ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். செப்டம்பர் 25-ல் துவங்கும் வாரத்தின்போது ஊழியக் கூட்டத்தில் நடத்தப்படும் கலந்தாலோசிப்புக்குத் தயாரிக்கும் வகையில் இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோவை அனைவரும் பார்த்துவிட்டு வரும்படி ஊக்கமூட்டுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் செப்டம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நடிப்பில், ‘எனக்கு என் சொந்த மதம் இருக்கிறது’ என்று சொல்லி உரையாடலை நிறுத்துபவர்களுக்கு எவ்வாறு மறுமொழியளிக்கலாம் என்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 18-19-ஐக் காண்க.
20 நிமி:தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்தும், ஊழியக் கூட்டத்திலிருந்தும் பயனடையுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில், பக்கம் 64-ல் உள்ள உபதலைப்பு முதல் பக்கம் 69-ல் உள்ள உபதலைப்பு வரையுள்ள விஷயங்களைப் பற்றிய பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்.
15 நிமி:கிளை அலுவலகக் கடிதம். இந்த நம் ராஜ்ய ஊழியத்தின் முதல் பக்கத்தில் காணப்படும் கிளை அலுவலகக் கடிதத்தின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 126, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 18-ல் துவங்கும் வாரம்
5 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:கடந்த வருடத்தில் எப்படிச் செய்தோம்? கடந்த ஊழிய ஆண்டில் முக்கியமாக, ஊழியத்தில் சாதித்த ஊக்கமூட்டுகிற அம்சங்களை ஊழியக் கண்காணி கலந்தாலோசிக்கிறார். பொருத்தமான பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இந்த ஊழிய ஆண்டில் கவனம் செலுத்த வேண்டிய ஓரிரு அம்சங்களைக் குறிப்பிடுங்கள். பயனியர்கள் செய்துவருகிற வேலையைக் குறிப்பிட்டு, பக்தி வைராக்கியத்துடன் ஊழியம் செய்து வருவதற்காக அவர்களைப் பாராட்டுங்கள். செயலற்றவர்களுக்கு உதவுவதற்காக முயற்சி எடுத்தபோது கிடைத்த நல்ல பலன்களைக் குறிப்பிடுங்கள்.
25 நிமி:“அக்டோபர் 16 முதல் நவம்பர் 12 வரை விசேஷ விநியோகிப்பு!” மூப்பரின் உற்சாகமான கலந்தாலோசிப்பு. ஜூன் 6, 2006 தேதியிட்ட மூப்பர் குழுக்களுக்கான கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த அறிவிப்பை வாசித்த பிறகு, கூட்டத்திற்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ராஜ்ய செய்தி எண் 37-ன் ஒரு பிரதியைக் கொடுங்கள். பிறகு அந்தக் கட்டுரையை கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். சபை மூலமாக பிராந்தியம் முழுவதிலும் விநியோகிப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுங்கள். இந்த விநியோகிப்பில் முழுமையாகப் பங்குபெறுவதற்கு எல்லாப் பிரஸ்தாபிகளையும் ஊக்கமூட்டுங்கள். சுருக்கமான நடிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 50, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடையைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். செப்டம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ அக்டோபர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தை அல்லது அக்டோபர் மாத விழித்தெழு!-வை தெரு ஊழியத்தின்போது அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
25 நிமி:“ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வீடியோ.”a முதல் பாராவைச் சிந்திக்கும்போது, இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைப் பெறுவது எப்படி? என்ற வீடியோ சம்பந்தமாகத் தங்களது அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பிறகு 2-7 பாராக்களிலுள்ள விஷயங்களை நேரடியாக கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். முடிவுரையாக, டிவிடி-யில் கிடைக்கிற இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? (ஆங்கிலம்) வீடியோவை சீக்கிரத்தில் குடும்பமாகச் சேர்ந்து பார்க்கும்படியும் ஊக்கப்படுத்துங்கள்.
10 நிமி:ஊழியத்தில் கிடைத்த அனுபவங்கள். விழித்தெழு! சிறப்பிதழை அளித்த, அல்லது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளைத் துவங்கிய அனுபவத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றையோ இரண்டையோ நிஜ சம்பவ நடிப்பாகச் செய்து காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 183, முடிவு ஜெபம்.
அக்டோபர் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைச் சிந்தியுங்கள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“வீட்டுக்கு வீடு சாட்சி கொடுத்தல்.”b நேரம் இருந்தால், மேற்கோளின்றி கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 127, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.