ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: எந்தச் சோதனையையும் நம்மால் சமாளிக்க முடியும்! 2005, ஜூன் 15, காவற்கோபுர இதழில் பக்கங்கள் 30-1-ன் அடிப்படையில் பேச்சு. தாங்கள் எதிர்ப்பட்ட ஒரு பிரச்சினையைச் சமாளிக்க யெகோவா தங்களுக்கு எப்படி உதவினார் என்பதை சொல்வதற்கு பிரஸ்தாபிகள் சிலரை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: இந்தக் கோடையில் உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? சபையாருடன் கலந்தாலோசிப்பு. துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கான தகுதிகளைக் குறித்து ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 112-13-ல் கொடுக்கப்பட்டுள்ள தகவலைச் சிந்திக்கவும். தங்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து துணைப் பயனியர் ஊழியம் செய்தவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களைச் சொல்லும்படிக் கேளுங்கள். பள்ளி விடுமுறையின்போது துணைப் பயனியர் ஊழியம் செய்தவர்களிடம், மற்றவர்கள் எவ்வாறு தங்களுக்கு ஊக்கத்தையும் உதவியையும் அளித்தார்கள் என்பதைச் சொல்லும்படிக் கேளுங்கள். யெகோவாவிடம் நெருங்கி வர துணைப் பயனியர் ஊழியம் அவர்களுக்கு எப்படி உதவியது? அவர்கள் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்? இந்தக் கோடையில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதைக் குறித்து சிந்திக்கும்படி, ஊழியம் செய்யத் தகுதி பெற்றுள்ள அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
மே 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைச் சிந்தியுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: ‘இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று . . . அறிந்திருங்கள்.’a மூப்பர் கையாள வேண்டும். பிராந்தியத்தில் பொதுவாக எதிர்ப்படும் கேள்விக்கு எவ்வாறு கனிவுடன் பதிலளிப்பது என்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள்.
மே 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். மே மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: ‘என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்.’b நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “நீங்களும் ஐசுவரியவான் ஆகலாம்.”c ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்வதற்கான தகுதிகளைக் குறித்து ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 113-14-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 1 முதல் ஒழுங்கான பயனியர் ஊழியத்தைத் துவங்க விரும்புகிறவர்கள் தங்கள் விண்ணப்பத்தை முடிந்தளவு சீக்கிரமாய்க் கொடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
ஜூன் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: உண்மையுள்ளவர்கள் அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். (நீதி. 28:20) செயலருடைய பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஊழியத்தை அதிகரிக்க சபையார் எடுத்த முயற்சிகளை யெகோவா எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி, சபையாரைப் பாராட்டவும். எத்தனை பேர் துணைப் பயனியர் ஊழியம் செய்தார்கள், எத்தனை புதிய பைபிள் படிப்புகள் துவங்கப்பட்டன என்பதையும் ஊழியத்தால் விளைந்த பிற முன்னேற்றங்களையும் பற்றிச் சொல்லுங்கள். நினைவுநாள் ஆசரிப்பு சம்பந்தமாகவும் அப்போது வினியோகிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் சம்பந்தமாகவும் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி சபையாரிடம் கேளுங்கள். ஊழியத்தில் கிடைத்த சிறந்த அனுபவங்களை மீண்டும் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யலாம். தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைச் சொல்லும்படி துணைப் பயனியர்களாகச் சேவை செய்த இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைச் சுருக்கமாகப் பேட்டி காணலாம்.
15 நிமி: “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருங்கள்.”d வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காக எப்படி, எப்போது தயாரிக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.