தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 31, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 31, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் போதிக்கும் விஷயங்கள் ஜனங்களுடைய அடையாளப்பூர்வ இருதயத்தை எட்டுகிறதா என்பதை நாம் எப்படி உறுதிசெய்துகொள்ளலாம்? (மத். 13:19) [be-TL பக். 258 பாரா. 1-2, பெட்டி]
2. மாணாக்கருடைய இருதயத்தில் இருப்பதை வெளிக்கொணர்வதற்கு எது நமக்கு உதவலாம், ஆனால் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 259 பாரா. 1-2]
3. நாம் கற்பிக்கும்போது யெகோவாவின் அருமையான குணங்களை வலியுறுத்திக் காட்டுவது ஏன் முக்கியம்? [be-TL பக். 260 பாரா 1]
4. எந்தெந்த விஷயங்களில் முன்னேற்றம் செய்ய வேண்டுமென்பதைப் புரிந்துகொள்ள பைபிள் மாணாக்கர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்? [be-TL பக். 260 பாரா 4 – பக். 261 பாரா 1]
5. பைபிள் மாணாக்கர்கள் அல்லது நமக்குச் செவிசாய்ப்பவர்கள் ஒரு காரியத்தைச் செய்கையில், அவர்கள் தங்கள் உள்ளெண்ணங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு நாம் எவ்வாறு உதவலாம்? [be-TL பக். 262 பாரா. 1-2]
பேச்சு நியமிப்பு எண் 1
6. யெகோவாவை ‘உள்ளார்வத்தோடு தேடுவது’ எதை அர்த்தப்படுத்துகிறது, நாம் அவ்வாறு தேடுகிறோம் என்பதை எவ்வாறு வெளிக்காட்டலாம்? (எபி. 11:6) [w-TL03 8/15 பக். 25 பாரா 2; பக். 26 பாரா. 1-2; பக். 27 பாரா 2]
7. ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்’ எதை அர்த்தப்படுத்துகிறது, தாங்கள் அதைப் பின்பற்றுவதை மூப்பர்கள் எப்படிக் காட்டலாம்? (2 தீ. 1:13, 14) [w-TL03 1/1 பக். 29 பாரா 3 – பக். 30 பாரா 1]
8. “பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியல்” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது, பைபிள் புத்தகம் ஒன்று அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை? [si-TL பக். 299 பாரா. 5-6]
9. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதில், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மியூரட்டோரியன் சுருள்களின் பாகம் ஏன் அதிமுக்கியமானதாக இருக்கிறது? [si-TL பக். 302 பாரா 19]
10. பைபிளை மொழிபெயர்ப்பதற்கு எவ்வாறு பைபிளே அதிகாரம் அளிக்கிறது, பூர்வ பைபிள் மொழிபெயர்ப்புகள் என்ன நோக்கத்தை நிறைவேற்றியிருக்கின்றன? [si-TL பக். 307 பாரா 9]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. மத உருவச் சின்னங்களை வணங்குவதை 2 இராஜாக்கள் 13:21 ஆதரிக்கிறதா?
12. எகிப்துடன் எசேக்கியா ஒப்பந்தம் செய்துகொண்டாரா? (2 இரா. 18:19-21, 25)
13. சனகெரிப்பை யெகோவா படுதோல்வி அடையச் செய்ததைப் பற்றி அசீரிய வரலாற்றுப் பதிவுகள் எதையுமே குறிப்பாகத் தெரிவிக்காவிட்டாலும் அவற்றிலுள்ள எந்த விஷயம் ஆர்வமூட்டுகிறதென நினைக்கிறீர்கள்? (2 இரா. 19:35, 36)
14. சலாத்தியேலின் தகப்பன் யார்? (1 நா. 3:16-18)
15. சவுல் ராஜாவின் காலத்தில் வாழ்ந்த, ரூபன் புத்திரரும், காத்தியரும், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இன்று கடவுளுடைய ஊழியர் அனைவருக்கும் எவ்வாறு சிறந்த முன்மாதிரியாய் திகழ்கிறார்கள்? (1 நா. 5:18-22)