அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகளை அளியுங்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை தயவுசெய்து அளியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் சிறுபிள்ளைகள் யாரும் இல்லையென வீட்டுக்காரர் சொன்னால், அறிவு புத்தகத்தையோ அல்லது பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்), என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற புத்தகங்கள் சபை கையிருப்பில் இருந்தால் அவற்றை அளிக்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். வீட்டுக்காரர்கள் அந்தப் புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளிக்கலாம்.
◼ அக்டோபர் மாதத்தில் ஐந்து சனி-ஞாயிறுகள் இருப்பதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதம்.
◼ இந்த மாத நம் ராஜ்ய ஊழிய பிரதியின் உட்சேர்க்கையில், “2006 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை” உள்ளது; இதை 2006-ம் ஆண்டு முழுவதும் பயன்படுத்துவதற்குப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.