ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: பைபிள் படிப்பு நடத்துவதற்கு தயார் செய்வது எப்படி? ஆகஸ்ட் 2004 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 1-ன் அடிப்படையில் பேச்சு. இந்தப் பேச்சின் முடிவில், பைபிள் படிப்பை நடத்த அவசர அவசரமாக ஒரு பிரஸ்தாபி தயாரிப்பதைப் போல ஒரு நடிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு வேறொரு பிரஸ்தாபி நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள ஆலோசனைகள் சிலவற்றைப் பார்த்துத் தயாரிப்பதுபோல் ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: “தொடர்ந்து பிரசங்கியுங்கள்.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
ஜூன் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: நற்செய்தியின் நடைமுறைப் பயனை சிறப்பித்துக் காட்டுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 159-ன் அடிப்படையில் பேச்சும் கலந்தாலோசிப்பும். சபையின் பிராந்தியத்தில் உள்ளவர்கள் தற்போது எதைக் குறித்து அதிகமாக கவலைப்படுகிறார்கள் என சபையாரைச் சொல்லச் சொல்லுங்கள். இந்த விஷயங்களுக்குப் பதில் அளிக்க எத்தகைய அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கேளுங்கள்.
20 நிமி: “குடும்பமாகத் தப்பிப்பிழைக்க தயாராகிறீர்களா?”b நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
ஜூன் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஜூலை மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிட்டு அதை அளிக்கும் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: ஒழுங்கான பயனியர் ஊழியம் வாழ்க்கையை வளமாக்குகிறது. 2008, ஜனவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 17-19-ன் அடிப்படையில் பேச்சு. ஒழுங்கான பயனியர்கள் இருந்தால் அவர்களில் இந்த ஊழியத்தை புதிதாக செய்ய ஆரம்பித்திருக்கும் பிரஸ்தாபி ஒருவரையும் பல ஆண்டுகளாக செய்துவருகிற பிரஸ்தாபி ஒருவரையும் பேட்டி காணலாம். இந்த விதமான அருமையான ஊழியத்தில் ஈடுபட்டிருப்பது தங்கள் வாழ்க்கையை எப்படி வளமாக்கியிருக்கிறது என அவர்களைச் சொல்லச் சொல்லுங்கள்.
15 நிமி: கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் பைபிளைப் பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 143-4-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பொதுவாக பிராந்தியத்தில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பிரஸ்தாபி பைபிளைப் பயன்படுத்தி பதில் அளிப்பதைப் போன்ற சுருக்கமான நடிப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஜூன் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூன் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தையும் ஜூலை-செப்டம்பர் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 62, பாரா 4 முதல் பக்கம் 64-ன் முடிவுரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். தகவலை சபை பிராந்தியத்திற்கு பொருத்துங்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதோ சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதோ மற்றவர்களை உரையாடலில் உட்படுத்தி அவர்களையும் பேச வைப்பதில் திறமைசாலியாக விளங்கும் ஒரு பிரஸ்தாபியை சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
15 நிமி: ஒரு பைபிள் படிப்பை நீங்கள் ஆரம்பிக்க முடியுமா? சபையாருடன் கலந்தாலோசிப்பு. பைபிள் படிப்புகளைத் தொடங்கும் நோக்கத்துடன் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளியுங்கள். அந்தப் புத்தகத்திலுள்ள சிறப்பம்சங்களைப்பற்றிச் சொல்லுங்கள். முதல் சந்திப்பின்போது ஆர்வம் காட்டியவர்களை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது, பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டவர்களை மீண்டும் சந்திக்கச் செல்லும்போது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஆர்வம் காட்டுபவர்களைச் சந்திக்கும்போது இந்தப் புத்தகத்தை எப்படி அளிக்கலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள். (km-TL 8/07 பக். 3; km-TL 1/06 பக். 3-6-ஐக் காண்க.) ஓரிரு அணுகுமுறைகளை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
ஜூலை 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “ஊழியத்தில் பிற மொழி பேசுவோரை சந்திக்கையில்.”c ஊழியக் கண்காணி கையாள வேண்டும். பாரா 2-ஐ சிந்திக்கும்போது உங்கள் சபை பிராந்தியத்தில் ஊழியம் செய்கிற பிற மொழி தொகுதிகளோ சபைகளோ இருந்தால் அதைத் தெரிவியுங்கள். ஊழியத்தில் அவற்றோடு ஒத்துழைப்பதற்கு உதவியாக ஏதேனும் முக்கிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அவற்றைச் சிந்தியுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.