உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/06 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 9/06 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரையும், பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தோடு சேர்த்து கொடுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்கள் பைபிளிலிருந்து கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கும் விதத்தில், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் அளிக்கப்படும். வீட்டுக்காரருடைய மொழியில் இப்புத்தகம் இல்லாவிட்டால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியோடு சேர்த்து அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். அதற்குப் பதிலாக என்னுடைய பைபிள் கதை புத்தகம், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் ஆகிய புத்தகங்கள் கையிருப்பில் இருந்தால் அவற்றையும் அளிக்கலாம்.

◼ சபைகள் அடுத்தமுறை பிரசுரங்களை ஆர்டர் செய்யும்போது, ஆங்கிலத்தில் சிடி-ரோமில் உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2006-ஐயும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது முழுக்காட்டுதல் பெற்ற சபை அங்கத்தினர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதையும், சபை மூலமாகத்தான் இதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் தயவுசெய்து ஞாபகம் வையுங்கள்.

◼ புதிய ஊழிய ஆண்டில் தேவைப்படும் ஃபார்ம்கள் போதியளவு ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் ஃபார்ம்கள் அடுத்த ஊழிய ஆண்டிற்கு போதுமானளவு இருக்கிறதா என்று செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஃபார்ம்களில் எவையாவது கூடுதலாகத் தேவைப்பட்டால் அவற்றை உடனடியாக ஆர்டர் செய்யலாம்.

◼ செப்டம்பர் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் பக்கங்கள் 3-6-⁠ல் அநேக மாற்றங்கள் அடங்கிய ஒரு பட்டியல் காணப்படுகிறது. இவற்றை, அவரவர் தங்களது வெளிப்படுத்துதல்​—⁠உச்சக்கட்டம் புத்தகத்தில் குறித்துக்கொள்ள வேண்டும். ஜனவரி 8, 2007-⁠ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை புத்தகப் படிப்புக்குத் தயாரிக்கும்போது இந்த மாற்றங்களையும் செய்ய வேண்டும்.

◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

◼ டிரஸ்ட்டுகளை வைத்திருக்கும் சபைகள், குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக அவற்றின் வருடாந்தர பொதுக் கூட்டங்களை (AGM) நடத்தும்படி நினைவூட்டப்படுகின்றன. இக்கூட்டங்களிலும், பிற டிரஸ்ட் கூட்டங்களிலும் பேசப்படுகிற விஷயங்களை முறையாகக் குறிப்பெடுத்து அவற்றைக் குறிப்பேட்டில் எழுதிவைக்க வேண்டும். டிரஸ்ட்டின் கணக்குகள் சார்ட்டர்டு அக்கௌண்ட்டன்ட்டாக இருப்பவரால் தணிக்கை செய்யப்பட வேண்டும். தணிக்கை செய்யப்பட்ட டிரஸ்ட் கணக்குகளின் ஒரு நகல் கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

◼ அமெரிக்கன் சைகை மொழியில் புதிதாகக் கிடைக்கும் டிவிடிகள்:

நோவா மற்றும் டேவிட்

த குட் நியூஸ் அக்கார்டிங் டு மேத்யூ

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? ​—⁠குஜராத்தி, பஞ்சாபி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்