உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/08 பக். 1
  • தொடர்ந்து பிரசங்கியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொடர்ந்து பிரசங்கியுங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
  • இதே தகவல்
  • நற்செய்தியை அறிவிப்பதில் இடைவிடாதிருத்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • எப்படி அவர்கள் கேள்விப்படுவார்கள்?
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • நம்முடைய ஊழியத்தில் விடாமற் தொடர்ந்திருத்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 6/08 பக். 1

தொடர்ந்து பிரசங்கியுங்கள்

1 நாம் அடிக்கடி நம்முடைய பிராந்தியத்தில் முழுமையாக ஊழியம் செய்து முடிக்கிறபோதிலும் வெகு சிலரே நற்செய்திக்குச் செவிசாய்ப்பதாக அவ்வப்போது நினைக்கலாம். என்றாலும், நாம் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன.​—⁠மத். 28:19, 20.

2 சாட்சியாக: இந்த ‘உலகத்தின் முடிவை’ சுட்டிக்காட்டும் கூட்டு அடையாளத்தில் ராஜ்யத்தைப்பற்றிப் பிரசங்கிப்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்குமென இயேசு முன்னறிவித்தார். ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி, “சகல ஜாதிகளுக்கும் சாட்சியாக” பிரசங்கிக்கப்படும் என்று அவர் சொன்னார். (மத். 24:3, 14) நாம் பிரசங்கிப்பதை மக்கள் பார்க்கும்போது, அதுவே அவர்களுக்குப் பலமான சாட்சியாக அமைகிறது. நாம் சொன்னதைக் கேட்காவிட்டாலும் நாம் அந்தப் பகுதியைவிட்டுப் போன பிறகும், மணிக்கணக்காக அல்லது நாள்கணக்காக சிலர் நம்மைப்பற்றிப் பேசலாம். ஊழியம் செய்வதற்கான காரணங்களை நாம் புரிந்திருப்பது விடாமுயற்சியுடன் அதில் ஈடுபட நமக்கு உதவுகிறது. மற்றவர்களுக்கு சாட்சி கொடுத்து, வரவிருக்கும் அழிவைப்பற்றி எச்சரிப்பதன்மூலம் பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் நாம் பங்குகொள்கிறோம்; இவ்வாறு யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறோம்.​—⁠2 தெ. 1:6–10.

3 விடாமுயற்சி தேவை: மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அவர்களுடைய நேரத்தை உறிஞ்சிக்கொள்ளும் எத்தனையோ காரியங்கள் இன்று இருக்கின்றன. எனவே, ஆரம்பத்தில் அவர்கள் காட்டும் ஆர்வத்தைத் தொடர்ந்து வளர்ப்பதற்கு விடாமுயற்சி நமக்குத் தேவைப்படுகிறது. ஒரு பெண்மணிக்கு வாரம் தவறாமல் ஒரு வருடம் மறுசந்திப்பு செய்யப்பட்டது. அதற்குப் பிறகுதான் பைபிளைப்பற்றிப் பேசுவதற்கு சாட்சிகளை அவள் வீட்டுக்குள் அழைத்தாள். அவள் கேட்ட விஷயங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்ததால், பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டாள்; கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தாள், ஞானஸ்நானம் பெறுவதற்கும் விரைவிலேயே விருப்பம் தெரிவித்தாள்.

4 உலக நிலைமைகளும் விரைவாக மாறிவருகின்றன, மக்களின் மனநிலைகளும் மாறுகின்றன. முன்பு நம் செய்திக்கு செவிசாய்க்காதவர்கள் இப்போது நாம் பகிர்ந்துகொள்ளும் புத்துணர்வூட்டும் எதிர்கால நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளலாம். ராஜ்ய செய்தியை ஒரே ஒருவர் ஏற்றுக்கொண்டால்கூட நம் விடாமுயற்சிக்குப் பலன் கிடைத்ததாக சொல்லலாம்.

5 உலகில் ‘செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்கள்’ நாளுக்குநாள் பெருகி வருகிறார்கள். (எசே. 9:4) நீதியை நேசிப்போர் ராஜ்ய செய்திக்கு செவிசாய்க்கிறார்கள் என்பதை பிரசங்க வேலையின் பலன்கள் காட்டுகின்றன. (ஏசா. 2:2, 3) ஆகவே, ‘நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவிப்பதில்’ விடாமுயற்சியுடன் ஊக்கமாய் தொடர்ந்து பிரசங்கிப்போமாக.​—⁠ஏசா. 52:7; அப். 5:42.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்