ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ, அக்டோபர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அக்டோபர் மாத விழித்தெழு!-வையும் ராஜ்ய செய்தி எண் 37-உடன் சேர்த்து அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி:“கடவுளின் நண்பராகும்படி மற்றவர்களுக்கு உதவுங்கள்.”a மற்றவர்களின் முன்மாதிரியும் இதயப்பூர்வமான ஜெபமும் முழுக்காட்டுதல் எடுக்குமளவுக்கு முன்னேற தங்களுக்கு உதவிய விதத்தைப் பற்றிச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி:ராஜ்ய செய்தி எண் 37-ஐ விநியோகிப்பதற்குத் தயாரியுங்கள். பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். இந்த விநியோகிப்பு குறித்து செப்டம்பர் மாத நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருந்த ஏற்பாடுகளைக் கலந்தாலோசியுங்கள். எல்லாருமே அதில் மும்முரமாக ஈடுபடும்படி உந்துவியுங்கள். முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துபவர்கள், தங்களது பைபிள் மாணாக்கர் இந்த விநியோகிப்பில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகக் கலந்துகொள்ளத் தகுதிபெறுவதைப் பற்றி சிந்திப்பதற்கு ஊக்கப்படுத்துங்கள். பெற்றோரும்கூட தங்கள் பிள்ளைகள் இத்தகுதியைப் பெறுவது பற்றி சிந்திக்கலாம். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 79-81-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகளைச் சுருக்கமாகக் கூறுங்கள்.
பாட்டு 221, முடிவு ஜெபம்.
அக்டோபர் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:சபை புத்தகப் படிப்பிலிருந்து பயனடைதல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 69-ல் உள்ள உபதலைப்பிலிருந்து பக்கம் 72-ல் உள்ள உபதலைப்புக்கு முன்பு வரையுள்ள விஷயங்களைக் குறித்து பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி:“எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்?”b ராஜ்ய காரியங்களை முதலிடத்தில் வைப்பதற்காகச் செய்திருக்கும் மாற்றங்களைப் பற்றியும், அதன் பலனாக அடைந்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் குறிப்புகள் சொல்லுமாறு பிரஸ்தாபிகளிடம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 172, முடிவு ஜெபம்.
அக்டோபர் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ, நவம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் நவம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நடிப்பில், உரையாடலை நிறுத்தும் நோக்கத்துடன், ‘நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு எப்படி விடையளிக்கலாம் என்பதைச் செய்து காட்டச் சொல்லுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 20-ஐக் காண்க.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“வெளி ஊழியக் கூட்டங்களிலிருந்து முழுமையாகப் பயனடைதல்.”c பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கையில், செப்டம்பர் 2001 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கேள்விப் பெட்டியில் பாரா 4-ல் காணப்படும் குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். தகுதி வாய்ந்த சகோதரர்கள் வெளி ஊழியக் கூட்டத்தை நடத்த வர முடியாத சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட ஆலோசனை அதில் காணப்படுகிறது.
பாட்டு 143, முடிவு ஜெபம்.
அக்டோபர் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். அனைவரும் வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி நினைவுபடுத்துங்கள். அவற்றின் பின்பக்கத்தில், ராஜ்ய செய்தி எண் 37-ல் எத்தனை பிரதிகளை அளித்திருந்தார்கள் என்பதைக் குறிப்பிடும்படியும் நினைப்பூட்டுங்கள்.
15 நிமி:ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது? ஏப்ரல் 8, 2002 தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கங்கள் 10-12-ல் உள்ள விஷயங்களின் பேரில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். ஸ்கூல் பிள்ளைகளிடம் சாட்சிகொடுத்தபோது கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கூறும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி:ராஜ்ய செய்தி எண் 37-ஐ விநியோகித்தபோது கிடைத்த அனுபவங்கள். ராஜ்ய செய்தி எண் 37-ஐ விநியோகித்தபோது தங்களுக்குக் கிடைத்த நல்ல பலன்களைப் பற்றி கூறும்படி சபையாரிடம் கேளுங்கள். இதுவரை பிராந்தியத்தில் எந்தளவு ஊழியம் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது, நவம்பர் 12-க்குள் பிராந்தியம் முழுவதிலும் ஊழியம் செய்து முடிக்க என்ன செய்யப்படலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி மறுசந்திப்பு செய்வதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ராஜ்ய செய்தி எண் 37-ஐ விநியோகிப்பதற்கான கடைசி நாளுக்குள் தங்களால் விநியோகிக்க முடியாதென்றால், அந்தப் பிரதிகளில் மீதமானவற்றைத் தந்துவிடும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். இது, அவற்றை விநியோகித்து முடிக்கக் கூடிய மற்றவர்களிடம் கொடுக்க உதவியாய் இருக்கும்.
பாட்டு 136, முடிவு ஜெபம்.
நவம்பர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜனவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில், பக்கங்கள் 3-4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ, நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளிக்கும் விதத்தை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். நேரம் இருந்தால், இந்தப் புத்தகத்தை ஊழியத்திலோ, தங்கள் சொந்தக் குடும்பத்தாரிடமோ அளித்ததால் கிடைத்த நல்ல பலன்களைப் பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி:மணநாளின் மகிழ்ச்சிக்கும் கண்ணியத்திற்கும் மெருகூட்டுங்கள். அக்டோபர் 15, 2006 தேதியிட்ட காவற்கோபுரத்தில், பக்கங்கள் 28-31-ல் உள்ள விஷயங்களின் பேரில் மூப்பரின் பேச்சு.
20 நிமி:திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவது புத்துணர்ச்சி அளிக்கிறது. ஜனவரி 15, 2002 தேதியிட்ட காவற்கோபுரத்தில், பக்கங்கள் 8-9-ல் உள்ள விஷயங்களின் பேரில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். ஊழியம் எவ்வாறு தங்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பது பற்றி குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். ஓரிரு குறிப்புகளுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யலாம்.
பாட்டு 8, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.