்களும் நண்பர்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பைபிள் மாணாக்கர்களுக்கு எப்படி உதவலாம் என்பதைச் சுருக்கமாக சிந்தியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.