தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 30, 2006-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 30, 2006 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேச்சு கொடுக்கும்போது நிதானம் ஏன் முக்கியம், இது சம்பந்தமாக நம் கவலையைக் குறைப்பது எப்படி? [be-TL பக். 135 பாரா 5–பக். 137 பாரா 2, பெட்டிகள்]
2. நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி யாராவது நம்மிடம் கேட்கும்போது நாம் ஏன் பைபிளைப் பயன்படுத்தி பதில் அளிக்க வேண்டும்? [be-TL பக். 143, பாரா. 1-3]
3. பைபிளைப் பயன்படுத்துவதில் நாம் அதிக திறம்பட்டவர்களாவது எப்படி? [be-TL பக். 144, பெட்டி]
4. வெளி ஊழியத்தில் நாம் கற்பிக்கும்போது, பைபிளை அடிக்கடி ஏன் பயன்படுத்த வேண்டும்? சபை கூட்டங்களில் பைபிளைப் பயன்படுத்துவதற்கு மற்றவர்களை நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்? [be-TL பக். 145-6, பெட்டிகள்]
5. ஒரு வசனத்தை அறிமுகப்படுத்தும்போது, என்ன இரண்டு இலக்குகள் நமக்குண்டு? [be-TL பக். 147 பாரா 2]
பேச்சு நியமிப்பு எண் 1
6. பொருத்தமான, பயனுள்ள என்ன செய்தி சங்கீத புத்தகத்தில் அடங்கியுள்ளது? [si-TL பக். 104 பாரா 23]
7. நீதிமொழிகள் எப்பொழுது எழுதித் தொகுக்கப்பட்டது? [si-TL பக். 107 பாரா 5]
8. “நீதிமொழி” என்பதன் அர்த்தம் என்ன, இப்புத்தகத்தின் எபிரெய பெயர் ஏன் பொருத்தமானது? [si-TL பக். 107 பாரா 6]
9. நீதிமொழிகள் 2:1-5 (NW), அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் விவேகத்தையும் “வெள்ளியைப் போலவும் புதையல்களைப் போலவும்” தேட வேண்டுமென்று நம்மை உற்சாகப்படுத்துவதன் அர்த்தம் என்ன? [be-TL பக். 38, பாரா 4]
10. நீதிமொழிகள் புத்தகத்திலேயே அதன் பயனுள்ள நோக்கம் எப்படிக் கூறப்படுகிறது? [si-TL பக். 109 பாரா 19]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. தாவீது எவ்வாறு ‘தாயின் பால்மறந்த குழந்தையைப்போல தனது ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினார்,’ நாம் எவ்விதத்தில் அவரைப் பின்பற்றலாம்? (சங். 131:1-3)
12. ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட சங்கீதம் 139:7-12-ல் உள்ள வார்த்தைகளிலிருந்து என்ன ஆறுதல் கிடைக்கிறது?
13. நம் ஜெபங்களிலும் வெளி ஊழியத்திலும் யெகோவாவைத் துதிக்கும்படி தூண்டுவிக்கும் அவருடைய மகத்துவத்திற்குச் சங்கீதம் 145-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில உதாரணங்கள் யாவை? (சங். 145:3)
14. யெகோவாவுக்குப் பயப்படுவது எவ்விதத்தில் “அறிவின் ஆரம்பம்,” எவ்விதத்தில் “ஞானத்தின் ஆரம்பம்”? (நீதி. 1:7, NW; 9:10)
15. நீதிமொழிகள் 7:1, 2-ல் கூறப்பட்டிருக்கும் ‘என் வார்த்தைகள்,’ ‘என் கட்டளைகள்’ என்பவற்றில் அடங்கியுள்ள சில விஷயங்கள் யாவை?