வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் செய்யப்படுகிற மாற்றங்கள்
வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகம் 1994-ல் தமிழில் வெளியிடப்பட்டது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. புள்ளி விவரங்கள் சம்பந்தமான சில மாற்றங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இவற்றை சமீபத்திய இயர்புக்கிலிருந்தும் பிற பிரசுரங்களிலிருந்தும் தெரிந்துகொள்ளலாம்.
அதிகாரம் 4
பக். 18, பாரா 4, கடைசி வசன இடக்குறிப்பை நீக்கிவிடவும்: மத்தேயு 25:31-33
அதிகாரம் 5
பக். 24, பாரா 3, அடிக்குறிப்பை மாற்றவும்: * விவரமான விளக்கத்துக்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 88-92, 215-18-ஐக் காண்க.
அதிகாரம் 6
பக். 32, பெட்டி, முதல் பாராவை மாற்றவும்: சுமார் பொ.ச. 29 அக்டோபரில் இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டு நியமிக்கப்பட்ட அரசராக அபிஷேகஞ்செய்யப்பட்டார். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பொ.ச. 33-ல், அவர் எருசலேம் ஆலயத்துக்கு வந்து அதைக் கள்ளர் குகையாக்கினவர்களை வெளியே துரத்தினார். தேவனுடைய வீட்டில் நியாயத்தீர்ப்பு தொடங்கும்போது 1914 அக்டோபரில் இயேசு பரலோகங்களில் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட சமயம் முதல், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்களைச் சோதிப்பதற்கு வரும் வரையாக உள்ள மூன்றரை ஆண்டுகள் இதற்கு ஓர் இணைப்பொருத்தமாயிருப்பதாக தோன்றுகிறது. (மத்தேயு 21:12, 13; 1 பேதுரு 4:17) யெகோவாவுடைய ஜனங்களின் ராஜ்ய நடவடிக்கை 1918-ன் ஆரம்பத்தில் மிகுந்த எதிர்ப்பை எதிர்ப்பட்டது. அது பூமி முழுவதும் ஒரு சோதனைகாலமாக இருந்தது, பயந்திருந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டார்கள். மே 1918-ல் கிறிஸ்தவமண்டல குருமார் உவாட்ச் டவர் சொஸையிட்டி அலுவலர்களைச் சிறைப்படுத்தும்படி தூண்டினர். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இவர்கள் விடுதலையாக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. சோதிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட கடவுளுடைய ஜனங்களின் அமைப்பு 1919-லிருந்து கிறிஸ்து இயேசுவைக்கொண்ட யெகோவாவின் ராஜ்யமே மனிதவர்க்கத்தினருக்கான நம்பிக்கை என்பதை அறிவிப்பதில் வைராக்கியத்துடன் முன்னோக்கிச் சென்றது.—மல்கியா 3:1-3.
அதிகாரம் 8
பக். 40, பாரா 8, வரி 3, “125 தவறுகள்” என்பதை மாற்றவும்: 130 தவறுகள்
பக். 40, பாரா 10, கடைசி வாக்கியத்தை மாற்றவும்: ஐக்கிய மாகாணங்களில் உள்ள உச்சநீதி மன்றத்தில் மட்டுமே 50 சாதகமான தீர்ப்புகளை யெகோவாவின் சாட்சிகள் வென்றிருக்கிறார்கள்.
அதிகாரம் 10
பக். 50, பாரா 11, அடிக்குறிப்பை மாற்றவும்: * உதாரணத்துக்கு, நவம்பர் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள்—கடவுளின் மதிப்புமிக்க வணக்கத்தார்” என்ற கட்டுரையைக் காண்க.
அதிகாரம் 11
பக். 56, பாரா 9, பாராவின் பிற்பகுதியை மாற்றவும்: இதன் சம்பந்தமாக, காவற்கோபுர பத்திரிகையானது, “நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்,” “இனி நமக்கென்று வாழாதிருத்தல்” போன்ற தலைப்புகளையுடைய விஷயங்களைக் கலந்தாராய்வதன் மூலம் ஊக்கப்படுத்தியிருக்கிறது.* அப்படிப்பட்ட ஆவிக்குரிய உதவியைக் கொண்டவர்களாக, யெகோவாவுக்கு முன் உத்தமத்தன்மையில் மனத்தாழ்மையோடும் ஜெபசிந்தையோடும் நடப்பதற்கு நாம் முயற்சி செய்கையில் உள்ளுக்குள் நம்மை நாமே நன்றாக ஆராய்ந்து பார்ப்போமாக.—சங்கீதம் 26:1-3; 139:23, 24.
பக். 56, பாரா 9, அடிக்குறிப்பை மாற்றவும்: * ஜூலை 15, 2005, மார்ச் 15, 2005 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகைகளைக் காண்க.
அதிகாரம் 12
பக். 61, பாரா 14, அடிக்குறிப்பை மாற்றவும்: #யோவான் வகுப்பினரால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுர பத்திரிகை, பிரசங்க வேலையில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பங்குகொள்ள, இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத்தை தொடர்ந்து உயர்த்திக் காண்பிக்கிறது; உதாரணமாக, ஜனவரி 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!,” “‘அவர்களின் சத்தம் பூமியெங்கும் செல்கிறது’” என்ற கட்டுரைகளைப் பாருங்கள். ஜூன் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற கட்டுரையில், முழுநேர ஊழியத்தில் ‘திறந்த வாசலுக்குள்’ நுழைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்படி ஊழியம் செய்ததால் 2005-ம் ஆண்டில் ஒரு மாதத்தில் பயனியர்களின் உச்ச எண்ணிக்கை 10,93,552 என அறிக்கை செய்யப்பட்டிருந்தது.
அதிகாரம் 13
பக். 71, பாரா 14, வரி 11, “1993-ல் 2 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமான” என்ற வாக்கியத்தை மாற்றவும்: 2006-ல் 5 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமான
பக். 73, பாரா 23, வரிகள் 17, 18, வசன இடக்குறிப்பை நீக்கிவிடவும்: மத்தேயு 25:31
அதிகாரம் 16
பக். 90, பாரா 4, இரண்டாவது அடிக்குறிப்பை மாற்றவும்: * இயேசு 1914-ல் அவருடைய ராஜ்யத்திற்கு வந்தார் என்ற விவரமான ஆதாரத்திற்கு, யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டுள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் பக்கங்கள் 215-18-ஐக் காண்க.
பக். 90, பாரா 6, பாராவை மாற்றவும்: இருப்பினும், ஏன், புதிதாக முடிசூட்டப்பட்ட அரசர் யுத்தத்திற்கு சவாரி செய்ய வேண்டும்? இது ஏனெனில் அவருடைய ராஜரீகம், யெகோவாவின் பிரதான எதிரியான, பிசாசாகிய சாத்தானிடமிருந்தும், மேலும் பூமியின் மீது—தெரிந்தோ தெரியாமலோ—சாத்தானுடைய நோக்கத்தை சேவிக்கிறவர்களிடமிருந்தும் வருகிற கசப்பான எதிர்ப்பின் மத்தியிலும், நிலைநாட்டப்பட்டிருக்கிறது. ராஜ்யத்தின் பிறப்புதானேயும் பரலோகத்தில் ஒரு பெரிய யுத்தத்தை தேவைப்படுத்துகிறது. மிகாவேல் (அர்த்தம், “கடவுளைப் போன்று இருப்பவர் யார்?”) என்ற பெயரில் யுத்தம் செய்து, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் இயேசு மேற்கொள்கிறார். மேலும் அவர்களை பூமிக்குத் தள்ளுகிறார். (வெளிப்படுத்துதல் 12:7-12) இயேசுவின் ஜெயங்கொள்ளும் சவாரியானது கர்த்தருடைய நாளின் ஆரம்ப பத்தாண்டுகளினூடாக செம்மறியாட்டைப் போன்ற மனிதர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டுவருகையிலும் தொடர்கிறது. முழு உலகமும் ‘பொல்லாங்கனின் வல்லமைக்குள்’ இன்னும் இருக்கிறபோதிலும், ஒவ்வொருவரும் விசுவாசத்தின் ஜெயத்தை அடைய உதவுவதற்கு இயேசு தம்முடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களையும் அவர்களுடைய கூட்டாளிகளையும் அன்பாகத் தொடர்ந்து மேய்த்துக்கொண்டு வருகிறார்.—1 யோவான் 5:19, NW.
பக். 91, பாரா 9, கடைசி வாக்கியத்தை மாற்றவும்: கத்தோலிக்க நாடுகளில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. மேலும் துன்புறுத்தல் மிக கொடியதாக இருந்த இடங்களிலும்—ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில், மொத்தமாக 6,00,000-க்கும் அதிகமான சுறுசுறுப்பான ஊழியர்கள் இருப்பதாக சாட்சிகள் இன்று அறிக்கை செய்கின்றனர்.—ஏசாயா 54:17; எரேமியா 1:17-19.
பக். 94, பாரா 18, பாராவை மாற்றவும்: இராணுவ தொழில்நுட்பத் திறனுக்கான ஒரு வெற்றி என்பதாக இதை நாம் அழைக்க முடியுமா? மாறாக, இது, அந்த இரக்கமற்ற சிவப்புக் குதிரை பாய்ந்தோடுகிறது என்பதற்கான ஓர் அத்தாட்சியே. மேலும், அந்தக் குதிரையின் ஓட்டம் எங்கே முடிவடையும்? ஒரு தற்செயலான அணுயுத்தம் நிகழும் சாத்தியம் இருப்பதாக சில விஞ்ஞானிகள் பேசிக்கொள்கிறார்கள்—ஒரு திட்டமிடப்பட்ட அணு பேரழிவைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை! ஆனால் மகிழ்ச்சிகரமாக, வெள்ளைக் குதிரையின் ஜெயங்கொள்ளுகிற சவாரியாளர் இதைப் பற்றி வேறு எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்.
பக். 97, பாரா 28, பாராவை மாற்றவும்: இங்கே தற்காலத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது ‘மரணத்துக்கேதுவான கொள்ளை நோய்.’ முதல் உலக யுத்தத்தின் பாழ்க்கடிப்புகளைத் தொடர்ந்து, 1918-19-ன் ஒரு சில மாதங்களிலே ஸ்பானிஷ் சளிக்காய்ச்சல் 2 கோடிக்கும் அதிகமான ஆட்களை அறுவடை செய்தது. பூமியின் மீதான இந்தப் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒரே ஒரு பகுதியானது செயின்ட் ஹெலினா என்ற தீவாக இருந்தது. ஜனத்தொகை பேரளவாகத் குறைந்துபோன இடங்களில், சடலங்கள் குவியல்களாக எரிக்கப்பட்டன. பெரும் அளவு புகையிலைத் தூய்மைக்கேட்டினால், உண்டுபண்ணப்படுகிற இருதயநோய் மற்றும் புற்றுநோய் திகிலூட்டும் விகிதத்தில் இன்று உள்ளன. “அருவருப்பின் பத்தாண்டுகள்” என்று விவரிக்கப்பட்ட 1980-களின் சமயத்தில், பைபிள் தராதரங்களின்படி ஒழுக்கமற்றதாக இருக்கும் வாழ்க்கை முறை ‘மரணத்திற்கேதுவான கொள்ளை நோயுடன்’ எய்ட்ஸின் கொடுமையையும் கூட்டியிருக்கிறது. வருடம் 2000-த்தில், “ஒருவேளை இதுவே உலகறிந்த மிக மோசமான கொள்ளைநோய்” என்று எய்ட்ஸ் நோயை ஐ.மா. சர்ஜன் ஜெனரல் குறிப்பிட்டதாக அறிக்கை செய்யப்பட்டது. உலக முழுவதிலும் 5 கோடியே 20 லட்சம் பேர் எச்ஐவி/எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும், அவர்களில் 2 கோடி பேர் இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இன்று அநேக வியாதிகள் கடத்தப்படுவதற்கு காரணமாயிருக்கும் வேசித்தனம் மற்றும் இரத்தத்தை தவறாகப் பயன்படுத்துதலிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்வதற்கான அவருடைய வார்த்தையின் ஞானமான அறிவுரைகளுக்கு யெகோவாவின் ஜனங்கள் எவ்வளவு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்!—அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 6:9-11-ஐ ஒப்பிடவும்.
அதிகாரம் 18
பக். 106, பாரா 7, பாராவை மாற்றவும்: இரண்டாம் உலக யுத்தம் எழுச்சிகளின் மற்றொரு அலையைக் கொண்டு வந்தது. மேலும், பயங்கரவாதத்தோடுகூட சிறு சிறு யுத்தங்கள் சர்வதேச அளவில் நடந்துவருவது தொடர்ந்து உலகை உலுக்குகிறது. பயங்கரவாதிகளைப் பற்றிய, அல்லது சர்வநாசம் செய்வதற்குரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளைப் பற்றிய பயம், அநேகரை யோசிக்க வைக்கிறது.
பக். 107, பாரா 9, மூன்றாவது வாக்கியத்தை மாற்றவும்: அதைத் தொடர்ந்து வந்த இருண்ட நாட்கள் உண்மையாகவே இயேசுவினுடைய வந்திருத்தலைப் பற்றிய தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தன. அது, “ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும் . . . பூமியின் மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” என்பதை உட்படுத்தும். (லூக்கா 21:7-9, 25-31)*
பக். 107, பாரா 9 அடிக்குறிப்பை மாற்றவும்: * 35 வருடங்களுக்கும் அதிகமாக, 1895 முதல் 1931 வரை, சீற்றமான கடலின் மேலே கொந்தளிப்பான வானங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு கலங்கரை விளக்கின் பின்னணியில், லூக்கா 21:25, 28, 31-ன் வார்த்தைகள், காவற்கோபுர பத்திரிகையின் அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தன.
பக். 107, பாரா 11, ஐந்தாவது வாக்கியத்தை மாற்றவும்: இந்தப் பூகோள எச்சரிக்கையின் மூலமாக சாத்தானின் இந்தப் பொல்லாத உலகத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டு வருகிறது.*
பக். 109, பாரா 17, கடைசி வசன இடக்குறிப்பை நீக்கிவிடவும்: மத்தேயு 24:29
அதிகாரம் 20
பக். 123, பாரா 11, நான்காவது வாக்கியத்தை மாற்றவும்: இதை அச்சிடும் சமயத்தில், மெப்ஸ் புரோகிராமின் பல்வேறு வகைகள் உலக முழுவதிலும் 125-க்கும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மாதம் இருமுறை வெளியிடப்படுகிற காவற்கோபுர பத்திரிகையை 130-க்கும் அதிக மொழிகளில் ஒரே சமயத்தில் பிரசுரிக்க முடிகிறது.
பக். 128, பாரா 30, கடைசி வாக்கியத்தை மாற்றவும்: முத்திரை போடப்பட்ட 1,44,000 பேரில் ஒருவேளை இன்னும் மீந்திருப்பவர்கள் மற்றும் வேறே ஆடுகளாகிய திரள் கூட்டம் உட்பட, மனிதவர்க்கத்தின் ஒரு சிறுபான்மையோர் மட்டுமே ‘நிலைநிற்பார்கள்,’ அதாவது, அவர்களோடு தப்பிப்பிழைப்பார்கள்.—எரேமியா 35:19; 1 கொரிந்தியர் 16:13.
அதிகாரம் 22
பக். 143, உபதலைப்பை மாற்றவும்: இன்றைய வெட்டுக்கிளி வாதை
பக். 146, பாரா 16, வெளிப்படுத்துதல் 9:10-ன் மேற்கோளுக்கு அடுத்துள்ள வாக்கியங்களை மாற்றவும்: இது எதை அர்த்தப்படுத்தக்கூடும்? யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய வேலையைச் செய்கையில், தங்களது வார்த்தைகளின் மூலமாகவும் பிரசுரங்களின் மூலமாகவும், கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமான விஷயங்களை அறிவிக்கிறார்கள். அவர்களுடைய செய்தி தேள்களைப் போன்ற கொடுக்கை உடையது, ஏனென்றால் அவை நெருங்கிக் கொண்டிருக்கும் யெகோவாவின் பழிவாங்குதலின் நாளைக் குறித்து எச்சரிக்கின்றன. (ஏசாயா 61:2) ஆவிக்குரிய வெட்டுக்கிளிகளின் தற்போதைய தலைமுறையின் வாழ்நாட்காலத்தை முடிக்குமுன், எல்லா வணங்காக் கழுத்துடைய கடவுளைத் தூஷிக்கிறவர்களுக்கு கேடு உண்டாக யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிக்கும் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை முடிக்கப்பட்டுவிடும்.
பக். 147, பாரா 17, அடிக்குறிப்பை மாற்றவும்: * இந்தப் பத்திரிகை, 1937-ல் ஆறுதல் என்ற பெயராலும் 1946-ல் விழித்தெழு! என்ற பெயராலும் அழைக்கப்பட்டது.
அதிகாரம் 24
பக். 160, பாரா 21, வரி 13, “வெள்ளாட்டைப்போன்ற ஜனங்களுக்கு” என்பதை மாற்றவும்: எதிர்க்கிறவர்களுக்கு
பக். 160, பாரா 21, “மத்தேயு 25:31-34, 41, 46”-ஐ மாற்றவும்: பிலிப்பியர் 1:27, 28
பக். 160, கேள்வி 21 (ஆ)-வை மாற்றவும்: எதிர்க்கிறவர்களுக்கு இந்த நற்செய்தியானது ஏன் கெட்ட செய்தியாக இருக்கிறது?
அதிகாரம் 25
பக். 162, பாரா 4, அடிக்குறிப்பை மாற்றவும்: * இந்தப் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தைப் பற்றிய முழு விளக்கத்துக்கு, ஜூலை 1, 1996 தேதியிட்ட காவற்கோபுரத்தில், “யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம்” என்ற தலைப்பிலும், டிசம்பர் 1, 1972 ஆங்கில காவற்கோபுரத்தில், “வணங்குவதற்குரிய ஒரே மெய்யான ஆலயம்” என்ற தலைப்பிலும் உள்ள கட்டுரைகளைப் பார்க்கவும்.
பக். 162, பாரா 5, மூன்றாவது வாக்கியத்தை மாற்றவும்: எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களில், இப்படி அளந்துபார்ப்பது யெகோவாவுடைய பரிபூரண தராதரங்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் என்பதற்கான ஓர் உறுதியை அளித்தது.
பக். 162, பாரா 7, வெளிப்படுத்துதல் 11:2-ன் மேற்கோளை அடுத்து வருகிற இரண்டாவது வாக்கியத்தை மாற்றவும்: நாம் பார்க்கப்போகிற பிரகாரம், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாதங்கள், டிசம்பர் 1914 முதல் ஜூன் 1918 வரை நீடித்திருக்கும் சொல்லர்த்தமான 42 மாதங்களாக இருக்கின்றன, அப்போதுதானே கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குட்பட்டனர்.
பக். 165, படக்குறிப்பை மாற்றவும்: செருபாபேலும் யோசுவாவும் மறுபடியும் செய்த கட்டுவிப்பு வேலையானது, கர்த்தருடைய நாளில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உண்டாகும் அற்ப ஆரம்பங்கள் பெரிய அதிகரிப்பைக்கொண்டு முடியும் என்பதை குறிப்பிட்டுக் காட்டியது. மேலே படத்தில் காட்டப்பட்டிருக்கிற நியு யார்க், புரூக்லினிலிருக்கும் கட்டட வசதிகள், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இன்னும் அதிகம் விரிவாக்கப்பட வேண்டியிருந்திருக்கின்றன
பக். 165, பாரா 15, “(மத்தேயு 17:1-3; 25:31)”-ஐ மாற்றவும்: (மத்தேயு 17:1-3)
அதிகாரம் 27
பக். 185, பாரா 28, முதல் இரண்டு வாக்கியங்களை மாற்றவும்: இந்தக் கொடிய துன்புறுத்தல் வெள்ளம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அதனுடைய உச்சநிலையை எட்டினது. ஐரோப்பாவில் சுமார் 12,000 சாட்சிகள் நாசி கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் காவலில் வைக்கப்பட்டனர், மேலும் சுமார் 2,000 பேர் மரித்தனர்.
அதிகாரம் 28
பக். 187, பாரா 4, அடிக்குறிப்பை மாற்றவும்: * மேலுமான விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் பக்கங்கள் 165-79-ஐக் காண்க.
அதிகாரம் 29
பக். 202, பாரா 14, 1-3 வரிகளை மாற்றவும்: இந்த 1,44,000 பேர் “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்,” ‘மனுஷரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்.’ அவர்கள் கடவுளுடைய குமாரர்களாக தத்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்,
அதிகாரம் 30
பக். 206, பாரா 3, இரண்டாவது வாக்கியத்தை மாற்றவும்: பூர்வ பாபிலோன் பொ.ச.மு. 539-ல் வீழ்ந்தபின்பு என்ன நடந்தது?
பக். 209, பாரா 10, முதல் வரியை மாற்றவும்: அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1870 வாக்கில்,
பக். 209, பாரா 10-க்கான கேள்வியை மாற்றவும்: 1870 வாக்கில் என்ன நடந்தது, மகா பாபிலோன் இதற்கு எவ்வாறு பிரதிபலித்தது?
பக். 212, பாரா 23, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது வாக்கியங்களை மாற்றவும்: உடனடியாக, இயேசு கீழ்ப்படிகிறார். முதலாவதாக, 1919-லிருந்து, தம்முடைய தூதர்கள் 1,44,000 பேரின் அறுவடையைச் செய்து முடிக்கும்படி செய்திருக்கிறார். (மத்தேயு 13:39, 43; யோவான் 15:1, 5, 16) அடுத்தபடியாக, வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டத்தை அறுவடைசெய்து கூட்டிச் சேர்க்கும்படி செய்கிறார். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9)
அதிகாரம் 32
பக். 231, பாரா 27, “மத்தேயு 24:42, 44” என்ற வசன இடக் குறிப்பிலிருந்து தொடங்கும் கடைசிப் பகுதியை மாற்றவும்: (மத்தேயு 24:42, 44, தி.மொ.; லூக்கா 12:37, 40) இதே எச்சரிக்கையை எதிரொலித்து, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு கூறினார்: “இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய [யெகோவாவின், NW] நாள் வரு[ம்]. . . . சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது, . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” சாத்தானே, ‘சமாதானமும் பாதுகாப்பும்!’ என்ற அப்படிப்பட்ட எந்தப் பொய்யான பொது அறிவிப்பைச் செய்வதற்கும் காரணமாய் இருக்கிறான்.—1 தெசலோனிக்கேயர் 5:2, 3.
அதிகாரம் 33
பக். 243, பாரா 21, கடைசியிலிருந்து இரண்டாவது வாக்கியத்தை மாற்றவும்: போப் தான் உரையாற்றிய பேச்சில் இயேசு கிறிஸ்துவைப்பற்றியோ கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றியோ அவ்வளவாய் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கப்படத்தக்கது.
பக். 245, வரி 5, “(வெளிப்படுத்துதல் 14:8; 17:1)” என்ற வசன இடக்குறிப்பை மாற்றவும்: (வெளிப்படுத்துதல் 14:8; 17:4)
அதிகாரம் 34
பக். 246, பாரா 1, கடைசியிலிருந்து இரண்டாவது வாக்கியத்தை மாற்றவும்: ஆனால் நம் நாளில் இந்தத் தரிசனம் வியப்பதிர்ச்சியூட்டுகிற மெய்ம்மையாக மாறுகிறது.
பக். 249, பாரா 10, நான்காவது வாக்கியத்தை மாற்றவும்: சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, 1986-ல் நடந்த யுத்தங்களில் மட்டுமே அதிகபட்சமாக ஐம்பது லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்!
பக். 250, பாரா 12, அடிக்குறிப்பு, “1981”-ஐ மாற்றவும்: 1993
பக். 251, பாரா 14, பாராவை மாற்றவும்: சமீப வருடங்களில் மனிதர்களின் பல்வேறு திட்டங்களை விவரிக்க, ‘சமாதானம், பாதுகாப்பு’ என்ற சொற்றொடரை அரசியல்வாதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். உலகத் தலைவர்களால் செய்யப்படும் அத்தகைய முயற்சிகள், 1 தெசலோனிக்கேயர் 5:3-ல் சொல்லப்பட்டிருப்பது நிறைவேற ஆரம்பித்துவிட்டதைக் குறிக்கிறதா? அல்லது, உலகளவில் கவனத்தைக் கவரும் வகையில் சம்பவிக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டும் பவுல் குறிப்பிட்டுக் காட்டினாரா? பொதுவாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின பின்னர் அல்லது நிறைவேறி வரும்போதுதான் அவை முழுவதுமாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. எனவே நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயத்தில், தேசங்கள் என்னதான் சமாதானம் பாதுகாப்பை நிலைநாட்டியதாகத் தோன்றினாலும், அடிப்படையில் எதுவும் மாறியிருக்காது என்பதை கிறிஸ்தவர்கள் அறிவார்கள். தன்னலம், பகை, குற்றச்செயல், குடும்பப் பிளவுகள், ஒழுக்கக்கேடு, வியாதி, துன்பம், மரணம் ஆகியவை இன்னும் இருக்கவே செய்யும். எனவேதான் உலக சம்பவங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதற்கு நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருந்து, கடவுளுடைய வார்த்தையிலுள்ள தீர்க்கதரிசன எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்த்து வந்தால், ‘சமாதானம் பாதுகாப்பு’ சம்பந்தமான எந்த அறிவிப்பும் உங்களை தவறாக வழிநடத்த வேண்டியதில்லை.—மாற்கு 13:32-37; லூக்கா 21:34-36.
அதிகாரம் 36
பக். 259, பாரா 4, கடைசி இரண்டு வாக்கியங்களை மாற்றவும்: 1914-ல், இயேசு பரலோகத்திலே அரசரானார். அதுமுதல் யெகோவாவுடைய துணை அரசராகவும் நீதிபதியாகவும் பூமியின் மீது அதிகாரம் செலுத்திவந்திருக்கிறார். அவ்வாறிருக்க, மகா பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து அவர் அறிவிப்பதே பொருத்தமானதாய் இருக்கிறது.
பக். 265, பாரா 22, கடைசியாகக் கொடுக்கப்பட்டுள்ள வசன இடக்குறிப்பை நீக்கிவிடவும்:—மத்தேயு 24:15, 16-ஐ ஒத்துப்பாருங்கள்.
பக். 266, பாரா 28, மூன்றாவது மற்றும் நான்காவது வாக்கியங்களை மாற்றவும்: அவள் எவ்வளவாய் கொடுத்தாளோ, அவ்வளவாய் அவள் இரட்டிப்பாய் பெறவேண்டும். எந்தவித இரக்கமும் காட்டப்படாது, ஏனெனில் மகா பாபிலோன் தனக்குப் பலியான ஆட்களுக்கு எந்தவித இரக்கத்தையும் காட்டவில்லை.
அதிகாரம் 38
பக். 277, பாரா 17, கடைசி இரண்டு வாக்கியங்களை மாற்றவும்: அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் யாராவது அப்போது பூமியில் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்கள், கிறிஸ்து முற்றிலும் ஜெயித்த பிறகு சீக்கிரத்தில் தங்களுடைய பரலோகப் பரிசைப் பெறும்படி அங்கு பிரவேசித்து, மணவாட்டி வகுப்பாரில் தங்கள் சக உறுப்பினர்களைச் சேர்ந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்பு, கடவுளின் உரிய சமயத்தில், ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் நடந்தேறலாம்!
பக். 277, பாரா 18, முதல் வாக்கியத்தை மாற்றவும்: சங்கீதம் 45-ல் குறிப்பிட்டுள்ள தீர்க்கதரிசன விவரிப்பு, நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை உறுதிசெய்கிறது.
அதிகாரம் 39
பக். 281, பாரா 10, கடைசி இரண்டு வாக்கியங்களை மாற்றவும்: மேலும், இயேசு தம்முடைய மகிமையான சிங்காசனத்தின்மீது உட்கார்ந்து பூமியிலுள்ள ராஜ்யங்களையும் ஜனங்களையும் நியாயந்தீர்க்கையில், ‘தூதர்கள் யாவரும்’ உடனிருந்து அவருக்குச் சேவை செய்வார்கள். (மத்தேயு 25:31, 32) கடவுள் அளித்துள்ள ஆக்கினைத்தீர்ப்புகளை, இந்த உறுதித்தீர்வானப் போரில் கடைமுடிவாக நிறைவேற்றுகையில், நிச்சயமாகவே, இயேசுவுடன் அவருடைய தூதர்கள் மறுபடியும் செல்வார்கள்.
அதிகாரம் 41
பக். 296, பாரா 5, முதல் மூன்று வாக்கியங்களை மாற்றவும்: அந்தப் பழைய பூமியும் பழைய வானமும் அகன்று போய்விட்ட பின்பு நியாயந்தீர்க்கப்படுவதற்கு யார் விடப்பட்டிருக்கின்றனர்? அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேரில் மீந்தவர்கள் அல்லர், ஏனெனில் இவர்கள் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டு முத்திரையிடப்பட்டுவிட்டனர். அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் யாராவது அர்மகெதோனுக்குப் பின்பு பூமியில் இன்னும் உயிரோடிருந்தால், அதற்குப்பின் அவர்கள் சீக்கிரத்தில் மரித்து, உயிர்த்தெழுதல் மூலம் தங்களுடைய பரலோகப் பரிசைப் பெறவேண்டும். (1 பேதுரு 4:17; வெளிப்படுத்துதல் 7:2-4)
அதிகாரம் 43
பக். 311, பாரா 19, “(வெளிப்படுத்துதல் 11:15; 12:10)” என்ற வசன இடக் குறிப்பை அடுத்து வருகிற வாக்கியங்களை மாற்றவும்: முடிவுகாலத்தின்போது, ஜீவத்தண்ணீரை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும்படி ஆவியும் மணவாட்டியும் நல்மனமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இந்நதியின் தண்ணீர் இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவு வரையிலும் தொடர்ந்து கிடைப்பதோடு, அதற்குப் பிறகும், புதிய எருசலேம் ‘தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரும்’ புதிய உலகிலும் தொடர்ந்து கிடைக்கும்.—வெளிப்படுத்துதல் 21:2.
பக். 312, பாரா 26, முதல் இரண்டு வாக்கியங்களை மாற்றவும்: அந்த நதியின் தண்ணீரை நன்கு பெறுகிற அந்த விருட்சங்கள், ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய 1,44,000 உறுப்பினர்களை உட்படுத்தலாம். பூமியிலிருக்கையில் இவர்களும் இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுள் செய்துள்ள உயிரடைவதற்கான ஏற்பாட்டில் பருகுகின்றனர். ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களும் இயேசுவின் சகோதரர்களுமாகிய இவர்கள், “நீதியின் [“பெரிய,” NW] விருட்சங்கள்” என தீர்க்கதரிசன ரீதியில் அழைக்கப்படுவது சுவாரஸ்யமான விஷயமாகும். (ஏசாயா 61:1-3; வெளிப்படுத்துதல் 21:6)