அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்கள் பைபிளிலிருந்து கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கும் விதத்தில், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் அளிக்கப்படும். வீட்டுக்காரருடைய மொழியில் இப்புத்தகம் இல்லாவிட்டால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியோடு சேர்த்து அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். அதற்குப் பதிலாக என்னுடைய பைபிள் கதை புத்தகம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகிய புத்தகங்கள் கையிருப்பில் இருந்தால் அவற்றையும் அளிக்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். சபையில் அப்படிப்பட்ட புத்தகங்கள் எதுவும் இல்லாவிட்டால், அறிவு புத்தகத்தையோ விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டையோ அளிக்கலாம்.
◼ டிசம்பர் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதம்.
◼ இந்த மாத நம் ராஜ்ய ஊழிய பிரதியின் உட்சேர்க்கையில், “2007 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” உள்ளது; இதை 2007-ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்குப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
◼ ஜனவரி மாத ஊழியக் கூட்டத்தில் இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோ பற்றி கலந்தாலோசிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த சிடி-யை முடிந்தளவு சீக்கிரத்தில் சபை மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
◼ 2007-ம் ஆண்டின் நினைவுநாள் ஆசரிப்புக் காலத்தில் விசேஷப் பேச்சு, ஏப்ரல் 15, 2007, ஞாயிற்றுக்கிழமை அன்று கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். சபைகளில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தாலோ, அந்த வாரக் கடைசியில் மாநாடு ஏதாவது இருந்தாலோ, அதற்கு மறுவாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதிக்கு முன் எந்தச் சபையிலும் விசேஷப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.