2007 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
அறிவுரைகள்
2007-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பிரசுரங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [w-TL], தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனயுங்டைகள் [be-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL].
பாட்டு, ஜெபம், வரவேற்புரையுடன் பள்ளியை சரியான நேரத்தில் ஆரம்பித்து கீழ்க்காணும் குறிப்புகளின்படி நடத்த வேண்டும். ஒரு பேச்சு முடிந்த பின்னர் அடுத்த பேச்சு என்னவென்று பள்ளிக் கண்காணி அறிவிப்பார்.
பேச்சு பண்பு: 5 நிமிடங்கள். பள்ளிக் கண்காணி, துணை ஆலோசகர் அல்லது தகுதி பெற்ற மற்றொரு மூப்பர் ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் ஒரு பேச்சு பண்பைப் பற்றி பேசுவார். (மூப்பர்கள் குறைவாக இருக்கும் சபைகளில் தகுதி பெற்ற உதவி ஊழியர்களைப் பயன்படுத்தலாம்.)
பேச்சு நியமிப்பு எண் 1: 10 நிமிடங்கள். இதை தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; இது, காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள பகுதியாகவோ, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகத்திலுள்ள பகுதியாகவோ இருக்கும். இதை பத்து நிமிட போதனா பேச்சாகக் கொடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல; மாறாக சபைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள மையப்பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பேச்சைக் கொடுக்க நியமிக்கப்படும் சகோதரர்கள், உரிய நேரத்தில் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் இவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 10 நிமிடங்கள். இதை, தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; முதல் ஐந்து நிமிடத்தில் அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பொருத்திக் காட்ட வேண்டும். அந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்புப் பகுதியில் எங்கிருந்தும் அவர் குறிப்புகளைக் கூறலாம். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு பயனுள்ளது என்பதை சபையார் புரிந்துகொள்ள உதவுவதே இதன் முக்கியக் குறிக்கோளாகும். தான் தயாரித்திருக்கும் சிறப்புக் குறிப்புகளைப் பேச்சாளர் ஐந்து நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும். ஏனெனில் சபையார் குறிப்புகளைச் சொல்வதற்கு ஐந்து நிமிடங்களை அவர் ஒதுக்கியாக வேண்டும். பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து தங்களுக்கு ஆர்வமூட்டிய விஷயத்தையும் அதன் பலன்களையும் சுருக்கமாக (30 விநாடிகள் அல்லது குறைவாக) சொல்லுமாறு அவர் சபையாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குப் பிரிந்து செல்லும்படி பள்ளிக் கண்காணி சொல்வார்.
பேச்சு நியமிப்பு எண் 2: 4 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக. இது சகோதரர்களுக்குரிய வாசிப்பு நியமனம். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல் நியமிக்கப்பட்ட பகுதியை மாணாக்கர் வாசிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல், சரளம், தகுந்த இடங்களில் அழுத்தம், குரல் வேறுபாடு, பொருத்தமான இடங்களில் நிறுத்தம், இயல்பு போன்ற குணங்களோடு வாசிக்க மாணாக்கருக்கு உதவுவதே பள்ளிக் கண்காணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த நியமிப்பை பெறும் சகோதரிகள், ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் பக்கம் 82-ல் உள்ள பட்டியலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார்கள் அல்லது அவற்றில் ஒன்று அவர்களுக்கு நியமிக்கப்படும். கொடுக்கப்பட்ட மையப்பொருளை, சபையின் பிராந்தியத்திற்கு ஏற்றதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கும் வெளி ஊழியத்தின் ஓர் அம்சத்திற்கு மாணாக்கர் பொருத்த வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து அந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்பட்டிருக்கும் பேச்சுகளை புதிய மாணாக்கர்களுக்கு நியமிக்க வேண்டும். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வேதவசனங்களைப் பகுத்தாராயவும் பேச்சின் முக்கிய குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளிக் கண்காணி முக்கியமாக கவனிப்பார். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணியே நியமிப்பார்.
பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். நியமிக்கப்பட்ட மையப்பொருளை மாணாக்கர் படிப்படியாக விரிவாக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். இது சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ராஜ்ய மன்றத்தில் உள்ளவர்களிடம் நேரடியாகப் பேசுவதைப்போல் இதைக் கொடுக்க வேண்டும். சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-ல் சொல்லப்பட்டதற்கு இசையவே எப்போதும் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும். பொருத்தமான சந்தர்ப்பங்களில் பள்ளிக் கண்காணி பேச்சு எண் 4-ஐ ஒரு சகோதரருக்கு நியமிக்கலாம். நட்சத்திர குறியிடப்பட்ட (*) பொருளை, சபையாரைப் பார்த்துப் பேசுவதுபோல் கொடுப்பதற்காக சகோதரர்களுக்கு மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.
ஆலோசனை: 1 நிமிடம். மாணாக்கர் எந்தப் பேச்சு பண்பில் உழைக்கிறாரென பள்ளிக் கண்காணி முன்கூட்டியே அறிவிக்க மாட்டார். பேச்சு எண் 2, 3, 4 ஆகியவற்றிற்குப் பிறகு, பேச்சில் கவனித்த பாராட்டத்தக்க விஷயங்களைப் பற்றி கட்டியெழுப்பும் விஷயங்களை அவர் கூறுவார். ‘நன்றாயிருந்தது’ என்று வெறுமனே சொல்வது அவருடைய நோக்கமல்ல; மாறாக, பேச்சின் அந்த விஷயம் நன்றாயிருந்ததற்கான குறிப்பிட்ட காரணங்களிடம் கவனத்தைத் திருப்ப வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரின் தேவைக்கும் ஏற்றவாறு உற்சாகப்படுத்தும் வகையில் கூடுதலான ஆலோசனைகளைக் கூட்டத்திற்குப் பிறகோ மற்றொரு சமயத்திலோ தனிப்பட்ட விதமாக கொடுக்கலாம்.
நேரம்: ஆலோசனை கூறுபவரின் குறிப்புகள் உட்பட எந்தப் பேச்சையும் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். பேச்சு நியமிப்பு எண்கள் 2, 3, 4-க்குரிய நேரம் முடிந்ததும் சாதுரியத்துடன் அவற்றை நிறுத்த வேண்டும். பேச்சு பண்பு பற்றிய ஆரம்ப பேச்சு, நியமிப்பு எண் 1, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொடுக்கும் சகோதரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருமே குறித்த நேரத்தில் பேச்சை முடிப்பதற்கு கவனமாயிருக்க வேண்டும். மொத்த நிகழ்ச்சி: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
ஆலோசனை படிவம்: பாடப்புத்தகத்தில்.
துணை ஆலோசகர்: மற்றொரு தகுதி வாய்ந்த மூப்பர் இருந்தால், பள்ளிக் கண்காணியோடுகூட துணை ஆலோசகராக நியமிப்புகளைக் கையாள மூப்பர் குழு அவரைத் தெரிவு செய்யலாம். சபையில் மூப்பர்கள் நிறைய பேர் இருந்தால், இந்நியமிப்புக்கென தகுதி வாய்ந்த வெவ்வேறு மூப்பரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யலாம். நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்களுக்கு, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஆலோசனை கொடுப்பதே துணை ஆலோசகருடைய பொறுப்பு. சக மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பேச்சிற்குப் பிறகும் அவர் அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியதில்லை.
வாய்மொழி மறுபார்வை: 30 நிமிடங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கண்காணி வாய்மொழி மறுபார்வையை நடத்துவார். அதற்கு முன்பு மேலே சொல்லப்பட்டபடி, பேச்சு பண்பு பற்றி கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படும். நடப்பு வாரம் உட்பட முந்தைய இரண்டு மாதங்கள் பள்ளியில் சிந்தித்தவை வாய்மொழி மறுபார்வையில் கலந்தாலோசிக்கப்படும். வாய்மொழி மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபை வட்டார மாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தால், மறுபார்வையை (அட்டவணைப்படி அந்த வாரத்தில் இருந்திருக்கும் பிற நியமிப்புகளுடன் சேர்த்து), மாநாட்டைத் தொடர்ந்து வருகிற வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்; மாநாட்டைத் தொடர்ந்து வருகிற வார அட்டவணையை மாநாட்டு வாரத்தில் பின்பற்ற வேண்டும். வாய்மொழி மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபைக்கு வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தால், அந்த வார அட்டவணைப்படியே பாட்டு, பேச்சு பண்பு, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். அதற்கடுத்த வார அட்டவணைப்படி போதனா பேச்சை (பேச்சு பண்பை கலந்தாலோசித்த பின் கொடுக்கப்படும் பேச்சை) கொடுக்க வேண்டும். வட்டாரக் கண்காணியின் சந்திப்புக்கு அடுத்து வரும் வாரத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், அந்த வார அட்டவணைப்படியே பேச்சு பண்பு பற்றி கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படும்; பின்பு முந்தைய வார வாய்மொழி மறுபார்வை கலந்தாலோசிக்கப்படும்.
அட்டவணை
ஜன. 1 பைபிள் வாசிப்பு: ஏசாயா 24-28 பாட்டு 33
பேச்சு பண்பு: தகவலின் நடைமுறை பொருத்தம் (be-TL பக். 158 பாரா. 2-4)
எண் 1: மாணாக்கர் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 43 பாரா 1–பக். 44 பாரா 3)
எண் 3: கருச்சிதைவு—ஏன் செய்யக்கூடாது? (rs-TL பக். 25-6 பாரா 4)
எண் 4: நாம் எப்படி ‘கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ள’ முடியும்? (ரோ. 13:14)
ஜன. 8 பைபிள் வாசிப்பு: ஏசாயா 29-33 பாட்டு 42
பேச்சு பண்பு: நடைமுறைப் பயனை காண பிறருக்கு உதவுதல் (be-TL பக். 159 பாரா. 1-4)
எண் 1: பேச்சுப் பொருளும் பேச்சு அமைப்பும் (be-TL பக். 44 பாரா 4–பக். 46 பாரா 2)
எண் 3: a ‘என்னுடைய உடலைப் பாதிக்கும் காரியங்களைப் பற்றித் தீர்மானிக்க எனக்கு உரிமையுண்டு’ என்று சொல்பவருக்கு விடையளித்தல் (rs-TL பக். 26 பாரா 5)
எண் 4: பிள்ளைகளை யெகோவா நேசிக்கிறாரென்று நமக்கு எப்படித் தெரியும்
ஜன. 15 பைபிள் வாசிப்பு: ஏசாயா 34-37 பாட்டு 222
பேச்சு பண்பு: வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் (be-TL பக். 160 பாரா. 1-3)
எண் 1: நன்மை, தீமை பற்றிய இயேசுவின் கண்ணோட்டத்தை வளருங்கள் (w-TL05 1/1 பக். 9-10 பாரா. 11-15)
எண் 3: உண்மையான அன்பை வளர்ப்பது எப்படி
எண் 4: ஆதாமும் ஏவாளும்—உண்மையிலேயே சரித்திரப்பூர்வ மக்களா? (rs-TL பக். 27-8)
ஜன. 22 பைபிள் வாசிப்பு: ஏசாயா 38-42 பாட்டு 61
பேச்சு பண்பு: எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மொழி (be-TL பக். 161 பாரா. 1-4)
எண் 1: எதிர்ப்பைக் கண்டு அஞ்சாதிருங்கள் (w-TL05 1/1 பக். 15-16 பாரா. 16-18)
எண் 3: b ‘ஆதாமின் பாவம், கடவுளுடைய சித்தமாயிருந்தது’ என்று சொல்பவருக்கு விடையளித்தல் (rs-TL பக். 29 பாரா. 1-2)
எண் 4: மற்றவர்களின் உள்நோக்கத்தை நாம் ஏன் சந்தேகிக்கக் கூடாது
ஜன. 29 பைபிள் வாசிப்பு: ஏசாயா 43-46 பாட்டு 113
பேச்சு பண்பு: பல்சுவையும் சரியான வார்த்தையும் (be-TL பக். 161 பாரா 5–பக். 162 பாரா 4)
எண் 1: யெகோவாவின் தீர்ப்புகளை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? (w-TL05 2/1 பக். 23-4 பாரா. 4-9)
எண் 3: மூதாதையர் வணக்கம் ஏன் பயனற்றது? (rs-TL பக். 29 பாரா 3–பக். 31 பாரா 2)
எண் 4: c போட்டி போடும் நோக்கத்தில் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை கிறிஸ்தவர்கள் ஏன் தவிர்க்கிறார்கள்
பிப். 5 பைபிள் வாசிப்பு: ஏசாயா 47-51 பாட்டு 79
பேச்சு பண்பு: வலிமை, உணர்ச்சி, தத்ரூபம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வார்த்தைகள் (be-TL பக். 163 பாரா 1–பக். 164 பாரா 2)
எண் 1: யெகோவாவின் வசனம் நம்மைச் சுத்தமாக வைக்கிறது, உண்மைத் தன்மையுடன் இருக்க உதவுகிறது (w-TL05 4/15 பக். 11-12 பாரா. 5-11)
எண் 3: மூதாதையர் வணக்கம் ஏன் யெகோவாவுக்குப் பிரியமற்றது (rs-TL பக். 31 பாரா 3–பக். 32 பாரா 1)
எண் 4: பரிசுகள் கொடுப்பதை பைபிள் தடைசெய்கிறதா?
பிப். 12 பைபிள் வாசிப்பு: ஏசாயா 52-57 பாட்டு 139
பேச்சு பண்பு: இலக்கண விதிப்படி பேசுதல் (be-TL பக். 164 பாரா 3–பக். 165 பாரா 1)
எண் 1: யெகோவாவின் வசனம் தைரியம் தருகிறது (w-TL05 4/15 பக். 13 பாரா. 12-14)
எண் 3: சுயதியாக வாழ்க்கை ஏன் பயனுள்ளது
எண் 4: அந்திக்கிறிஸ்துக்கள் யார்? (rs-TL பக். 32-3)
பிப். 19 பைபிள் வாசிப்பு: ஏசாயா 58-62 பாட்டு 189
பேச்சு பண்பு: குறிப்புத்தாளைப் பயன்படுத்துதல் (be-TL பக். 166 பாரா 1–பக். 167 பாரா 2)
எண் 1: ஏசாயா—ஏன் பயனுள்ளது (si-TL பக். 123 பாரா. 34-9)
எண் 3: கடவுளுக்கு அடிமையாய் இருப்பது ஏன் ஏற்கத்தக்கது?
எண் 4: d விசுவாசத்துரோகிகளை அடையாளம் கண்டுகொள்ளுதல் (rs-TL பக். 34 பாரா 1–பக். 36 பாரா 1)
பிப். 26 பைபிள் வாசிப்பு: ஏசாயா 63-66 பாட்டு 141
பேச்சு பண்பு: உங்களுடைய கருத்துக்களை ஒழுங்கமைத்தல் (be-TL பக். 167 பாரா 3–பக். 168 பாரா 2)
வாய்மொழி மறுபார்வை
மார்ச் 5 பைபிள் வாசிப்பு: எரேமியா 1-4 பாட்டு 70
பேச்சு பண்பு: உங்களுடைய குறிப்புத்தாளை எளிமையாக வைத்துக்கொள்ளுங்கள் (be-TL பக். 168 பாரா 3–பக். 169 பாரா 5)
எண் 1: எரேமியா—முன்னுரை (si-TL பக். 124 பாரா. 1-5)
எண் 3: உண்மையான சந்தோஷம் எதைச் சார்ந்திருக்கிறது?
எண் 4: e விசுவாசத்துரோகிகளைக் குறித்து நம் மனப்பான்மை என்னவாக இருக்க வேண்டும்? (rs-TL பக். 36 பாரா 2–பக். 37 பாரா 2)
மார்ச் 12 பைபிள் வாசிப்பு: எரேமியா 5-7 பாட்டு எண் 159
பேச்சு பண்பு: தர்க்க ரீதியில் பேசுதல் (be-TL பக். 170 பாரா 1–பக். 171 பாரா 2)
எண் 1: சபை பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 47 பாரா 1–பக். 49 பாரா 2)
எண் 3: சர்ச்சை பேதுருமீது கிறிஸ்து கட்டவில்லை (rs-TL பக். 37 பாரா 3–பக். 39 பாரா 3)
எண் 4: யாத்திராகமம் 14:11 கற்பிக்கும் பாடத்தை நம் நாளுக்குப் பொருத்துதல்
மார்ச் 19 பைபிள் வாசிப்பு: எரேமியா 8-11 பாட்டு 182
பேச்சு பண்பு: தகவல்களை தர்க்க ரீதியில் சொல்லுதல் (be-TL பக். 171 பாரா 3–பக். 172 பாரா 5)
எண் 1: ஊழியக் கூட்டப் பேச்சுக்களையும் மற்ற பேச்சுக்களையும் தயாரித்தல் (be-TL பக். 49 பாரா 3–பக். 51 பாரா 3)
எண் 3: ஆபிரகாம், யோபு, தானியேல் ஆகியோர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்திருந்தார்களென நமக்கு எப்படித் தெரியும்?
எண் 4: பேதுரு பயன்படுத்திய திறவுகோல்கள் யாவை? (rs-TL பக். 39 பாரா 4–பக். 41 பாரா 6)
மார்ச் 26 பைபிள் வாசிப்பு: எரேமியா 12-16 பாட்டு 205
பேச்சு பண்பு: பொருத்தமான தகவல்களை மட்டுமே பயன்படுத்துதல் (be-TL பக். 173 பாரா. 1-4)
எண் 1: மீட்கும் பலி கடவுளின் நீதியை மகிமைப்படுத்துகிறது (w-TL05 11/1 பக். 13-14)
எண் 3: “அப்போஸ்தல வாரிசுகள்” உண்மைக் கிறிஸ்தவர்கள் அல்ல (rs-TL பக். 42 பாரா 1–பக். 44 பாரா 3)
எண் 4: எவ்விதத்தில் ஒரு கிறிஸ்தவர் பெருமைப்பட வேண்டும்?
ஏப். 2 பைபிள் வாசிப்பு: எரேமியா 17-21 பாட்டு 30
பேச்சு பண்பு: மனதிலிருந்து பேசுதல் (be-TL பக். 174 பாரா 1–பக். 175 பாரா 4)
எண் 1: பொதுப் பேச்சுக்களைத் தயாரித்தல் (be-TL பக். 52 பாரா 1–பக். 54 பாரா 1)
எண் 3: அர்மகெதோன் யுத்தம் எங்கு நடைபெறும்? (rs-TL பக். 44 பாரா 4–பக். 46 பாரா 4)
எண் 4: f புத்திமதியை நாம் எப்படிக் கருத வேண்டும்?
ஏப். 9 பைபிள் வாசிப்பு: எரேமியா 22-24 பாட்டு 184
பேச்சு பண்பு: மனதிலிருந்து பேசுவதில் உள்ள படுகுழிகளைத் தவிர்த்தல் (be-TL பக். 175 பாரா 5–பக். 177 பாரா 1)
எண் 1: பேச்சாளரின் தீர்மானங்கள் (be-TL பக். 54 பாரா. 2-4; பக். 55, பெட்டி)
எண் 3: ஊழியத்தில் ஈடுபடுவது ஏன் மகிழ்ச்சி தருகிறது
எண் 4: அர்மகெதோனில் யார் மற்றும் எது அழிக்கப்படும்? (rs-TL பக். 46 பாரா 5–பக். 47 பாரா 2)
ஏப். 16 பைபிள் வாசிப்பு: எரேமியா 25-28 பாட்டு 27
பேச்சு பண்பு: பிறர் விளக்கம் கேட்கும்போது (be-TL பக். 177 பாரா 2–பக். 178 பாரா 2)
எண் 1: போதிக்கும் திறமையை வளருங்கள் (be-TL பக். 56 பாரா 1–பக். 57 பாரா 2)
எண் 3: அர்மகெதோனில் யார் தப்பிப்பிழைப்பார்கள்? (rs-TL பக். 47 பாரா. 3-8)
எண் 4: பூமி எவ்விதத்தில் சபிக்கப்பட்டது? (ஆதி. 3:17)
ஏப். 23 பைபிள் வாசிப்பு: எரேமியா 29-31 பாட்டு 148
பேச்சு பண்பு: உரையாடல் முறையில் பேசுதல் (be-TL பக். 179-80)
எண் 1: ‘வேறுபடுத்திக் காட்டுங்கள்’ (be-TL பக். 57 பாரா 3–பக். 58 பாரா 2)
எண் 3: யெகோவாவின் மகத்துவம் ஏன் எல்லையற்றது?
எண் 4: அர்மகெதோன்—கடவுளுடைய அன்புக்கு எதிரானது அல்ல (rs-TL பக். 48 பாரா. 1-3)
ஏப். 30 பைபிள் வாசிப்பு: எரேமியா 32-34 பாட்டு 100
பேச்சு பண்பு: குரல் நயம் (be-TL பக். 181 பாரா. 1-4)
வாய்மொழி மறுபார்வை
மே 7 பைபிள் வாசிப்பு: எரேமியா 35-38 பாட்டு 165
பேச்சு பண்பு: தகுந்த முறையில் சுவாசித்தல் (be-TL பக். 181 பாரா 5–பக். 184 பாரா 1; பக். 182, பெட்டி)
எண் 1: கேட்போரை சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துதல் (be-TL பக். 58 பாரா 3–பக். 59 பாரா 3)
எண் 3: அர்மகெதோனில் நடுநிலை வகிக்க முடியாது (rs-TL பக். 48 பாரா. 4-7)
எண் 4: எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களை கிறிஸ்தவர்கள் எப்படிச் சமாளிக்கலாம்?
மே 14 பைபிள் வாசிப்பு: எரேமியா 39-43 பாட்டு 56
பேச்சு பண்பு: விறைப்பான தசைகளைத் தளர்த்துதல் (be-TL பக். 184 பாரா 2–பக். 185 பாரா 2; பக். 184, பெட்டி)
எண் 1: பொருத்திக் காட்டுங்கள், நல்ல முன்மாதிரியாக இருங்கள் (be-TL பக். 60 பாரா 1–பக். 61 பாரா 3)
எண் 3: யாருடைய செல்வாக்கு, அர்மகெதோனின் சூழ்நிலைக்குத் தேசங்களை உந்துவிக்கிறது? (rs-TL பக். 48 பாரா 8–பக். 49 பாரா 1)
எண் 4: g உண்மைக் கிறிஸ்தவர்கள் காதலிக்கும் காலத்தில் ஏன் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டும்
மே 21 பைபிள் வாசிப்பு: எரேமியா 44-48 பாட்டு 122
பேச்சு பண்பு: பிறர்மீது அக்கறை காட்டுதல் (be-TL பக். 186 பாரா. 1-4)
எண் 1: உரையாடும் திறமைகளை வளர்ப்பது எப்படி (be-TL பக். 62 பாரா 1–பக். 64 பாரா 1)
எண் 3: தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுதல் என்பது என்ன, அதற்கு எதிராக நம்மை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
எண் 4: வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாபிலோனை அடையாளங் கண்டுகொள்ளுதல் (rs-TL பக். 49 பாரா. 2-3)
மே 28 பைபிள் வாசிப்பு: எரேமியா 49-50 பாட்டு 95
பேச்சு பண்பு: கூர்ந்து செவிகொடுத்தல் (be-TL பக். 187 பாரா. 1-5)
எண் 1: உரையாடலை தொடர்வது எப்படி (be-TL பக். 64 பாரா 2–பக். 65 பாரா 4)
எண் 3: பூர்வ பாபிலோன் எதற்குப் பெயர்போனது? (rs-TL பக். 50 பாரா 1–பக். 51 பாரா 5)
எண் 4: பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஏன் வாசித்துக் காட்ட வேண்டும்
ஜூன் 4 பைபிள் வாசிப்பு: எரேமியா 51-52 பாட்டு 166
பேச்சு பண்பு: மற்றவர்கள் முன்னேற உதவுதல் (be-TL பக். 187 பாரா 6–பக். 188 பாரா 3)
எண் 1: எரேமியா—ஏன் பயனுள்ளது (si-TL பக். 129 பாரா. 36-9)
எண் 3: கடவுளை விட்டுச் சுதந்திரமாய்ச் செயல்பட முயல்வது முட்டாள்தனம்
எண் 4: ஏன் கிறிஸ்தவமென உரிமைபாராட்டும் மதங்களும் மகா பாபிலோனின் பாகமானவை (rs-TL பக். 52 பாரா 1–பக். 53 பாரா 1)
ஜூன் 11 பைபிள் வாசிப்பு: புலம்பல் 1-2 பாட்டு 129
பேச்சு பண்பு: நடைமுறையான உதவி செய்தல் (be-TL பக். 188 பாரா 4–பக். 189 பாரா 4)
எண் 1: புலம்பல்—முன்னுரை (si-TL பக். 130-1 பாரா. 1-7)
எண் 3: மகா பாபிலோனைவிட்டு வெளியேறுவது ஏன் அவசரமானது (rs-TL பக். 53 பாரா. 2-7)
எண் 4: உண்மையான தயவு ஏன் பலவீனமல்ல
ஜூன் 18 பைபிள் வாசிப்பு: புலம்பல் 3-5 பாட்டு 140
பேச்சு பண்பு: மற்றவர்களுக்கு மரியாதை காட்டுதல் (be-TL பக். 190 பாரா. 1-4)
எண் 1: புலம்பல்—ஏன் பயனுள்ளது (si-TL பக். 132 பாரா. 13-15)
எண் 3: முழுக்காட்டுதல் என்பது என்ன, கடவுளுடைய வார்த்தையை நம்புகிறவர்கள் ஏன் முழுக்காட்டப்படுகிறார்கள்? (rs-TL பக். 54 பாரா. 1-4)
எண் 4: h உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் அரசியலில் ஈடுபடுவதில்லை
ஜூன் 25 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 1-5 பாட்டு 1
பேச்சு பண்பு: மரியாதைக்குரிய விதத்தில் கண்டுகொள்ளுதல் (be-TL பக். 191 பாரா 1–பக். 192 பாரா 1)
வாய்மொழி மறுபார்வை
ஜூலை 2 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 6-10 பாட்டு 26
பேச்சு பண்பு: மரியாதைக்குரிய விதத்தில் பேச்சு கொடுப்பது (be-TL பக். 192 பாரா 2–பக். 193 பாரா 2)
எண் 1: எசேக்கியேல்—முன்னுரை (si-TL பக். 132-3 பாரா. 1-6)
எண் 3: யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு என்ன தேவை (யாக். 4:8)
எண் 4: கிறிஸ்தவ முழுக்காட்டுதல், தண்ணீர் தெளிப்பதன் மூலம் கொடுக்கப்படுவதில்லை, குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுவதில்லை (rs-TL பக். 54 பாரா 5–பக். 55 பாரா 4)
ஜூலை 9 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 11-14 பாட்டு 112
பேச்சு பண்பு: உறுதியான நம்பிக்கையோடு பேசுதல் (be-TL பக். 194 பாரா 1–பக். 195 பாரா 2)
எண் 1: நன்மை செய்வதில் சோர்ந்து போகாதீர்கள் (w-TL05 6/1 பக். 29-30)
எண் 3: தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் பாவங்கள் நீக்கப்பட்டுவிடுமா? (rs-TL பக். 55 பாரா 5–பக். 56 பாரா 1)
எண் 4: வெளிப்படுத்துதல் 17:9-11-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
ஜூலை 16 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 15-17 பாட்டு 29
பேச்சு பண்பு: நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்துவது (be-TL பக். 195 பாரா 3–பக். 196 பாரா 4)
எண் 1: தவறான சிந்தனையை அறவே தவிர்த்திடுங்கள்! (w-TL05 9/15 பக். 26-8)
எண் 3: விவேகமாய் இருப்பது எதைக் குறிக்கிறது (நீதி. 13:16)
எண் 4: யார் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுவார்கள்? (rs-TL பக். 56 பாரா 2–பக். 57 பாரா 3)
ஜூலை 23 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 18-20 பாட்டு 193
பேச்சு பண்பு: சாதுரியம் ஆனாலும் உறுதி (be-TL பக். 197 பாரா. 1-3)
எண் 1: கேள்வி கேட்பவரின் கண்ணோட்டத்தை கண்டுணர்தல் (be-TL பக். 66 பாரா 1–பக். 68 பாரா 1)
எண் 3: அக்கினியில் முழுக்காட்டப்படுவதும் பரிசுத்த ஆவியால் முழுக்காட்டப்படுவதும் ஒன்றல்ல (rs-TL பக். 57 பாரா 4–பக். 58 பாரா 2)
எண் 4: கடவுளுடைய ராஜ்யம் மெய்யானது என்பதற்கு அத்தாட்சி
ஜூலை 30 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 21-23 பாட்டு 35
பேச்சு பண்பு: சாட்சி கொடுத்தலில் சாதுரியம் (be-TL பக். 197 பாரா 4–பக். 199 பாரா 1)
எண் 1: எப்படிப் பதிலளிக்க வேண்டுமென அறிதல் (be-TL பக். 68 பாரா 2–பக். 70 பாரா 3)
எண் 3: பைபிளைக் கருத்துடன் கவனிக்க வேண்டியதற்குக் காரணங்கள் (rs-TL பக். 59 பாரா 1–பக். 60 பாரா 3)
எண் 4: மேன்மை பற்றிய சரியான கண்ணோட்டம் எது?
ஆக. 6 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 24-27 பாட்டு 37
பேச்சு பண்பு: ஏற்ற சமயத்தில் பேசுவது (be-TL பக். 199 பாரா. 2-5)
எண் 1: கடிதத் தொடர்பு (be-TL பக். 71-3)
எண் 3: கிறிஸ்தவர்களுக்கு மோசே எவ்வழிகளில் தலைசிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார்?
எண் 4: ஏசாயா, எரேமியா தீர்க்கதரிசனங்களிலிருந்து பைபிள் ஏவப்பட்டு எழுதப்பட்டதற்கான அத்தாட்சி (rs-TL பக். 60 பாரா 4–பக். 61 பாரா 3)
ஆக. 13 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 28-31 பாட்டு 123
பேச்சு பண்பு: குடும்பத்தாரோடும் மற்றவர்களோடும் சாதுரியத்தைப் பயன்படுத்துதல் (be-TL பக். 200 பாரா 1–பக். 201 பாரா 1)
எண் 1: முன்னேற விரும்புங்கள்—வளர்ச்சி அடையுங்கள் (be-TL பக். 74 பாரா 1–பக். 75 பாரா 3)
எண் 3: இயேசு சொல்லிய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் பைபிள் ஏவப்பட்டதை நிரூபிக்கிறது (rs-TL பக். 61 பாரா 4–பக். 62 பாரா 1)
எண் 4: வேதாகமத்தில் “வெறுப்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
ஆக. 20 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 32-34 பாட்டு 215
பேச்சு பண்பு: நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல் (be-TL பக். 202 பாரா 1–பக். 203 பாரா 2)
எண் 1: உங்கள் வரத்தை பயன்படுத்துங்கள் (be-TL பக். 75 பாரா 4–பக். 77 பாரா 2)
எண் 3: கடவுளுடைய ஆவி நமக்கு எப்படி உதவுகிறது?
எண் 4: பைபிள், விஞ்ஞானப்படி திருத்தமானது (rs-TL பக். 62 பாரா 2–பக். 64 பாரா 3)
ஆக. 27 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 35-38 பாட்டு 94
பேச்சு பண்பு: நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசுதல் (be-TL பக். 203 பாரா 3–பக். 204 பாரா 1)
வாய்மொழி மறுபார்வை
செப். 3 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 39-41 பாட்டு 194
பேச்சு பண்பு: உடன் விசுவாசிகளிடம் உரையாடுகையில் (be-TL பக். 204 பாரா 2–பக். 205 பாரா 4)
எண் 1: கடவுளுடைய வசனத்தில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்? (w-TL05 4/15 பக். 15-16 பாரா. 3-6)
எண் 3: கடவுளை உண்மையில் மகிழ்விக்க மனிதரால் முடியுமா?
எண் 4: i பைபிளைப் பற்றி மறுத்துச் சொல்பவர்களுக்கு விடையளித்தல் (rs-TL பக். 64 பாரா 4–பக். 68 பாரா 1)
செப். 10 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 42-45 பாட்டு 77
பேச்சு பண்பு: வலியுறுத்துவதற்குத் திரும்பத் திரும்ப சொல்லுதல் (be-TL பக். 206 பாரா. 1-4)
எண் 1: முதுமை ‘மகிமையான கிரீடமாகையில்’ (w-TL05 1/15 பக். 8-9)
எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில்லை (rs-TL பக். 68 பாரா 2–பக். 70 பாரா 2)
எண் 4: j “அந்நியருடைய சத்தத்தை” நாம் எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்? (யோவான் 10:5)
செப். 17 பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 46-48 பாட்டு 164
பேச்சு பண்பு: திரும்பத் திரும்ப சொல்லுதல், வெளி ஊழியத்திலும் பேச்சுக்கள் கொடுக்கையிலும் (be-TL பக். 207 பாரா 1–பக். 208 பாரா 3)
எண் 1: எசேக்கியேல்—ஏன் பயனுள்ளது (si-TL பக். 137 பாரா. 29-33)
எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தத்திற்கு விலகியிருக்கிறார்கள்? (rs-TL பக். 70 பாரா 3–பக். 72 பாரா 3)
எண் 4: k அருமையான ஆன்மீக ஆஸ்தியே பிள்ளைகளுக்குப் பெற்றோர் தரும் மிகச் சிறந்த பரிசாக இருப்பது ஏன்
செப். 24 பைபிள் வாசிப்பு: தானியேல் 1-3 பாட்டு 179
பேச்சு பண்பு: மையப்பொருளை விரிவாக்குதல் (be-TL பக். 209 பாரா. 1-3)
எண் 1: தானியேல்—முன்னுரை (si-TL பக். 138-9 பாரா. 1-6)
எண் 3: 1,44,000 என்ற எண்ணிக்கை ஏன் சொல்லர்த்தமானது? (வெளி. 7:4)
எண் 4: உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் இரத்தமேற்றிக்கொள்வதில்லை (rs-TL பக். 72 பாரா 4–பக். 73 பாரா 3)
அக். 1 பைபிள் வாசிப்பு: தானியேல் 4-6 பாட்டு 14
பேச்சு பண்பு: பொருத்தமான மையப்பொருளை பயன்படுத்துதல் (be-TL பக். 210 பாரா 1–பக். 211 பாரா 1; பக். 211, பெட்டி)
எண் 1: கோபப்படுவது எப்போது நியாயமானது? (w-TL05 8/1 பக். 13-15)
எண் 3: மேவிபோசேத்தின் அருமையான குணங்களை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
எண் 4: l இரத்தமேற்றுதல் சம்பந்தமாகச் சொல்லப்படும் கூற்றுகளுக்கு விடையளித்தல் (rs-TL பக். 74 பாரா 1–பக். 76 பாரா 2)
அக். 8 பைபிள் வாசிப்பு: தானியேல் 7-9 பாட்டு 34
பேச்சு பண்பு: முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுதல் (be-TL பக். 212 பாரா 1–பக். 213 பாரா 1)
எண் 1: யெகோவாவின் “வசனம்” உங்களைக் காப்பதாக (w-TL05 9/1 பக். 28-31)
எண் 3: மறுபடியும் பிறத்தல் என்பதன் பொருள் என்ன? (rs-TL பக். 76 பாரா 3–பக். 77 பாரா 7)
எண் 4: வெளி ஊழியத்தில் தவறாமல் ஈடுபடுவதால் என்னென்ன விதங்களில் விசேஷித்த மகிழ்ச்சி கிடைக்கிறது?
அக். 15 பைபிள் வாசிப்பு: தானியேல் 10-12 பாட்டு 210
பேச்சு பண்பு: அநேக முக்கிய குறிப்புகளைப் பயன்படுத்தாதிருத்தல் (be-TL பக். 213 பாரா 2–பக். 214 பாரா 5)
எண் 1: தானியேல்—ஏன் பயனுள்ளது (si-TL பக். 141-2 பாரா. 19-23)
எண் 3: மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொள்ள மனத்தாழ்மை நமக்கு எப்படி உதவும்
எண் 4: இரட்சிப்பு, மறுபடியும் பிறப்பதன் அடிப்படையில் அல்ல (rs-TL பக். 78 பாரா 1–பக். 79 பாரா 1)
அக். 22 பைபிள் வாசிப்பு: ஓசியா 1-7 பாட்டு 66
பேச்சு பண்பு: ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை (be-TL பக். 215 பாரா 1–பக். 216 பாரா 5)
எண் 1: ஓசியா—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 143-5 பாரா. 1-8, 14-17)
எண் 3: a மறுபடியும் பிறத்தல் சம்பந்தமான கருத்துகளுக்கு விடையளித்தல் (rs-TL பக். 79 பாரா 3–பக். 80 பாரா 2)
எண் 4: உண்மைக் கிறிஸ்தவர்கள் என்னென்ன வழிகளில் பொறுமையை வெளிக்காட்டுகிறார்கள்
அக். 29 பைபிள் வாசிப்பு: ஓசியா 8-14 பாட்டு 59
பேச்சு பண்பு: வெளி ஊழியத்தில் ஜனங்களின் கவனத்தை ஈர்த்தல் (be-TL பக். 217 பாரா. 1-4)
வாய்மொழி மறுபார்வை
நவ. 5 பைபிள் வாசிப்பு: யோவேல் 1-3 பாட்டு 166
பேச்சு பண்பு: உங்களுடைய பேச்சின் பொருளை முன்னுரையில் குறிப்பிடுதல் (be-TL பக். 217 பாரா 5–பக். 219 பாரா 3)
எண் 1: யோவேல்—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 146-8 பாரா. 1-5, 12-14)
எண் 3: ‘பூரண அன்பை’ கொண்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (1 யோ. 4:18)
எண் 4: பாதிரிகளிடம் பாவ அறிக்கையிடுதல்—ஏன் வேதப்பூர்வமானதல்ல? (rs-TL பக். 80 பாரா 3–பக். 81 பாரா 9)
நவ. 12 பைபிள் வாசிப்பு: ஆமோஸ் 1-9 பாட்டு 211
பேச்சு பண்பு: திறம்பட்ட முடிவுரைகள் (be-TL பக். 220 பாரா. 1-3)
எண் 1: ஆமோஸ்—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 148-50 பாரா. 1-6, 13-17)
எண் 3: அனுபவ பாடம் எப்போதும் சிறந்த வழிகாட்டியாக ஏன் இருக்க முடியாது
எண் 4: கடவுளுக்கும் மனிதருக்கும் எதிராகச் செய்த பாவத்தை அறிக்கையிடுதல் (rs-TL பக். 83 பாரா. 3-9)
நவ. 19 பைபிள் வாசிப்பு: ஒபதியா 1–யோனா 4 பாட்டு 220
பேச்சு பண்பு: மனதில் வைக்க வேண்டிய குறிப்புகள் (be-TL பக். 221 பாரா. 1-5)
எண் 1: ஒபதியா, யோனா—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 151-3 பாரா. 1-5, 10-14; பக். 153-5 பாரா. 1-4, 9-12)
எண் 3: ஏன் பூமிக்குரிய பரதீஸ் வருவதற்கு முன்பாக ஆன்மீக பரதீஸ் வரவேண்டும்
எண் 4: b வினைமையான பாவங்களை ஏன் மூப்பர்களிடம் அறிக்கை செய்ய வேண்டும்? (rs-TL பக். 84 பாரா. 1-5)
நவ. 26 பைபிள் வாசிப்பு: மீகா 1-7 பாட்டு 18
பேச்சு பண்பு: வெளி ஊழியத்தில் (be-TL பக். 221 பாரா 6–பக். 222 பாரா 6)
எண் 1: மீகா—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 155-8 பாரா. 1-8, 16-19)
எண் 3: சாந்தகுணமுள்ளவராய் இருப்பதன் பொருள்
எண் 4: சிருஷ்டிப்பில் நம்புவது ஏன் பகுத்தறிவுக்கு ஒத்ததாயிருக்கிறது (rs-TL பக். 84 பாரா 6–பக். 86 பாரா 2)
டிச. 3 பைபிள் வாசிப்பு: நாகூம் 1–ஆபகூக் 3 பாட்டு 137
பேச்சு பண்பு: திருத்தமான தகவலை அளித்தல் (be-TL பக். 223 பாரா. 1-5)
எண் 1: நாகூம், ஆபகூக்—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 158-60 பாரா. 1-7, 11-12; பக். 161-3 பாரா. 1-5, 12-14)
எண் 3: சிருஷ்டிப்பு பற்றி பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ளுதல் (rs-TL பக். 86 பாரா 3–பக். 88 பாரா 4)
எண் 4: நித்திய ஜீவன் ஏன் அலுப்புத்தட்டாது
டிச. 10 பைபிள் வாசிப்பு: செப்பனியா 1–ஆகாய் 2 பாட்டு 78
பேச்சு பண்பு: ‘உண்மை வசனத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்’ (be-TL பக். 224 பாரா. 1-4)
எண் 1: செப்பனியா, ஆகாய்—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 163-6 பாரா. 1-6, 10-12; பக். 166-8 பாரா. 1-7, 13-16)
எண் 3: சிலுவை வணக்கம் ஏன் வேதப்பூர்வமற்றது? (rs-TL பக். 92 பாரா 1–பக். 93 பாரா 1)
எண் 4: c ஒருவரது திருமணத்தில் ஆன்மீகத்தன்மை எப்படிச் செல்வாக்கு செலுத்துகிறது?
டிச. 17 பைபிள் வாசிப்பு: சகரியா 1-8 பாட்டு 209
பேச்சு பண்பு: தகவலின் திருத்தமான தன்மையை பரிசோதித்தல் (be-TL பக். 225 பாரா. 1-3)
எண் 1: சகரியா—முன்னுரை (si-TL பக். 168-9 பாரா. 1-7)
எண் 3: மறுரூபக் காட்சி எப்படி நிறைவேற்றம் அடைந்திருக்கிறது?
எண் 4: ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த மக்களின் வயதுகள், நாம் பயன்படுத்தும் இதே வகையான ஆண்டுகளின்படி கணக்கிடப்பட்டனவா? (rs-TL பக். 94 பாரா 4–பக். 95 பாரா 1)
டிச. 24 பைபிள் வாசிப்பு: சகரியா 9-14 பாட்டு 202
பேச்சு பண்பு: புரிந்துகொள்ளும்படி பேசுதல் (be-TL பக். 226 பாரா 1–பக். 227 பாரா 1)
எண் 1: சகரியா—ஏன் பயனுள்ளது மற்றும் மல்கியா—முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 171-2 பாரா. 23-7, 10-12; பக். 172-5 பாரா. 1-6, 13-17)
எண் 3: கடவுளுடைய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டதென யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கின்றனர்? (rs-TL பக். 95 பாரா 2–பக். 97 பாரா 3)
எண் 4: துன்புறுத்தலுக்காக நம்மை எப்படித் தயார்படுத்திக்கொள்ளலாம்?
டிச. 31 பைபிள் வாசிப்பு: மல்கியா 1-14 பாட்டு 118
பேச்சு பண்பு: பழக்கமில்லாத வார்த்தைகளை விளக்குதல் (be-TL பக். 227 பாரா 2–பக். 228 பாரா 1)
வாய்மொழி மறுபார்வை
[அடிக்குறிப்புகள்]
a சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
b சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
c சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
d சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
e சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
f சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
g சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
h சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
i சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
j சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
k சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.
l நேரம் இருந்தால், சபை பிராந்தியத்தில் உள்ள ஜனங்களின் நோக்குநிலைகள், விடாப்பிடியான கருத்துகள், ஆட்சேபணைகள் ஆகியவற்றை நன்கு சமாளிக்கும் விதத்தில் எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைப் பேச்சில் குறிப்பிடலாம்.
a நேரம் இருந்தால், சபை பிராந்தியத்தில் உள்ள ஜனங்களின் நோக்குநிலைகள், விடாப்பிடியான கருத்துகள், ஆட்சேபணைகள் ஆகியவற்றை நன்கு சமாளிக்கும் விதத்தில் எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைப் பேச்சில் குறிப்பிடலாம்.
b நேரம் இருந்தால், சபை பிராந்தியத்தில் உள்ள ஜனங்களின் நோக்குநிலைகள், விடாப்பிடியான கருத்துகள், ஆட்சேபணைகள் ஆகியவற்றை நன்கு சமாளிக்கும் விதத்தில் எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைப் பேச்சில் குறிப்பிடலாம்.
c நேரம் இருந்தால், சபை பிராந்தியத்தில் உள்ள ஜனங்களின் நோக்குநிலைகள், விடாப்பிடியான கருத்துகள், ஆட்சேபணைகள் ஆகியவற்றை நன்கு சமாளிக்கும் விதத்தில் எப்படிப் பதில் அளிக்கலாம் என்பதைப் பேச்சில் குறிப்பிடலாம்.