உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/06 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2006
நம் ராஜ்ய ஊழியம்—2006
km 8/06 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், விழிப்புடன் இருங்கள்! ஆகிய 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம். சில இடங்களில் பின்வரும் சிற்றேடுகளை அளிப்பது பொருத்தமாய் இருக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), திருப்தியான வாழ்க்கைக்கு வழி. செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பு ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரையும், பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கத்தோடு மறுசந்திப்பு செய்யுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தோடு சேர்த்து கொடுங்கள். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுபவர்கள் பைபிளிலிருந்து கூடுதலான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஊக்குவிக்கும் விதத்தில், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகம் அளிக்கப்படும். வீட்டுக்காரருடைய மொழியில் இப்புத்தகம் இல்லாவிட்டால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியோடு சேர்த்து அளியுங்கள்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபைக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். ஏதாவது ரிப்பேர் வேலைக்காக அல்லது கட்டுமான வேலைக்காகத் தனியாக அக்கௌன்ட் இருந்தால் அதையும் தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை(கள்) முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கையை வாசிக்கையில் அதை சபைக்கு அறிவிக்க வேண்டும்.

◼ ஜனவரி 8, 2007 முதல் சபை புத்தகப் படிப்பில், வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை நாம் படிப்போம். ஆங்கிலத்தில் இந்தப் புத்தகம் பெரிய அச்செழுத்துப் பதிப்பாகத் தயாரிக்கப்பட உள்ளது. இந்தச் சமயத்தில் சபைகளில் இப்பிரசுரம், சாதாரண அளவிலும் பெரிய அச்செழுத்துப் பதிப்பிலும் போதியளவு இருக்க வேண்டும். பார்வை குறைவுபட்டவர்களுக்கும், சிறிய எழுத்துக்களை வாசிக்க முடியாதவர்களுக்கும் மட்டுமே பெரிய அச்செழுத்துப் பதிவுகள் கிடைக்கும் என்பதைத் தயவுசெய்து மனதில் வையுங்கள். எனவே பார்வை குறைவுபட்ட பிரஸ்தாபிகள் இப்புத்தகம் வேண்டுமென்று கேட்டால் மட்டுமே இதை ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2006 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா பிரசுரங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவே இதையும் சரிபார்த்து மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18-TL) ஃபார்மில் எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியரிடமிருந்து/ஊழியர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலர், இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். அவரும் ஒருங்கிணைப்பு சபையின் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையொப்பமிடுவார்கள். ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி (S-18-TL) ஃபார்ம்கள் அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மற்றொன்றை ‘ஒர்க்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ​—⁠ஆங்கிலம்

இது ஸ்டான்டர்ட் சைஸிலுள்ள “சாஃப்ட்” கவர் பைபிள். முக்கியமாக இது வெளி ஊழியத்தில் விநியோகிக்கத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், விருப்பப்பட்டால் பிரஸ்தாபிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுமுதல், ரெகுலர் எடிஷன் பைபிளை ஆர்டர் செய்யும்போது, எதுவும் குறிப்பிடப்படாதிருந்தால் இதுவே அனுப்பி வைக்கப்படும். கூடுதல் தகவலுக்கு ஆகஸ்ட் 1, 2005 தேதியிட்ட கடிதத்தைத் தயவுசெய்து பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்