தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 28, 2006-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 28, 2006 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. கேட்போரின் கண்களைப் பார்த்துப் பேசுவது சிறந்த போதகராக ஆவதற்கு எவ்வாறு உதவும்? (மத். 19:25, 26; அப். 14:9, 10) [be-TL பக். 124 பாரா 3 – பக். 125 பாரா 3]
2. இயல்பாகப் பேசுவது ஏன் முக்கியம், ஊழியத்தில் இயல்பாகப் பேச எது நமக்கு உதவி செய்யும்? [be-TL பக். 128 பாரா. 1-5, பெட்டி]
3. தனிப்பட்ட சுத்தத்திற்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? [be-TL பக். 131 பாரா. 1-3]
4. உடை, சிகையலங்காரம் ஆகியவற்றில், ‘அடக்கமும்’ ‘தெளிந்த புத்தியும்’ ஒருவரை எவ்வாறு செல்வாக்கு செலுத்தும்? (1 தீ. 2:9, NW) [be-TL பக். 131 பாரா 4 - பக். 132 பாரா 1]
5. நம்முடைய தோற்றம் உலக ஆசையை பிரதிபலிக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள எந்த பைபிள் நியமங்களை நாம் பின்பற்ற வேண்டும்? [be-TL பக். 133 பாரா. 2-3]
பேச்சு நியமிப்பு எண் 1
6. வாசிப்பதால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை என்ன? [be-TL பக். 21 பாரா 3]
7. ஒருவர் ஞானமுள்ளவரா, ஞானமற்றவரா என்பதை எது தீர்மானிக்கிறது? (நீதி. 14:2) [w-TL04 11/15 பக். 26 பாரா 5]
8. எவ்வாறு ‘புத்தியுள்ளவனுக்கு அறிவு லேசாய் வரும்’? (நீதி. 14:6) [w-TL04 11/15 பக். 28, பாரா. 4-5]
9. படிப்பு என்றால் என்ன? [be-TL பக். 27 பாரா 3]
10. கடவுளுடைய படைப்புகளைப் பற்றி தியானிப்பது நம்மை என்ன செய்ய வைக்கும்? [w-TL04 11/15 பக். 8, பாரா 4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. பூர்வ காலங்களில் யெகோவா தந்த எந்த வசனத்தைக் கேட்டு, ‘ஸ்திரீகளின் கூட்டத்தார் நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தினார்கள்,’ அது இன்று நமக்கு எவ்வாறு பொருந்துகிறது? (சங். 68:11, NW)
12. நீதியின் பாதையிலிருந்து ஆசாப் கிட்டத்தட்ட விலகிவிடுவதற்கு எது காரணமாக இருந்தது, அவருடைய சிந்தனை எவ்வாறு சரிசெய்யப்பட்டது? (சங். 73:2, 3, 16, 17)
13. இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட மன்னா ஏன் ‘வானத்தின் தானியம்’ என்றும் ‘தூதர்களின் அப்பம்’ என்றும் அழைக்கப்பட்டது? (சங். 78:24, 25)
14. ‘உன்னதமானவரின் மறைவிடம்’ எதைக் குறிக்கிறது, நாம் எவ்வாறு அங்கே தங்கலாம்? (சங். 91:1, 2)
15. யெகோவாவுடைய பரிசுத்தவான்களின் மரணம் எவ்விதத்தில் அவருடைய பார்வைக்கு அருமையானது? (சங். 116:15)