உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/08 பக். 3-6
  • 2009 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2009 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
  • துணை தலைப்புகள்
  • அறிவுரைகள்
  • அட்டவணை
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 10/08 பக். 3-6

2009 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

அறிவுரைகள்

2009-⁠ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.

பிரசுரங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம் ) [bi12 ], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], பெரிய போதகரிடம் கற்றுக்கொள் [lr-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL].

வரவேற்புரையுடன் பள்ளியைச் சரியான நேரத்தில் ஆரம்பித்துக் கீழ்க்காணும் குறிப்புகளின்படி நடத்த வேண்டும். ஒரு பேச்சு முடிந்த பின்னர் அடுத்த பேச்சு என்னவென்று பள்ளிக் கண்காணி அறிவிப்பார்.

பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 10 நிமிடங்கள். இதை, தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; முதல் நான்கு நிமிடத்தில் அவர் அந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து குறிப்புகளைச் சிந்திக்க வேண்டும். புதிதாக ஒரு பைபிள் புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கப் போகிற வாரத்தில் வாராந்தர பைபிள் வாசிப்பு குறிப்புகளைச் சிந்திக்க வேண்டியதில்லை. அந்தச் சமயங்களில், முதல் நான்கு நிமிடங்களுக்கு ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்திலிருந்து குறிப்புகளைச் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, ஜனவரி 5-⁠ல் துவங்கும் வாரத்தில் ஆதியாகமப் புத்தகத்திலுள்ள முதல் ஐந்து அதிகாரங்கள் சிந்திக்கப்படும். அப்போது பேச்சாளர் ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்தில் ஆதியாகமப் புத்தகத்திற்குரிய முன்னுரையில் காணப்படும் பாராக்களிலுள்ள முக்கியக் குறிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சபைக்குப் பயன்படும் விதத்தில் அந்தத் தகவலை அவர் பொருத்திக் காட்ட வேண்டும். வாராந்தர பைபிள் வாசிப்புப் பகுதியிலுள்ள குறிப்புகளைச் சிந்தித்தாலும்சரி ‘வேதாகமம் முழுவதும்’ புத்தகத்திலுள்ள குறிப்புகளை சிந்தித்தாலும்சரி, அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு பயனுள்ளது என்பதை சபையார் புரிந்துகொள்ள உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆரம்பக் குறிப்புகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நான்கு நிமிடங்களை மட்டுமே பேச்சாளர் இதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாராந்தர பைபிள் வாசிப்பில் தங்களுக்கு ஆர்வமூட்டிய விஷயத்தை சுருக்கமாக, 30 விநாடிகள் அல்லது அதற்கும் குறைவான சமயத்தில் சபையார் சொல்வதற்கு ஆறு நிமிடங்களை அவர் ஒதுக்க வேண்டும். பின்பு, மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குப் பிரிந்து செல்லும்படி பள்ளிக் கண்காணி சொல்வார்.

பேச்சு நியமிப்பு எண் 1: 4 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக. இது சகோதரர்களுக்குரிய வாசிப்பு நியமனம். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல் நியமிக்கப்பட்ட பகுதியை மாணாக்கர் வாசிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல், சரளம், தகுந்த இடங்களில் அழுத்தம், குரல் வேறுபாடு, பொருத்தமான இடங்களில் நிறுத்தம், இயல்பு போன்ற குணங்களோடு வாசிக்க மாணாக்கருக்கு உதவுவதே பள்ளிக் கண்காணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

பேச்சு நியமிப்பு எண் 2: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த நியமிப்பை பெறும் சகோதரிகள், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில் பக்கம் 82-⁠லுள்ள பட்டியலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள் அல்லது அவற்றில் ஒன்று அவர்களுக்கு நியமிக்கப்படும். கொடுக்கப்பட்ட மையப்பொருளை, சபையின் பிராந்தியத்திற்கு ஏற்றதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கிற வெளி ஊழியத்தின் ஓர் அம்சத்திற்கு மாணாக்கர் பொருத்த வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து அந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வேதவசனங்களைப் பகுத்தாராயவும் பேச்சின் முக்கிய குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளிக் கண்காணி முக்கியமாக கவனிப்பார். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணி நியமிப்பார்.

பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரருக்கோ ஒரு சகோதரிக்கோ நியமிக்கப்படலாம். நியமிக்கப்பட்ட மையப்​பொருளை மாணாக்கர் படிப்படியாக விரிவாக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். இது சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ராஜ்ய மன்றத்தில் உள்ளவர்களிடம் நேரடியாகப் பேசுவதைப்போல் இதைக் கொடுக்க வேண்டும். சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 2-⁠ல் சொல்லப்பட்டதற்கு இசையவே எப்போதும் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும். நட்சத்திர குறியிடப்பட்ட (*) பொருளை, சபையாரைப் பார்த்துப் பேசுவதுபோல் கொடுப்பதற்காக சகோதரர்களுக்கு மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். முடிந்தவரையில் இந்தப் பேச்சுகளை மூப்பருக்கோ உதவி ஊழியருக்கோ நியமிக்க வேண்டும்.

ஆலோசனை: 1-2 நிமிடங்கள். மாணாக்கர் எந்தப் பேச்சு பண்பில் உழைக்கிறாரென பள்ளிக் கண்காணி முன்கூட்டியே அறிவிக்க மாட்டார். பேச்சு எண்கள் 1, 2, 3 ஆகியவற்றிற்குப் பிறகு, பேச்சில் கவனித்த பாராட்டத்தக்க விஷயங்களை அவர் கூறுவார். ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தை அடிக்கடி சுட்டிக்காட்டி, பேச்சு நன்றாயிருந்ததற்கான குறிப்பிட்ட காரணங்களைச் சொல்லுவார். ஒவ்வொரு மாணாக்கரின் தேவைக்கும் ஏற்றவாறு உற்சாகப்படுத்தும் வகையில் கூடுதலான ஆலோசனைகளைக் கூட்டத்திற்குப் பிறகோ மற்றொரு சமயத்திலோ தனிப்பட்ட விதமாக கொடுக்கலாம்.

நேரம்: ஆலோசனை கூறுபவரின் குறிப்புகள் உட்பட எல்லா பேச்சையும் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். பேச்சு நியமிப்பு எண்கள் 1-3-⁠க்குரிய நேரம் முடிந்ததும் சாதுரியத்துடன் அவற்றை நிறுத்த வேண்டும். பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளைக் கொடுக்கும் சகோதரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருமே குறித்த நேரத்தில் பேச்சை முடிப்பதற்குக் கவனமாயிருக்க வேண்டும். மொத்த நிகழ்ச்சி: 30 நிமிடங்கள்.

ஆலோசனை படிவம்: ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தில்.

துணை ஆலோசகர்: மற்றொரு தகுதி வாய்ந்த மூப்பர் இருந்தால், பள்ளிக் கண்காணியோடுகூட துணை ஆலோசகராக சேவை செய்ய மூப்பர் குழு அவரைத் தெரிவு செய்யலாம். சபையில் மூப்பர்கள் நிறையப் பேர் இருந்தால், இந்நியமிப்புக்கென தகுதி வாய்ந்த வெவ்வேறு மூப்பரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யலாம். பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளைக் கையாளும் சகோதரர்களுக்கு, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஆலோசனை கொடுப்பதே துணை ஆலோசகருடைய பொறுப்பு. சக மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பேச்சிற்குப் பிறகும் அவர் அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியதில்லை.

தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மறுபார்வை: 20 நிமிடங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கண்காணி மறுபார்வையை நடத்துவார். மேலே சொல்லப்பட்டபடி, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளுக்குப் பிறகு இது சிந்திக்கப்படும். நடப்பு வாரம் உட்பட முந்தைய இரண்டு மாதங்கள் பள்ளியில் சிந்தித்தவை மறுபார்வையில் கலந்தாலோசிக்கப்படும். உங்கள் சபை வட்டார மாநாட்டிற்குச் செல்ல வேண்டிய வாரத்தில் அல்லது வட்டாரக் கண்காணியின் சந்திப்பு வாரத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மறுபார்வை இருந்தால் அதை அடுத்த வாரத்திற்கு ஒத்தி​வைக்க வேண்டும்; அதற்கு அடுத்த வார அட்டவணையிலுள்ள நியமிப்புகள் 1-3-ஐ அந்த வாரத்தில் நடத்த வேண்டும். வாராந்தர பைபிள் வாசிப்பிலோ பைபிள் சிறப்புக் குறிப்புகளை அளிப்பதிலோ எந்த மாற்றமும் செய்யக் கூடாது.

அட்டவணை

ஜன. 5 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 1-5

எண் 1: ஆதியாகமம் 3:​1-​15

எண் 2: இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்? (lr-TL அதி. 1)

எண் 3: எது விருதா அல்ல? (1 கொ. 15:⁠58)

ஜன. 12 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 6-​10

எண் 1: ஆதியாகமம் 9:​1-​17

எண் 2: கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்களுக்கு பதில் அளித்தல் (rs-TL பக். 150 பாரா 2–பக். 151 பாரா 3)

எண் 3: அன்பான கடவுள் எழுதிய கடிதம் (lr-TL அதி. 2)

ஜன. 19 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 11-​16

எண் 1: ஆதியாகமம் 14:​1-​16

எண் 2: எல்லாவற்றையும் உண்டாக்கியவர் (lr-TL அதி. 3)

எண் 3: யெகோவா நம்மை எப்படி வனைக்கிறார்? (ஏசா. 64:⁠8)

ஜன. 26 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 17-​20

எண் 1: ஆதியாகமம் 17:​1-​17

எண் 2: நீதியான அரசாங்கத்தை மனிதரால் ஏன் கொண்டுவர முடியவில்லை? (rs-TL பக். 152-​153 பாரா 1)

எண் 3: கடவுளுக்கு பெயர் உண்டு (lr-TL அதி. 4)

பிப். 2 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 21-​24

எண் 1: ஆதியாகமம் 22:​1-​18

எண் 2: ‘இதுதான் என் மகன்’ (lr-TL அதி. 5)

எண் 3: a மற்றவர்களுக்காக அன்பின் கதவைத் திறப்பதற்கான வழிகள் (2 கொ. 6:​11-​13)

பிப். 9 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 25-​28

எண் 1: ஆதியாகமம் 25:​1-​18

எண் 2: பெரிய போதகர் மற்றவர்களுக்காக வேலை செய்தார் (lr-TL அதி. 6)

எண் 3: நிலையான விடுதலைக்கு மனிதர் எடுக்கும் முயற்சிகள் ஏன் தோல்வி அடைகின்றன? (rs-TL பக். 153 பாரா 2–பக். 154 பாரா 1)

பிப். 16 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 29-​31

எண் 1: ஆதியாகமம் 29:​1-​20

எண் 2: நாம் ஏன் ‘கவலைப்படாதிருக்க’ வேண்டும்? (மத். 6:​25)

எண் 3: சொன்ன பேச்சைக் கேட்பது உனக்கு பாதுகாப்பு (lr-TL அதி. 7)

பிப். 23 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 32-​35

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

மார்ச் 2 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 36-​39

எண் 1: ஆதியாகமம் 39:​1-​16

எண் 2: நம்மைவிட உயர்ந்தவர்கள் (lr-TL அதி. 8)

எண் 3: கடவுளுடைய அரசாங்கம்​—⁠மனிதவர்க்கத்துக்கு உண்மையாய் தேவைப்படுவதை அளிப்பதற்கு ஒரே தீர்வு (rs-TL பக். 154 பாரா 2–​பக். 155 பாரா 1)

மார்ச் 9 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 40-​42

எண் 1: ஆதியாகமம் 40:​1-​15

எண் 2: ஆசையாக இருந்தாலும் தவறு செய்யக்கூடாது (lr-TL அதி. 9)

எண் 3: b சுதந்திரமாகச் செயல்படும் மனப்பான்மையைக் குறித்து ஜாக்கிரதை!

மார்ச் 16 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 43-​46

எண் 1: ஆதியாகமம் 44:​1-​17

எண் 2: பிசாசுகளைவிட இயேசு பலமானவர் (lr-TL அதி. 10)

எண் 3: பைபிள் தீர்க்கதரிசனங்கள் முற்றிலும் நம்பத்தக்கவையாக நிரூபிக்கின்றன (rs-TL பக். 155 பாரா. 2-5)

மார்ச் 23 பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 47-​50

எண் 1: ஆதியாகமம் 48:​1-​16

எண் 2: பிசாசுக்கு நாம் அஞ்சி நடுங்க வேண்டுமா?

எண் 3: கடவுளுடைய தூதர்களின் உதவி (lr-TL அதி. 11)

மார்ச் 30 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 1-6

எண் 1: யாத்திராகமம் 1:​1-​19

எண் 2: ஜெபம் செய்ய இயேசு கற்றுக்கொடுக்கிறார் (lr-TL அதி. 12)

எண் 3: நம்முடைய நாளில் கடவுளுடைய ஆவியைக்கொண்டு அற்புதச் சுகப்படுத்துதல் செய்யப்படுகிறதா? (rs-TL பக். 156-​157 பாரா 3)

ஏப். 6 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 7-​10

எண் 1: யாத்திராகமம் 9:​1-​19

எண் 2: இயேசுவின் சீஷர்கள் (lr-TL அதி. 13)

எண் 3: c கலாத்தியர் 6:2-ஐயும் கலாத்தியர் 6:5-ஐயும் எப்படி விளக்கலாம்?

ஏப். 13 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 11-​14

எண் 1: யாத்திராகமம் 12:21-​36

எண் 2: நாம் ஏன் மன்னிக்க வேண்டும் (lr-TL அதி. 14)

எண் 3: இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் நடப்பித்த சுகப்படுத்துதல்களுக்கும் இன்றைய சுகப்படுத்துதல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் (rs-TL பக். 157 பாரா 4–பக். 158 பாரா 2)

ஏப். 20 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 15-​18

எண் 1: யாத்திராகமம் 15:​1-​19

எண் 2: பொய் வணக்கத்தைவிட்டு விலகியிருப்பதில் என்ன உட்பட்டுள்ளது?

எண் 3: அன்பைப் பற்றி ஒரு பாடம் (lr-TL அதி. 15)

ஏப். 27 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 19-​22

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

மே 4 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 23-​26

எண் 1: யாத்திராகமம் 24:​1-​18

எண் 2: எது ரொம்ப முக்கியம்? (lr-TL அதி. 16)

எண் 3: இன்று உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறார்கள்? (rs-TL பக். 158 பாரா 3–பக். 159 பாரா 1)

மே 11 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 27-​29

எண் 1: யாத்திராகமம் 29:​1-​18

எண் 2: சந்தோஷத்திற்கான வழி (lr-TL அதி. 17)

எண் 3: d தவறானவரிடம் உண்மைப்பற்றுறுதி காட்டுவதும் அதனால் வரும் ஆபத்துகளும்

மே 18 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 30-​33

எண் 1: யாத்திராகமம் 31:​1-​18

எண் 2: அற்புத சுகப்படுத்துதலைச் செய்வதற்கான வரங்கள் முதல் நூற்றாண்டில் ஏன் கொடுக்கப்பட்டன? (rs-TL பக். 159 பாரா 2–பக். 160 பாரா 2)

எண் 3: மறக்காமல் நன்றி சொல்கிறாயா? (lr-TL அதி. 18)

மே 25 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 34-​37

எண் 1: யாத்திராகமம் 37:​1-​24

எண் 2: சண்டைபோடுவது சரியா? (lr-TL அதி. 19)

எண் 3: e கண்டிக்காமல் இருப்பது என்றால் என்ன, அதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

ஜூன் 1 பைபிள் வாசிப்பு: யாத்திராகமம் 38-​40

எண் 1: யாத்திராகமம் 40:​1-​19

எண் 2: எல்லாவற்றிலும் முந்திக்கொள்ள உனக்கு ஆசையா? (lr-TL அதி. 20)

எண் 3: எல்லா நோய்களிலிருந்தும் உண்மையான சுகமடைவதற்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (rs-TL பக். 160 பாரா. 3-5)

ஜூன் 8 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 1-5

எண் 1: லேவியராகமம் 4:​1-​15

எண் 2: நாம் பெருமையடிக்கலாமா? (lr-TL அதி. 21)

எண் 3: f கிறிஸ்தவர்கள் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

ஜூன் 15 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 6-9

எண் 1: லேவியராகமம் 8:​1-​17

எண் 2: ‘சுகப்படுத்துதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?’ (rs-TL பக். 160 பாரா 6–பக். 161 பாரா 1)

எண் 3: நாம் ஏன் பொய் சொல்லக்கூடாது? (lr-TL அதி. 22)

ஜூன் 22 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 10-​13

எண் 1: லேவியராகமம் 11:29-​45

எண் 2: நோய்நொடி வருவது ஏன்? (lr-TL அதி. 23)

எண் 3: முழுக்காட்டப்பட்ட சீஷர்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள்

ஜூன் 29 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 14-​16

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

ஜூலை 6 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 17-​20

எண் 1: லேவியராகமம் 19:​1-​18

எண் 2: மனிதராகப் பிறப்பதற்கு முன் நாம் எல்லாரும் ஆவி மண்டலத்தில் இருந்தோமா? (rs-TL பக். 161 பாரா 2–பக். 162 பாரா 3)

எண் 3: திருடவே திருடாதே! (lr-TL அதி. 24)

ஜூலை 13 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 21-​24

எண் 1: லேவியராகமம் 22:17-​33

எண் 2: கெட்டவர்கள் திருந்த முடியுமா? (lr-TL அதி. 25)

எண் 3: உண்மை கிறிஸ்தவர்கள் ஏழைகள்மீது எப்படி அக்கறை காட்டுகிறார்கள்?

ஜூலை 20 பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 25-​27

எண் 1: லேவியராகமம் 25:39-​54

எண் 2: நல்லது செய்வது ஏன் கஷ்டம் (lr-TL அதி. 26)

எண் 3: ஆதாம் பாவஞ்செய்திராவிடில் அவன் முடிவில் பரலோகத்திற்குச் சென்றிருப்பானா? (rs-TL பக். 162 பாரா. 4-5)

ஜூலை 27 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 1-3

எண் 1: எண்ணாகமம் 3:​1-​20

எண் 2: ஏன் சாந்தத்திற்குத் தேவை தன்னடக்கம்

எண் 3: உன் கடவுள் யார்? (lr-TL அதி. 27)

ஆக. 3 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 4-6

எண் 1: எண்ணாகமம் 4:​1-​16

எண் 2: யாருக்குக் கீழ்ப்படிவது என்று தீர்மானிப்பது எப்படி (lr-TL அதி. 28)

எண் 3: உண்மையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் கொண்டிருக்க ஒருவன் பரலோகத்துக்குச் செல்ல வேண்டுமா? (rs-TL பக். 162 பாரா 6-பக். 163 பாரா 2)

ஆக. 10 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 7-9

எண் 1: எண்ணாகமம் 9:​1-​14

எண் 2: பார்ட்டிகளுக்கு போவது கடவுளுக்குப் பிடிக்குமா? (lr-TL அதி. 29)

எண் 3: யெகோவாவுக்கு நம் உண்மைத்தன்மையைக் காட்டுவதற்கான வழிகள்

ஆக. 17 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 10-​13

எண் 1: எண்ணாகமம் 13:17-​33

எண் 2: நம் பயத்தை ஒழிக்க உதவி (lr-TL அதி. 30)

எண் 3: 1 பேதுரு 3:​19, 20 குறிப்பதென்ன? (rs-TL பக். 163 பாரா 3)

ஆக. 24 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 14-​16

எண் 1: எண்ணாகமம் 14:26-​43

எண் 2: கடவுளுடைய வேதத்தில் பிரியமாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (சங். 119:⁠97)

எண் 3: ஆறுதல் எங்கே கிடைக்கும் (lr-TL அதி. 31)

ஆக. 31 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 17-​21

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

செப். 7 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 22-​25

எண் 1: எண்ணாகமம் 22:20-​35

எண் 2: இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார் (lr-TL அதி. 32)

எண் 3: 1 பேதுரு 4:6-⁠ன் பொருளென்ன? (rs-TL பக். 163 பாரா 4)

செப். 14 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 26-​29

எண் 1: எண்ணாகமம் 27:​1-​14

எண் 2: மனக்கட்டுப்பாடு என்பது என்ன, அது ஏன் முக்கியம்? (எபே. 6:4, NW)

எண் 3: இயேசு நம்மை பாதுகாப்பார் (lr-TL அதி. 33)

செப். 21 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 30-​32

எண் 1: எண்ணாகமம் 32:​1-​15

எண் 2: சாகும்போது நமக்கு என்ன நடக்கும்? (lr-TL அதி. 34)

எண் 3: பரலோக வாழ்க்கை எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நம்பிக்கையா? (rs-TL பக். 164 பாரா. 1-3)

செப். 28 பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 33-​36

எண் 1: எண்ணாகமம் 33:​1-​23

எண் 2: நாம் இறந்தால் உயிர்த்தெழுப்பப்படுவோம்! (lr-TL அதி. 35)

எண் 3: கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங் களிலிருந்து மேம்பட்டிருக்கும் விதங்கள்

அக். 5 பைபிள் வாசிப்பு: உபாகமம் 1-3

எண் 1: உபாகமம் 2:​1-​15

எண் 2: பூமியில் நித்திய ஜீவனைப்பற்றி “புதிய ஏற்பாடு” என்ன சொல்கிறது? (rs-TL பக். 165 பாரா 1–பக். 166 பாரா 2)

எண் 3: யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்? எங்கே வாழ்வார்கள்? (lr-TL அதி. 36)

அக். 12 பைபிள் வாசிப்பு: உபாகமம் 4-6

எண் 1: உபாகமம் 4:​15-​28

எண் 2: யெகோவாவையும் அவரது மகனையும் நினைத்துப் பார்ப்பது (lr-TL அதி. 37)

எண் 3: கொஞ்சப் பொருளே போதுமென எப்போது சொல்லலாம்? (நீதி. 15:⁠16)

அக். 19 பைபிள் வாசிப்பு: உபாகமம் 7-​10

எண் 1: உபாகமம் 9:​1-​14

எண் 2: நாம் ஏன் இயேசுவை நேசிக்க வேண்டும்? (lr-TL அதி. 38)

எண் 3: பரலோக வாழ்க்கையின் நம்பிக்கை பைபிளில் எத்தனை ஆட்களுக்கு அளிக்கப்படுகிறது? (rs-TL பக். 166 பாரா. 3-4)

அக். 26 பைபிள் வாசிப்பு: உபாகமம் 11-​13

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

நவ. 2 பைபிள் வாசிப்பு: உபாகமம் 14-​18

எண் 1: உபாகமம் 15:​1-​15

எண் 2: கடவுளுக்குப் பயப்படுவது எதை உட்படுத்துகிறது?

எண் 3: கடவுள் தன் மகனை நினைத்துப் பார்க்கிறார் (lr-TL அதி. 39)

நவ. 9 பைபிள் வாசிப்பு: உபாகமம் 19-​22

எண் 1: உபாகமம் 22:​1-​19

எண் 2: கடவுளை எப்படி சந்தோஷப்படுத்துவது (lr-TL அதி. 40)

எண் 3: 1,44,000 பேர் மாம்சத்தின்படியான யூதர் மாத்திரமா? (rs-TL பக். 166 பாரா 5–பக். 167 பாரா 2)

நவ. 16 பைபிள் வாசிப்பு: உபாகமம் 23-​27

எண் 1: உபாகமம் 25:​1-​16

எண் 2: கடவுளை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள் (lr-TL அதி. 41)

எண் 3: g எவற்றையெல்லாம் நாம் பரிசுத்தமாகக் கருத வேண்டும்?

நவ. 23 பைபிள் வாசிப்பு: உபாகமம் 28-​31

எண் 1: உபாகமம் 30:​1-​14

எண் 2: நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்? (lr-TL அதி. 42)

எண் 3: ‘திரள்கூட்டத்தாருக்கு’ பைபிள் என்ன நம்பிக்கை அளிக்கிறது? (rs-TL பக். 167 பாரா. 3–5)

நவ. 30 பைபிள் வாசிப்பு: உபாகமம் 32-​34

எண் 1: உபாகமம் 32:​1-​21

எண் 2: “யெகோவாவின் மகா நாள்” என்றால் என்ன? (செப். 1:​14, NW)

எண் 3: நம் சகோதர சகோதரிகள் யார்? (lr-TL அதி. 43)

டிச. 7 பைபிள் வாசிப்பு: யோசுவா 1-5

எண் 1: யோசுவா 5:​1-​15

எண் 2: நம் நண்பர்கள் கடவுளை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும் (lr-TL அதி. 44)

எண் 3: கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன? அது நமக்கு வேண்டும் என்று எப்படி காட்டலாம்? (lr-TL அதி. 45)

டிச. 14 பைபிள் வாசிப்பு: யோசுவா 6-8

எண் 1: யோசுவா 8:​1-​17

எண் 2: தண்ணீர் உலகை அழித்தது​—⁠மறுபடியும் அழிக்குமா? (lr-TL அதி. 46)

எண் 3: பிரசங்கி 7:​21, 22-லுள்ள அறிவுரை ஏன் நடைமுறையானது?

டிச. 21 பைபிள் வாசிப்பு: யோசுவா 9-​11

எண் 1: யோசுவா 9:​1-​15

எண் 2: அர்மகெதோன் சீக்கிரம் வருமென எப்படி சொல்லலாம் (lr-TL அதி. 47)

எண் 3: கடவுளுடைய சமாதானமான புதிய உலகம்​—⁠நீ எப்படி அங்கு வாழலாம் (lr-TL அதி. 48)

டிச. 28 பைபிள் வாசிப்பு: யோசுவா 12-​15

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

[அடிக்குறிப்புகள்]

a சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

b சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

c சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

d சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

e சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

f சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

g சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள். மூப்பருக்கு அல்லது உதவி ஊழியருக்கு நியமித்தால் நல்லது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்