ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூலை 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஜூலை மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: எது உண்மையான சந்தோஷத்தைத் தரும்? மே 15, 2006, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 28-9-லுள்ள, பாராக்கள் 11-12-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். சிற்றின்பங்களுக்கு அல்லது உலக வேலைக்கு முதலிடம் கொடுக்காமல் ஊழியத்திற்கு முதலிடம் கொடுக்கும் ஒருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ஆன்மீக இலக்குகளை எட்டுவதற்கு அவரை எது தூண்டியது? இது எப்படி அவருக்கு சந்தோஷத்தை அளித்தது?
20 நிமி: கேள்விப் பெட்டி. இதை ஒரு மூப்பர் நடத்தவேண்டும். முழு கட்டுரையையும் வாசித்துக் கலந்தாலோசிக்க வேண்டும். ஜூன் 8, 2005, விழித்தெழு!-வில் பக்கங்கள் 23-24-ல் “பித்தலாட்டம் செய்வது, மூடி மறைப்பது ஆகியவற்றால் வரும் ஆபத்துகள்” மற்றும் “இன்டர்நெட்டுக்குப் பதிலாக நேருக்கு நேர்” என்ற உபதலைப்பிலுள்ள குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 91, முடிவு ஜெபம்.
ஜூலை 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: சபையின் சமாதானத்தையும் சுத்தத்தையும் காத்துக்கொள்ளுதல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 144-லிருந்து பக்கம் 150-லுள்ள உபதலைப்பு வரையிலும் உள்ள பகுதியின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: “எல்லா வகை மனிதரும் இரட்சிக்கப்படுவார்கள்”a இந்தப் பகுதி, உங்களுடைய பிராந்தியத்திற்கு எப்படி நடைமுறையில் ஒத்துப்போகிறது என்பதைக் காட்டுங்கள்.
பாட்டு 112, முடிவு ஜெபம்.
ஜூலை 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு விதங்களில், ஆகஸ்ட் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஆகஸ்ட் விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள்.
20 நிமி: ஒருவரையொருவர் உபசரியுங்கள். ஜனவரி 15, 2005, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 21-3-ன் அடிப்படையில் பேச்சு. உபசரிப்பதில் சிறந்து விளங்கும் ஓரிரு பிரஸ்தாபிகளிடம் சுருக்கமாக பேட்டி காணுங்கள். உபசரிப்பைக் காட்டுவதற்கு அவர்கள் என்னென்ன முயற்சிகளை எடுத்தார்கள்? இதன் விளைவாக அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்? வேறு மொழி பேசும் சபைகளோடு பிராந்தியத்தைப் பகிர்ந்துகொள்ளும் நகரத்திலுள்ள சபைகள், உபசரிப்பு பற்றிய பேச்சிற்குப் பதிலாக, SB:SSB ஏப்ரல் 16, 2007 தேதியிட்ட கடிதத்தைக் காலந்தாலோசிக்க வேண்டும். ஊழியக் கண்காணி இதைக் கையாள வேண்டும். தொடர்ந்து தேவைப்படும் பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை மறுபார்வைச் செய்து மாற்ற வேண்டும். இந்த ஆலோசனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதைப் புத்தகப் படிப்பு கண்காணிகள் கவனிக்க வேண்டும்; கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல் மற்ற மொழி பேசும் பைபிள் படிப்புகளை ஒப்படைக்குமாறும் உற்சாகப்படுத்த வேண்டும்.
15 நிமி: நம் வேலை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகையில். இந்தப் பகுதியை தகுதி வாய்ந்த ஒரு மூப்பர் கையாள வேண்டும். SA:LLC ஏப்ரல் 28, 2003 தேதியிட்ட கடிதத்தோடு அனுப்பப்பட்ட குறிப்புதாளை மறுபார்வை செய்யுங்கள். இதை உங்கள் பிராந்தியத்திற்கு எப்படி பொருத்தலாம் என்பதைக் காட்டுங்கள். மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களின் மனதைப் புன்படுத்தும் என்ன வாக்கியங்களைப் பிரஸ்தாபிகள் பொதுவாகப் பயன்படுத்துகிறார்கள்? ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பிராந்தியத்தில் கூட்டம்கூட்டமாக செல்லாமல் இருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்துங்கள்.
பாட்டு 204, முடிவு ஜெபம்.
ஜூலை 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜுலை மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள்.
15 நிமி: சுய தியாகம் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தருகிறது. நவம்பர் 15, 2005, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 8-9-ன் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.”b பாரா 3-ஐ சிந்திக்கையில், திடீரென்று சோதனை தாக்கியபோது அதைச் சமாளிக்க பலமான விசுவாசம் எப்படி உதவியது என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். அவர்களில் ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
பாட்டு 13, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “நாம் ஏன் திரும்பத் திரும்ப சந்திக்கிறோம்”c பாரா 5-ஐ கலந்தாலோசிக்கையில், ஆரம்பத்தில் சத்தியத்தை எதிர்த்தவர்கள் அல்லது ஆர்வம் காட்டாமலிருந்தவர்கள் பிறகு அதில் ஆர்வம் காட்டியதற்கு என்ன காரணம் என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 211, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.