ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: ‘நன்றியறிதல் உள்ளவர்களாய் இருங்கள்.’a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “துக்கப்படுவோருக்கு ஆறுதல் அளியுங்கள்.”b அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்த ஒருவருக்கு ஆறுதல் அளிப்பது எந்தளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
ஏப்ரல் 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பத்திரிகையோடு பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? துண்டுப்பிரதியையும் சேர்த்துப் பெற்றுக்கொண்டவர்களை மீண்டும்போய் சந்திக்கும்போது என்ன சொல்லலாம் என்பதை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் முதல் ஐந்து பாராக்களைச் சிந்தித்துவிட்டு, பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றிச் சொல்லுங்கள். நினைவுநாள் ஆசரிப்புக்கு அல்லது விசேஷப் பேச்சுக்கு வந்தவர்களிடம் இன்னும் பைபிள் படிப்பு ஆரம்பிக்காதிருந்தால் அவர்களிடமும் பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றிச் சொல்லத் தவறாதீர்கள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும் ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் எடுத்து வரும்படி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள். சபையில் கலந்தாலோசிப்பதற்காக, பிராந்தியத்திற்குப் பொருத்தமான அணுகுமுறைகளைத் தயாரித்து வரும்படியும் அவர்களிடம் சொல்லுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “எப்போது பைபிளிலிருந்து வாசிப்பது, எப்படிப் பிரசுரத்தை அளிப்பது?”c தகுதிவாய்ந்த மூப்பர் இதை நடத்த வேண்டும். உங்கள் பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்து இதை எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் காட்டுங்கள்.
ஏப்ரல் 28-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கைகளைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தையும், ஏப்ரல்-ஜூன் விழித்தெழு!-வையும் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்; உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு எந்தக் கட்டுரை, ஏன் அதிக ஆர்வமூட்டுவதாய் இருக்கும் என்பதை சபையாரிடம் கேளுங்கள். தாங்கள் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கும் கட்டுரைகளுக்கான அணுகுமுறைகளைப்பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். உரையாடலைத் துவங்க என்ன கேள்வியைக் கேட்கலாம்? கட்டுரையிலுள்ள எந்த வசனத்தை வாசித்துக் காட்டலாம்? அந்த வசனத்தை எப்படி அந்தக் கேள்விக்கான பதிலுடன் பொருத்திக் காட்டலாம்? சபையார் சொல்லும் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு பத்திரிகையையும் அளிப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு.
20 நிமி: “அவருடைய ‘அடிச்சுவடுகளை நெருங்கப் பின்பற்றுங்கள்.’”d நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, முடிந்தவரை அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களைப்பற்றிக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
மே 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: யெகோவா உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். அக்டோபர் 15, 2005, காவற்கோபுரம், பக்கங்கள் 8-11-ன் அடிப்படையில் ஊக்கமூட்டும் பேச்சு.
20 நிமி: “ஊழியராய் முன்னேறுங்கள்.”e பாரா 3-ஐ சிந்திக்கும்போது, ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கங்கள் 6-8-ல் “முழுமையாக பயனடைவது எப்படி” என்ற உபதலைப்பின்கீழ் காணப்படும் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.