உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/05 பக். 3-6
  • 2006 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2006 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
  • துணை தலைப்புகள்
  • அறிவுரைகள்
  • அட்டவணை
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 10/05 பக். 3-6

2006 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை

அறிவுரைகள்

2006-⁠ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.

பிரசுரங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) [bi12], காவற்கோபுரம் [w-TL], தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் [be-TL], ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ [si-TL], வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் [rs-TL].

பாட்டு, ஜெபம், வரவேற்புரையுடன் பள்ளியை சரியான நேரத்தில் ஆரம்பித்து கீழ்க்காணும் குறிப்புகளின்படி நடத்த வேண்டும். ஒரு பேச்சு முடிந்த பின்னர் அடுத்த பேச்சு என்னவென்று பள்ளிக் கண்காணி அறிவிப்பார்.

பேச்சு பண்பு: 5 நிமிடங்கள். பள்ளிக் கண்காணி, துணை ஆலோசகர் அல்லது தகுதி பெற்ற மற்றொரு மூப்பர் ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் அடிப்படையில் ஒரு பேச்சு பண்பைப் பற்றி பேசுவார். (மூப்பர்கள் குறைவாக இருக்கும் சபைகளில் தகுதி பெற்ற உதவி ஊழியர்களைப் பயன்படுத்தலாம்.)

பேச்சு நியமிப்பு எண் 1: 10 நிமிடங்கள். இதை தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; இது, காவற்கோபுரம் பத்திரிகையிலுள்ள பகுதியாகவோ, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் அல்லது ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ புத்தகத்திலுள்ள பகுதியாகவோ இருக்கும். இதை, கேள்வி பதில் மறுபார்வையின்றி பத்து நிமிட போதனா பேச்சாகக் கொடுக்க வேண்டும். நியமிக்கப்பட்ட பகுதியைச் சிந்திப்பது மட்டுமே இதன் குறிக்கோள் அல்ல; மாறாக சபைக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் விஷயத்தை வலியுறுத்திக் காட்டி, சிந்திக்கப்படும் விஷயங்கள் எவ்வளவு நடைமுறையானவை என்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள மையப்பொருளை பயன்படுத்த வேண்டும். இந்தப் பேச்சை கொடுக்க நியமிக்கப்படும் சகோதரர்கள், உரிய நேரத்தில் முடிக்க கவனமாயிருக்க வேண்டும். தேவைப்பட்டால் இவர்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.

பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 10 நிமிடங்கள். இதை, தகுதி வாய்ந்த மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும்; முதல் ஐந்து நிமிடத்தில் அவர் விஷயத்தை சபையின் தேவைகளுக்கேற்ப பொருத்திக் காட்ட வேண்டும். அந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்புப் பகுதியில் எங்கிருந்தும் அவர் குறிப்புகளைக் கூறலாம். நியமிக்கப்பட்ட வாசிப்புப் பகுதியின் சுருக்கமாக மட்டுமே இது இருக்கக்கூடாது. அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு பயனுள்ளது என்பதை சபையார் புரிந்துகொள்ள உதவுவதே இதன் முக்கிய குறிக்கோளாகும். தான் தயாரித்திருக்கும் சிறப்புக் குறிப்புகளைப் பேச்சாளர் ஐந்து நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும். ஏனெனில் சபையார் குறிப்புகளைச் சொல்வதற்கு ஐந்து நிமிடங்களை அவர் ஒதுக்கியாக வேண்டும். பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து தங்களுக்கு ஆர்வமூட்டிய விஷயத்தையும் அதன் பலன்களையும் சுருக்கமாக (30 விநாடிகள் அல்லது குறைவாக) சொல்லுமாறு அவர் சபையாரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். பின்பு மாணாக்கர்கள் வெவ்வேறு வகுப்பறைகளுக்குப் பிரிந்து செல்லும்படி பள்ளிக் கண்காணி சொல்வார்.

பேச்சு நியமிப்பு எண் 2: 4 நிமிடங்கள் அல்லது குறைவாக. இது சகோதரர்களுக்குரிய வாசிப்பு நியமனம். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல் நியமிக்கப்பட்ட பகுதியை மாணாக்கர் வாசிக்க வேண்டும். சங்கீத புத்தகத்திலிருந்து வாசிக்க வேண்டியிருந்தால் அதன் தலைப்பையும் அவர் வாசிக்க வேண்டும். புரிந்துகொள்ளுதல், சரளம், தகுந்த இடங்களில் அழுத்தம், குரல் வேறுபாடு, பொருத்தமான இடங்களில் நிறுத்தம், இயல்பு போன்ற குணங்களோடு வாசிக்க மாணாக்கருக்கு உதவுவதே பள்ளிக் கண்காணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்.

பேச்சு நியமிப்பு எண் 3: 5 நிமிடங்கள். இது ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படும். இந்த நியமிப்பை பெறும் சகோதரிகள், ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தின் பக்கம் 82-⁠ல் உள்ள பட்டியலில் காணப்படும் பேச்சு அமைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது அவற்றில் ஒன்று அவர்களுக்கு நியமிக்கப்படும். கொடுக்கப்பட்ட மையப்பொருளை, சபையின் பிராந்தியத்திற்கு ஏற்றதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கும் வெளி ஊழியத்தின் ஓர் அம்சத்திற்கு மாணாக்கர் பொருத்த வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து அந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்பட்டிருக்கும் பேச்சுகளை புதிய மாணாக்கர்களுக்கு நியமிக்க வேண்டும். மாணாக்கர், நியமிக்கப்பட்ட பொருளை எவ்வாறு படிப்படியாக விவரித்துப் பேசுகிறார் என்றும், வேதவசனங்களைப் பகுத்தாராயவும் பேச்சின் முக்கிய குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும் வீட்டுக்காரருக்கு எவ்வாறு உதவுகிறார் என்றும் பள்ளிக் கண்காணி முக்கியமாக கவனிப்பார். உதவியாளர் ஒருவரை பள்ளிக் கண்காணியே நியமிப்பார்.

பேச்சு நியமிப்பு எண் 4: 5 நிமிடங்கள். நியமிக்கப்பட்ட மையப்பொருளை மாணாக்கர் படிப்படியாக விரிவாக்க வேண்டும். பேச்சுத் தகவலுக்கான பிரசுரம் குறிப்பிடப்படாதபோது நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து இந்தப் பொருளுக்குரிய தகவலை மாணாக்கர் கண்டுபிடிக்க வேண்டும். இது சகோதரருக்கு நியமிக்கப்படுகையில், ராஜ்ய மன்றத்தில் உள்ளவர்களிடம் நேரடியாக பேசுவதைப்போல் அதைக் கொடுக்க வேண்டும். சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், பேச்சு எண் 3-⁠ல் சொல்லப்பட்டதற்கு இசையவே எப்போதும் இந்தப் பேச்சைக் கொடுக்க வேண்டும். பொருத்தமான சந்தர்ப்பங்களில் பள்ளிக் கண்காணி பேச்சு எண் 4-ஐ ஒரு சகோதரருக்கு நியமிக்கலாம். நட்சத்திர குறியிடப்பட்ட (*) பொருளை, சபையாரைப் பார்த்து பேசுவதுபோல் கொடுப்பதற்காக சகோதரர்களுக்கு மட்டுமே நியமிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள்.

நேரம்: ஆலோசனை கூறுபவரின் குறிப்புகள் உட்பட எந்தப் பேச்சையும் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும். பேச்சு நியமிப்பு எண்கள் 2, 3, 4-⁠க்குரிய நேரம் முடிந்ததும் சாதுரியத்துடன் அவற்றை நிறுத்த வேண்டும். பேச்சு பண்பு பற்றிய ஆரம்ப பேச்சு, நியமிப்பு எண் 1, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொடுக்கும் சகோதரர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை வழங்க வேண்டும். அனைவருமே குறித்த நேரத்தில் பேச்சை முடிப்பதற்கு கவனமாயிருக்க வேண்டும். மொத்த நிகழ்ச்சி: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.

ஆலோசனை: 1 நிமிடம். பேச்சு எண் 2, 3, 4 ஆகியவற்றிற்குப் பிறகு, பேச்சில் கவனித்த பாராட்டத்தக்க விஷயங்களைப் பற்றி கட்டியெழுப்பும் விஷயங்களைக் கூற பள்ளிக் கண்காணி ஒரு நிமிடத்திற்கு அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ‘நன்றாயிருந்தது’ என்று வெறுமனே சொல்வது அவருடைய நோக்கமல்ல; மாறாக, பேச்சின் அந்த விஷயம் நன்றாயிருந்ததற்கான குறிப்பிட்ட காரணங்களிடம் கவனத்தைத் திருப்ப வேண்டும். ஒவ்வொரு மாணாக்கரின் தேவைக்கும் ஏற்றவாறு உற்சாகப்படுத்தும் வகையில் கூடுதலான ஆலோசனைகளைக் கூட்டத்திற்குப் பிறகோ மற்றொரு சமயத்திலோ தனிப்பட்ட விதமாக கொடுக்கலாம்.

துணை ஆலோசகர்: மற்றொரு தகுதி வாய்ந்த மூப்பர் இருந்தால், பள்ளிக் கண்காணியோடுகூட துணை ஆலோசகராக நியமிப்புகளைக் கையாள மூப்பர் குழு அவரை தெரிவு செய்யலாம். சபையில் மூப்பர்கள் நிறைய பேர் இருந்தால், இந்நியமிப்புக்கென தகுதி வாய்ந்த வெவ்வேறு மூப்பரை ஒவ்வொரு வருடமும் தெரிவு செய்யலாம். நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளையும் கையாளும் சகோதரர்களுக்கு, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஆலோசனை கொடுப்பதே துணை ஆலோசகருடைய பொறுப்பு. சக மூப்பர்கள் அல்லது உதவி ஊழியர்கள் கொடுக்கும் ஒவ்வொரு பேச்சிற்குப் பிறகும் அவர் அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியதில்லை.

ஆலோசனை படிவம்: பாடப்புத்தகத்தில்.

வாய்மொழி மறுபார்வை: 30 நிமிடங்கள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கண்காணி வாய்மொழி மறுபார்வையை நடத்துவார். அதற்கு முன்பு மேலே சொல்லப்பட்டபடி, பேச்சு பண்பு பற்றி கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படும். நடப்பு வாரம் உட்பட முந்தைய இரண்டு மாதங்கள் பள்ளியில் சிந்தித்தவை வாய்மொழி மறுபார்வையில் கலந்தாலோசிக்கப்படும். வாய்மொழி மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபை வட்டார மாநாட்டிற்கு செல்ல வேண்டியிருந்தால், மறுபார்வையை (அட்டவணைப்படி அந்த வாரத்தில் இருந்திருக்கும் பிற நியமிப்புகளுடன் சேர்த்து), மாநாட்டைத் தொடர்ந்து வருகிற வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்; மாநாட்டைத் தொடர்ந்து வருகிற வார அட்டவணையை மாநாட்டு வாரத்தில் பின்பற்ற வேண்டும். வாய்மொழி மறுபார்வையை நடத்த வேண்டிய வாரத்தில் உங்கள் சபையை வட்டாரக் கண்காணி சந்திக்க வந்தால், அந்த வார அட்டவணைப்படியே பாட்டு, பேச்சு பண்பு, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் ஆகியவற்றை நடத்த வேண்டும். அதற்கடுத்த வார அட்டவணைப்படி போதனா பேச்சை (பேச்சு பண்பை கலந்தாலோசித்த பின் கொடுக்கப்படும் பேச்சை) கொடுக்க வேண்டும். வட்டாரக் கண்காணியின் சந்திப்புக்கு அடுத்து வரும் வாரத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில், அந்த வார அட்டவணைப்படியே பேச்சு பண்பு பற்றி கலந்தாலோசிக்கப்படும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் அளிக்கப்படும்; பின்பு முந்தைய வார வாய்மொழி மறுபார்வை கலந்தாலோசிக்கப்படும்.

அட்டவணை

ஜன. 2 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 29-32 பாட்டு எண் 91

பேச்சு பண்பு: தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து முழுமையாக பயனடையுங்கள் (be-TL பக். 5 பாரா 1–பக். 8 பாரா 1)

எண் 1: கடவுளுடைய வார்த்தையில் இன்பம் காணுங்கள் (be-TL பக். 9 பாரா. 1-5)

எண் 2: 2 நாளாகமம் 30:1-12

எண் 3: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் அசிங்கமான வார்த்தைகளைப் பேசக்கூடாது?

எண் 4: கடவுளுடன் நமக்கு இருக்கும் உறவில் பாவத்தின் பாதிப்பு (rs-TL பக். 374 பாரா 3–பக். 375 பாரா 2)

ஜன. 9 பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 33-36 பாட்டு எண் 144

பேச்சு பண்பு: திருத்தமாக வாசித்தல் (be-TL பக். 83 பாரா 1–பக். 84 பாரா 1)

எண் 1: 2 நாளாகமம்​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 84 பாரா. 34-6)

எண் 2: 2 நாளாகமம் 34:1-11

எண் 3: ஆத்துமா என்னவென்று பைபிள் சொல்கிறது (rs-TL பக். 375 பாரா 4–பக். 376 பாரா 4)

எண் 4: பைபிளின் ஒழுக்க தராதரங்களைக் குறித்து ஒருபோதும் வெட்கப்படாதீர்கள்

ஜன. 16 பைபிள் வாசிப்பு: எஸ்றா 1-5 பாட்டு எண் 137

பேச்சு பண்பு: திருத்தமாக வாசிப்பது எப்படி (be-TL பக். 84 பாரா 2–பக். 85 பாரா 3)

எண் 1: எஸ்றாவிற்கு முன்னுரை (si-TL பக். 85-6 பாரா. 1-7)

எண் 2: எஸ்றா 1:1-11

எண் 3: நேர்மையான மனசாட்சியினால் வரும் பலன்கள்

எண் 4: மிருகங்களும் ஆத்துமாக்கள் (rs-TL பக். 376 பாரா 5–பக். 377 பாரா 5)

ஜன. 23 பைபிள் வாசிப்பு: எஸ்றா 6-10 பாட்டு எண் 106

பேச்சு பண்பு: வார்த்தைகளைத் தெளிவாக சொல்லுதல் (be-TL பக். 86 பாரா. 1-6)

எண் 1: எஸ்றா​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 87 பாரா. 14-18)

எண் 2: எஸ்றா 6:1-12

எண் 3: மரிக்கையில் ஆத்துமாவோ ஆவியோ தொடர்ந்து உயிர்வாழ்வதில்லை (rs-TL பக். 377 பாரா 6–பக். 380 பாரா 1)

எண் 4: aமணவாழ்க்கையைப் பற்றிய கடவுளுடைய கருத்து

ஜன. 30 பைபிள் வாசிப்பு: நெகேமியா 1-4 பாட்டு எண் 161

பேச்சு பண்பு: தெளிவாக பேசுவது எப்படி (be-TL பக். 87 பாரா 1–பக். 88 பாரா 3)

எண் 1: நெகேமியாவுக்கு முன்னுரை (si-TL பக். 88 பாரா. 1-5)

எண் 2: நெகேமியா 2:1-10

எண் 3: மிக முக்கியமான பாதுகாப்பு

எண் 4: பரிசுத்த ஆவி என்பது என்ன (rs-TL பக். 380 பாரா 3–பக். 381 பாரா 1)

பிப். 6 பைபிள் வாசிப்பு: நெகேமியா 5-8 பாட்டு எண் 40

பேச்சு பண்பு: சரியாக உச்சரித்தல்​—⁠கவனிக்க வேண்டிய குறிப்புகள் (be-TL பக். 89 பாரா 1–பக். 90 பாரா 2)

எண் 1: தினந்தோறும் பைபிளை வாசியுங்கள் (be-TL பக். 10 பாரா 1–பக். 12 பாரா 3)

எண் 2: நெகேமியா 5:1-13

எண் 3: ஒருவரிடம் பரிசுத்த ஆவி இருப்பதற்கான அத்தாட்சி (rs-TL பக். 381 பாரா 3–பக். 382 பாரா 2)

எண் 4: ‘இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்’ (நீதி. 4:23)

பிப். 13 பைபிள் வாசிப்பு: நெகேமியா 9-11 பாட்டு எண் 159

பேச்சு பண்பு: உச்சரிப்பதில் முன்னேறுவதற்கான வழிகள் (be-TL பக். 90 பாரா 3–பக். 92)

எண் 1: போரை அல்ல, சமாதானத்தை கற்றுக்கொள்ளுதல் (w-TL04 1/1 பக். 6 பாரா 8–பக். 7 பாரா 5)

எண் 2: நெகேமியா 10:28-37

எண் 3: யெகோவாவின் அன்பிற்கு அத்தாட்சி

எண் 4: மனிதர் மரிக்கையில் தப்பிப்பிழைக்கிற ஆவிபாகம் எதுவும் இல்லை (rs-TL பக். 382 பாரா 6–பக். 383 பாரா 3)

பிப். 20 பைபிள் வாசிப்பு: நெகேமியா 12-13 பாட்டு எண் 118

பேச்சு பண்பு: சரளம் (be-TL பக். 93 பாரா 1–பக். 94 பாரா 3)

எண் 1: நெகேமியா​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 90-1 பாரா. 16-19)

எண் 2: நெகேமியா 13:1-14

எண் 3: மரித்தவர்களுடன் தொடர்பு கொள்வது ஏன் சாத்தியமல்ல (rs-TL பக். 384 பாரா 3–பக். 385 பாரா 4)

எண் 4: bவன்முறை நிறைந்த வீடியோ கேம்ஸுகள் கிறிஸ்தவர்களுக்கு உரியவை அல்ல

பிப். 27 பைபிள் வாசிப்பு: எஸ்தர் 1-5 பாட்டு எண் 215

பேச்சு பண்பு: சரளமாக பேசுவதில் முன்னேறுவது எப்படி (be-TL பக். 94 பாரா 4–பக். 96 பாரா 3, பக்கம் 95-⁠ல் உள்ள பெட்டி நீங்கலாக)

வாய்மொழி மறுபார்வை

மார்ச் 6 பைபிள் வாசிப்பு: எஸ்தர் 6-10 பாட்டு எண் 74

பேச்சு பண்பு: திக்குவதை சமாளித்தல் (be-TL பக். 95, பெட்டி)

எண் 1: எஸ்தர்​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 91-4 பாரா. 1-6, 16-18)

எண் 2: எஸ்தர் 6:1-10

எண் 3: சாந்தமான பதில் கடுங்கோபத்தையே தணித்துவிடும்

எண் 4: ஆவியுலகத்துடன் தொடர்புடைய எந்தப் பழக்கவழக்கத்தையும் உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் கைக்கொள்ள மறுக்கின்றனர் (rs-TL பக். 385 பாரா 5–பக். 387 பாரா 4)

மார்ச் 13 பைபிள் வாசிப்பு: யோபு 1-5 பாட்டு எண் 160

பேச்சு பண்பு: நிறுத்தக் குறிகளிலும், கருத்து மாறுகையிலும் நிறுத்துவது (be-TL பக். 97 பாரா 1–பக். 98 பாரா 5)

எண் 1: யோபுவுக்கு முன்னுரை (si-TL பக். 95-6 பாரா. 1-6)

எண் 2: யோபு 2:1-13

எண் 3: பேய் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஆர்வம் காட்டாதீர்கள் (rs-TL பக். 387 பாரா 5–பக். 388 பாரா 3)

எண் 4: உண்மை கிறிஸ்தவர்கள் ஏன் முறுமுறுக்கக் கூடாது

மார்ச் 20 பைபிள் வாசிப்பு: யோபு 6-10 பாட்டு எண் 214

பேச்சு பண்பு: அழுத்தத்திற்காகவும், மற்றவர்கள் சொல்வதை கேட்பதற்காகவும் நிறுத்துவது (be-TL பக். 99 பாரா 1–பக். 100 பாரா 4)

எண் 1: ஆன்மீக மதிப்பீடுகளின் மதிப்பு (w-TL04 10/15 பக். 4 பாரா 2–பக். 5 பாரா 4)

எண் 2: யோபு 7:1-21

எண் 3: இருதய சுத்தம்​—⁠எதை அர்த்தப்படுத்துகிறது

எண் 4: ஆவியுலகப் பாதிப்பிலிருந்து எவ்வாறு விடுவித்துக்கொள்வது (rs-TL பக். 388 பாரா 4–பக். 389 பாரா 4)

மார்ச் 27 பைபிள் வாசிப்பு: யோபு 11-15 பாட்டு எண் 8

பேச்சு பண்பு: தகுந்த இடங்களில் அழுத்துதல் (be-TL பக். 101 பாரா 1–பக். 102 பாரா 3)

எண் 1: ‘கேட்கும் விதத்தைக் குறித்து கவனமாக இருங்கள்’ (be-TL பக். 13 பாரா 1–பக். 14 பாரா 5)

எண் 2: யோபு 12:1-25

எண் 3: சுதந்திர மனப்பான்மைக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள் (rs-TL பக். 390 பாரா 1–பக். 391 பாரா 1)

எண் 4: ஊழியம் நமக்கு மகிழ்ச்சி தருவது ஏன்?

ஏப்ரல் 3 பைபிள் வாசிப்பு: யோபு 16-20 பாட்டு எண் 50

பேச்சு பண்பு: தகுந்த இடங்களில் அழுத்துவதில் முன்னேறுவது (be-TL பக். 102 பாரா 4–பக். 104 பாரா 3)

எண் 1: கடவுள் மீதுள்ள அன்பை காட்டும் வழிகள் (w-TL04 3/1 பக். 19-21)

எண் 2: யோபு 16:1-22

எண் 3: தம்மை வணங்கும்படி ஜனங்களை யெகோவா எப்படி இழுக்கிறார்

எண் 4: cபெருமை மற்றும் கலக மனப்பான்மையினால் வரும் ஆபத்துகள் (rs-TL பக். 391 பாரா. 2-3)

ஏப்ரல் 10 பைபிள் வாசிப்பு: யோபு 21-27 பாட்டு எண் 119

பேச்சு பண்பு: முக்கிய கருத்துக்களை வலியுறுத்துதல் (be-TL பக். 105 பாரா 1–பக். 106 பாரா 1)

எண் 1: ஆன்மீக மதிப்பீடுகள் பலன் தருகின்றன (w-TL04 10/15 பக். 5 பாரா 5–பக். 7 பாரா 2)

எண் 2: யோபு 24:1-20

எண் 3: இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை யெகோவா தருகிறார்

எண் 4: dமாம்ச ஆசைகளுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள் (rs-TL பக். 392 பாரா 1)

ஏப்ரல் 17 பைபிள் வாசிப்பு: யோபு 28-32 பாட்டு எண் 100

பேச்சு பண்பு: கேட்போருக்குப் போதிய சத்தம் (be-TL பக். 107 பாரா 1–பக். 108 பாரா 4)

எண் 1: கூட்டங்களிலும் மாநாடுகளிலும் செவிகொடுப்பது (be-TL பக். 15 பாரா 1–பக். 16 பாரா 5)

எண் 2: யோபு 29:1-25

எண் 3: கண்களின் இச்சை ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்காதீர்கள் (rs-TL பக். 392 பாரா. 2-3)

எண் 4: இயேசுவின் போதனாமுறையைக் கண்ட மக்கள் ஏன் ஆச்சரியமடைந்தனர்

ஏப்ரல் 24 பைபிள் வாசிப்பு: யோபு 33-37 பாட்டு எண் 94

பேச்சு பண்பு: சத்தமாக பேசுவதில் முன்னேறுவது எப்படி (be-TL பக். 108 பாரா 5–பக். 110 பாரா 2)

வாய்மொழி மறுபார்வை

மே 1 பைபிள் வாசிப்பு: யோபு 38-42 பாட்டு எண் 154

பேச்சு பண்பு: குரல் வேறுபாடு​—⁠உங்கள் சத்தத்தை பொருத்தமாக மாற்றுங்கள் (be-TL பக். 111 பாரா 1–பக். 112 பாரா 2)

எண் 1: யோபு​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 100 பாரா. 39-43)

எண் 2: யோபு 38:1-24

எண் 3: எவ்வாறு ஏசாயா 60:22 இன்று நிறைவேறி வருகிறது?

எண் 4: eதிட்டுவதும் வன்முறைச் செயலும் மாம்சத்திற்குரியவை (rs-TL பக். 392 பாரா 4)

மே 8 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 1-10 பாட்டு எண் 168

பேச்சு பண்பு: குரல் வேறுபாடு​—⁠உங்கள் வேகத்தை மாற்றுங்கள் (be-TL பக். 112 பாரா. 3-6)

எண் 1: சங்கீதத்திற்கு முன்னுரை​—⁠பகுதி 1 (si-TL பக். 101 பாரா. 1-5)

எண் 2: சங்கீதம் 4:1–5:12

எண் 3: கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள், மனிதரிடம் அல்ல (rs-TL பக். 393 பாரா. 1-2)

எண் 4: ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொள்ளுதல்

மே 15 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 11-18 பாட்டு எண் 217

பேச்சு பண்பு: குரல் வேறுபாடு​—⁠உங்கள் குரலின் ஏற்றத்தாழ்வை மாற்றுங்கள் (be-TL பக். 113 பாரா 1–பக். 114 பாரா 2)

எண் 1: சங்கீதத்திற்கு முன்னுரை​—⁠பகுதி 2 (si-TL பக். 102 பாரா. 6-11)

எண் 2: சங்கீதம் 14:1–16:6

எண் 3: எந்த விதங்களில் உண்மை கிறிஸ்தவர்கள் இவ்வுலகத்தின் பாகமாக இல்லாதிருக்கின்றனர்?

எண் 4: மனித துன்பத்திற்கு யார் பொறுப்பாளி? (rs-TL பக். 394 பாரா. 1-2)

மே 22 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 19-25 பாட்டு எண் 23

பேச்சு பண்பு: உணர்ச்சியோடு பேசுங்கள் (be-TL பக். 115 பாரா 1–பக். 116 பாரா 4)

எண் 1: சிறந்த உட்பார்வை நன்மதிப்பைச் சேர்க்கும் (w-TL04 7/15 பக். 27 பாரா 4–பக். 28 பாரா 4)

எண் 2: சங்கீதம் 22:1-22

எண் 3: துன்பம் எவ்வாறு தொடங்கினது? (rs-TL பக். 394 பாரா 3–பக். 395 பாரா 1)

எண் 4: fகடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் யாவை, அவற்றுக்கு நாம் ஏன் செவிகொடுக்க வேண்டும்?

மே 29 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 26-33 பாட்டு எண் 203

பேச்சு பண்பு: தகவலுக்குப் பொருத்தமான உற்சாகம் (be-TL பக். 117 பாரா. 1-5)

எண் 1: உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம் (be-TL பக். 17 பாரா 1–பக். 19 பாரா 1)

எண் 2: சங்கீதம் 30:1–31:8

எண் 3: எவ்வழிகளில் சத்தியம் ஒருவரை விடுதலையாக்குகிறது?

எண் 4: மிகுந்த துன்பத்தை நாம் எவ்வாறு தவிர்க்கலாம் (rs-TL பக். 395 பாரா. 2-3)

ஜூன் 5 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 34-37 பாட்டு எண் 167

பேச்சு பண்பு: கனிவைக் காட்டுதல் (be-TL பக். 118 பாரா 1–பக். 119 பாரா 5)

எண் 1: ஜெபத்தின் வல்லமை (w-TL04 8/15 பக். 18 பாரா 6–பக். 19 பாரா 10)

எண் 2: சங்கீதம் 34:1-22

எண் 3: அன்பான கடவுள் துன்பம் இவ்வளவு காலம் தொடர்ந்திருக்க ஏன் அனுமதித்திருக்கிறார் (rs-TL பக். 396 பாரா 2)

எண் 4: நாம் என்ன வகையான விக்கிரக ஆராதனைகளுக்கு விலகியோட வேண்டும்?

ஜூன் 12 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 38-44 பாட்டு எண் 216

பேச்சு பண்பு: உணர்ச்சியை வெளிக்காட்டுதல் (be-TL பக். 119 பாரா 6–பக். 120 பாரா 5)

எண் 1: ஞாபகம் வைப்பதில் கடவுளுடைய ஆவியின் பங்கு (be-TL பக். 19 பாரா 2–பக். 20 பாரா 3)

எண் 2: சங்கீதம் 40:1-17

எண் 3: மெய்யான அறிவியல் பைபிளுக்கு முரண்படுவதில்லை

எண் 4: தம்முடைய ஊழியர்களின்மீது வந்திருக்கும் எல்லாத் தீங்கையும் கடவுள் சரிசெய்வார் (rs-TL பக். 396 பாரா 3–பக். 397 பாரா 1)

ஜூன் 19 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 45-51 பாட்டு எண் 104

பேச்சு பண்பு: சைகைகளும் முகபாவங்களும் ஏன் முக்கியம் (be-TL பக். 121 பாரா. 1-4)

எண் 1: இயேசு வருவது எப்போது? (w-TL04 3/1 பக். 16, பெட்டி)

எண் 2: சங்கீதம் 46:1–47:9

எண் 3: ஆதாமின் பாவத்தை கடவுள் கண்டுகொள்ளாமல் ஏன் விடவில்லை (rs-TL பக். 397 பாரா. 2-3)

எண் 4: கிறிஸ்தவர்கள் பலவீனமாயிருக்கும்போதே எப்படி பலமுள்ளவர்களாயிருக்க முடியும்? (2 கொ. 12:10)

ஜூன் 26 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 52-59 பாட்டு எண் 103

பேச்சு பண்பு: சைகைகளையும் முகபாவங்களையும் காட்டுதல் (be-TL பக். 122 பாரா 1–பக். 123 பாரா 4)

வாய்மொழி மறுபார்வை

ஜூலை 3 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 60-68 பாட்டு எண் 45

பேச்சு பண்பு: ஊழியத்தில் சந்திப்பவரை பார்த்துப் பேசுதல் (be-TL பக். 124 பாரா 1–பக். 125 பாரா 4)

எண் 1: யெகோவாவின் மனத்தாழ்மை நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது (w-TL04 11/1 பக். 29-30)

எண் 2: சங்கீதம் 60:1–61:8

எண் 3: கிறிஸ்தவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் கடவுளுடைய சட்டங்களை மீறினாலும் பரவாயில்லை என்று நினைக்கலாமா?

எண் 4: உடல் மற்றும் மன ஊனங்களுக்கு கடவுள் காரணமில்லை (rs-TL பக். 397 பாரா. 4-6)

ஜூலை 10 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 69-73 பாட்டு எண் 225

பேச்சு பண்பு: சபையாரை பார்த்துப் பேசுதல் (be-TL பக். 126 பாரா 1–பக். 127 பாரா 3)

எண் 1: ஏன் சிரத்தையோடு வாசிக்க வேண்டும்? (be-TL பக். 21 பாரா 1–பக். 23 பாரா 3)

எண் 2: சங்கீதம் 71:1-18

எண் 3: கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலிக்குரிய நன்மைகளை யெகோவா அன்புடன் பிள்ளைகளுக்கு வழங்குகிறார் (rs-TL பக். 398 பாரா 1)

எண் 4: gகிறிஸ்தவர்கள் ஏன் பட்சபாதம் காட்டக்கூடாது?

ஜூலை 17 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 74-78 பாட்டு எண் 28

பேச்சு பண்பு: வெளி ஊழியத்தில் இயல்பு (be-TL பக். 128 பாரா 1–பக். 129 பாரா 1)

எண் 1: சரியான உள்நோக்கத்தோடு வாசியுங்கள் (be-TL பக். 23 பாரா 4–பக். 26 பாரா 4)

எண் 2: சங்கீதம் 75:1–76:12

எண் 3: யெகோவாவைத் தேடுவதில் என்ன உட்பட்டுள்ளது? (செப். 2:3)

எண் 4: இயற்கைப் பேரழிவுகளைக் கொண்டு ஜனங்களை கடவுள் தண்டிப்பதில்லை (rs-TL பக். 398 பாரா. 2-4)

ஜூலை 24 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 79-86 பாட்டு எண் 112

பேச்சு பண்பு: மேடையில் இயல்பு (be-TL பக். 129 பாரா 2–பக். 130 பாரா 1)

எண் 1: ‘செம்மையானவனுடைய கூடாரம் செழிக்கும்’ (w-TL04 11/15 பக். 26 பாரா 1–பக். 28 பாரா 2)

எண் 2: சங்கீதம் 82:1–83:⁠18

எண் 3: துன்பங்களை, கடவுள் தண்டிப்பதற்கு அத்தாட்சியென கருதக்கூடாது (rs-TL பக். 399 பாரா. 1-2)

எண் 4: அபூரண மனிதர்கள் கடவுளை உண்மையில் பிரியப்படுத்த முடியுமா?

ஜூலை 31 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 87-91 பாட்டு எண் 57

பேச்சு பண்பு: மற்றவர்கள் முன் வாசிக்கையில் இயல்பு (be-TL பக். 130 பாரா. 2-4)

எண் 1: ‘அறிவு எளிதில் வந்தால்’; நம்மை ஞானம் வழிநடத்துகையில் (w-TL04 11/15 பக். 28 பாரா 3–பக். 29 பாரா 7)

எண் 2: சங்கீதம் 89:1-21

எண் 3: பைபிளைப் படிப்பது நம் வணக்கத்தின் பாகம்

எண் 4: பொருளாதாரச் செழிப்பை கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு அத்தாட்சியாகக் கருதக்கூடாது (rs-TL பக். 399 பாரா. 3-4)

ஆக. 7 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 92-101 பாட்டு எண் 190

பேச்சு பண்பு: சுத்தமான தோற்றம் செய்தியை அலங்கரிக்கிறது (be-TL பக். 131 பாரா. 1-3)

எண் 1: எப்படி படிப்பது (be-TL பக். 27 பாரா 1–பக். 31 பாரா 2)

எண் 2: சங்கீதம் 92:1–93:5

எண் 3: அந்நிய பாஷைகளில் பேசுவது பரிசுத்த ஆவி இருப்பதற்கு அத்தாட்சியா? (rs-TL பக். 400 பாரா 4–பக். 401 பாரா 3)

எண் 4: ஒழுக்கத்தில் உத்தமமாக இருப்பதன் அவசியம்

ஆக. 14 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 102-105 பாட்டு எண் 1

பேச்சு பண்பு: உடை மற்றும் தோற்றத்தின் மூலம் அடக்கத்தையும் தெளிந்த புத்தியையும் எப்படி வெளிக்காட்டலாம் (be-TL பக். 131 பாரா 4–பக். 132 பாரா 3)

எண் 1: ‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது!’ (w-TL04 11/15 பக். 8-9)

எண் 2: சங்கீதம் 104:1-24

எண் 3: நாம் ஏன் விழிப்புடன் இருக்க வேண்டும்

எண் 4: இன்று அந்நிய பாஷைகளில் பேசுவது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பேசியதிலிருந்து ஏன் வேறுபட்டுள்ளது? (rs-TL பக். 401 பாரா 4–பக். 402 பாரா 3)

ஆக. 21 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 106-109 பாட்டு எண் 201

பேச்சு பண்பு: சீரான உடையின் மதிப்பு (be-TL பக். 132 பாரா 4–பக். 133 பாரா 1)

எண் 1: இளைஞர்களே​—⁠கண்மூடித்தனமாக சகாக்களை பின்பற்றாதீர்கள் (w-TL04 10/15 பக். 22 பாரா 4–பக். 24 பாரா 5)

எண் 2: சங்கீதம் 107:20-43

எண் 3: கடவுளுடைய ஆவியைப் பெற்றிருப்பதாக சிலர் உரிமை பாராட்டுவது பற்றி ஆராய கடவுளுடைய வார்த்தை உதவுகிறது (rs-TL பக். 402 பாரா. 5-8)

எண் 4: நாம் எவ்வழிகளில் கடவுளைப் பின்பற்றலாம்?

ஆக. 28 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 110-118 பாட்டு எண் 125

பேச்சு பண்பு: சிறந்த தோற்றம் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காதிருக்க துணைபுரிகிறது (be-TL பக். 133 பாரா. 2-4)

வாய்மொழி மறுபார்வை

செப். 4 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 119 பாட்டு எண் 59

பேச்சு பண்பு: நிற்கும் விதமும் சுத்தமான பொருட்களும் (be-TL பக். 133 பாரா 5–பக். 134 பாரா 4)

எண் 1: படிப்பு பலன் தரும் (be-TL பக். 31 பாரா 3–பக். 32 பாரா 4)

எண் 2: சங்கீதம் 119:25-48

எண் 3: அரசாங்க அதிகாரிகளுக்கு நாம் ஏன் மரியாதை காட்ட வேண்டும்?

எண் 4: அந்நிய பாஷைகளைப் பேசுவது உண்மையான கிறிஸ்தவர்களை அடையாளம் காட்டுவதில்லை (rs-TL பக். 403 பாரா. 1-3)

செப். 11 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 120-134 பாட்டு எண் 65

பேச்சு பண்பு: பேச்சு சம்பந்தமான கவலையை எப்படி குறைப்பது (be-TL பக். 135 பாரா 1–பக். 137 பாரா 2)

எண் 1: ஆராய்ச்சி செய்வது எப்படி (be-TL பக். 33 பாரா 1–பக். 35 பாரா 4)

எண் 2: சங்கீதம் 121:1–123:4

எண் 3: அந்நிய பாஷைகளில் பேசும் வரம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கவிருந்தது? (rs-TL பக். 403 பாரா 4–பக். 404 பாரா 1)

எண் 4: உயர்வு நவிற்சி என்பது என்ன, இயேசு அதை எப்படி பயன்படுத்தினார்?

செப். 18 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 135-141 பாட்டு எண் 97

பேச்சு பண்பு: நிதானத்தைப் பெறுவது எப்படி (be-TL பக். 137 பாரா 3–பக். 138 பாரா 6)

எண் 1: சங்கீதம்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 1 (si-TL பக். 104-5 பாரா. 23-7)

எண் 2: சங்கீதம் 136:1-26

எண் 3: நினைவுநாள் ஆசரிப்பு ஒரு கூட்டுப் போஜனமாய் இருப்பது எவ்வாறு?

எண் 4: hதிரித்துவம் பைபிள் போதனையல்ல (rs-TL பக். 405 பாரா 1–பக். 411 பாரா 3)

செப். 25 பைபிள் வாசிப்பு: சங்கீதம் 142-150 பாட்டு எண் 5

பேச்சு பண்பு: பேச்சுக்களின் சத்தத்தை அதிகரிப்பதன் அவசியம் (be-TL பக். 139 பாரா 1–பக். 140 பாரா 1)

எண் 1: சங்கீதம்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 2 (si-TL பக். 105-6 பாரா. 28–32)

எண் 2: சங்கீதம் 142:1–143:12

எண் 3: i‘உங்களுக்கு திரித்துவத்தில் நம்பிக்கை உண்டா?’ என்று ஒருவர் கேட்டால் (rs-TL பக். 425 பாரா 3–பக். 426 பாரா 4)

எண் 4: மற்றவர்களுடைய தேவைகளுக்கு எவ்வழிகளில் நாம் சிரத்தை காட்டலாம்?

அக். 2 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 1-6 பாட்டு எண் 111

பேச்சு பண்பு: மைக்கை திறம்பட பயன்படுத்துங்கள் (be-TL பக். 140 பாரா 2–பக். 142 பாரா 2)

எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை​—⁠பகுதி 1 (si-TL பக். 106-7 பாரா. 1-5)

எண் 2: நீதிமொழிகள் 5:1-23

எண் 3: பொல்லாங்கு அவ்வளவு அதிகம் இருந்துவருவதேன்? (rs-TL பக். 427 பாரா. 1-4)

எண் 4: jகட்டுக்கதைகளைப் பரப்பாதீர்கள் (2 தீ. 4:4)

அக். 9 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 7-11 பாட்டு எண் 73

பேச்சு பண்பு: பைபிளை பயன்படுத்தி பதிலளித்தல் (be-TL பக். 143 பாரா. 1-3)

எண் 1: நீதிமொழிகளுக்கு முன்னுரை​—⁠பகுதி 2 (si-TL பக். 107-8 பாரா. 6-11)

எண் 2: நீதிமொழிகள் 7:1-27

எண் 3: கிறிஸ்தவ நடுநிலைமை​—⁠நம் சகோதரத்துவத்தின் ஐக்கியத்திற்கு உதவுகிறது

எண் 4: பொல்லாங்கை கடவுள் ஏன் அனுமதிக்கிறார்? (rs-TL பக். 428 பாரா 1–பக். 429 பாரா 1)

அக். 16 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 12-16 பாட்டு எண் 180

பேச்சு பண்பு: பைபிளை திறம்பட்ட முறையில் பயன்படுத்துவது எப்படி (be-TL பக். 144 பாரா. 1-4)

எண் 1: ஆராய்ச்சிக்கான மற்ற சாதனங்களைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல் (be-TL பக். 35 பாரா 3–பக். 38 பாரா 4)

எண் 2: நீதிமொழிகள் 14:1-21

எண் 3: கடவுள் பொல்லாங்கை அனுமதித்திருப்பது நமக்கு எவ்வாறு நன்மையாய் இருந்திருக்கிறது? (rs-TL பக். 429 பாரா 2–பக். 430 பாரா 1)

எண் 4: கூட்டங்களில் கூர்ந்து கவனிக்க எது நமக்கு உதவும்?

அக். 23 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 17-21 பாட்டு எண் 131

பேச்சு பண்பு: பைபிளை எடுத்துப் பார்க்க உற்சாகப்படுத்துதல் (be-TL பக். 145-6)

எண் 1: நீதிமொழிகள்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 1 (si-TL பக். 109-10 பாரா. 19-28)

எண் 2: நீதிமொழிகள் 17:1-20

எண் 3: முதியோரைக் கிறிஸ்தவர்கள் எப்படிக் கருதுகிறார்கள்

எண் 4: kபெண்களைப் பற்றிய பைபிளின் கருத்து என்ன? (rs-TL பக். 431 பாரா. 2-3)

அக். 30 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 22-26 பாட்டு எண் 9

பேச்சு பண்பு: வசனங்களைத் திறம்பட அறிமுகப்படுத்துவதன் அவசியம் (be-TL பக். 147 பாரா 1–பக். 148 பாரா 2)

வாய்மொழி மறுபார்வை

நவ. 6 பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 27-31 பாட்டு எண் 51

பேச்சு பண்பு: வசனங்களை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தல் (be-TL பக். 148 பாரா 3–பக். 149 பாரா 2)

எண் 1: நீதிமொழிகள்​—⁠ஏன் பயனுள்ளது​—⁠பகுதி 2 (si-TL பக். 110-11 பாரா. 29-38)

எண் 2: நீதிமொழிகள் 28:1-18

எண் 3: ஆண்களுக்குத் தலைமை வகிப்பை அளித்தது பெண்களை மதிப்புக்குறைவுள்ளவர்களாக்குகிறதா? (rs-TL பக். 432 பாரா. 1-3)

எண் 4: ஊழியத்தில் சந்திப்பவர்களை நாம் வெளித்தோற்றத்தை வைத்து ஏன் முடிவு செய்துவிடக் கூடாது?

நவ. 13 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 1-6 பாட்டு எண் 25

பேச்சு பண்பு: தகுந்த அழுத்தம் கொடுப்பது உணர்ச்சியை உட்படுத்துகிறது (be-TL பக். 150 பாரா. 1-2)

எண் 1: பிரசங்கிக்கு முன்னுரை (si-TL பக். 112-13 பாரா. 1-8)

எண் 2: பிரசங்கி 5:1-15

எண் 3: பைபிள் சத்தியங்கள் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் எப்படி மறைக்கப்பட்டுள்ளன? (மத். 11:25)

எண் 4: பெண்கள் போதகர்களாக இருக்க வேண்டுமா? (rs-TL பக். 433 பாரா. 1-2)

நவ. 20 பைபிள் வாசிப்பு: பிரசங்கி 7-12 பாட்டு எண் 37

பேச்சு பண்பு: சரியான வார்த்தைகளை வலியுறுத்துங்கள் (be-TL பக். 150 பாரா 3–பக். 151 பாரா 2)

எண் 1: பிரசங்கி​—⁠ஏன் பயனுள்ளது (si-TL பக். 114 பாரா. 15-19)

எண் 2: பிரசங்கி 9:1-12

எண் 3: குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ பெண்கள் ஏன் தலையில் முக்காடிட்டுக்கொள்கிறார்கள்? (rs-TL பக். 433 பாரா 3–பக். 434 பாரா 1)

எண் 4: பொறாமை​—⁠ஏன் கூடாது?

நவ. 27 பைபிள் வாசிப்பு: உன்னதப்பாட்டு 1-8 பாட்டு எண் 11

பேச்சு பண்பு: அழுத்தம் கொடுக்கும் முறைகள் (be-TL பக். 151 பாரா 3–பக். 152 பாரா 5)

எண் 1: உன்னதப்பாட்டு​—⁠முன்னுரை, ஏன் பயனுள்ளது (si-TL பக். 115-17 பாரா. 1-4, 16-18)

எண் 2: உன்னதப்பாட்டு 7:1–8:4

எண் 3: கிறிஸ்தவர்கள் ஏன் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அடக்கமாகவும் உடையணிய வேண்டும்?

எண் 4: பெண்கள் சிங்காரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதோ ஆபரணங்கள் அணிவதோ சரியா? (rs-TL பக். 435 பாரா. 1-3)

டிச. 4 பைபிள் வாசிப்பு: ஏசாயா 1-5 பாட்டு எண் 90

பேச்சு பண்பு: வசனங்களைச் சரியாக பொருத்துதல் (be-TL பக். 153 பாரா 1–பக். 154 பாரா 3)

எண் 1: ஏசாயாவிற்கு முன்னுரை (si-TL பக். 118-19 பாரா. 1-8)

எண் 2: ஏசாயா 3:1-15

எண் 3: இந்த உலகம் அக்கினியால் அழிக்கப்படுமா? (rs-TL பக். 436 பாரா. 1-2)

எண் 4: lகிறிஸ்தவர்கள் ஏன் ‘கோபிக்கிறதற்குத் தாமதிக்க’ வேண்டும்? (யாக். 1:19)

டிச. 11 பைபிள் வாசிப்பு: ஏசாயா 6-10 பாட்டு எண் 204

பேச்சு பண்பு: வசனத்தைத் தெளிவாக பொருத்திக் காட்டுங்கள் (be-TL பக். 154 பாரா 4–பக். 155 பாரா 4)

எண் 1: குறிப்புத்தாளைத் தயாரித்தல் (be-TL பக். 39-42)

எண் 2: ஏசாயா 10:1-14

எண் 3: மன்னிக்கிறவர்களாய் இருப்பது ஏன் அவ்வளவு முக்கியம்?

எண் 4: இந்த உலகத்தை ஆளுகிறவர் யார்​—⁠கடவுளா சாத்தானா? (rs-TL பக். 436 பாரா 3–பக். 437 பாரா 2)

டிச. 18 பைபிள் வாசிப்பு: ஏசாயா 11-16 பாட்டு எண் 47

பேச்சு பண்பு: வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுங்கள் (be-TL பக். 155 பாரா 5–பக். 156 பாரா 5)

எண் 1: இளைஞர்களே​—⁠பெற்றோர் உங்கள் இருதயத்தைக் காத்திட அனுமதியுங்கள்! (w-TL04 10/15 பக். 20 பாரா 1–பக். 22 பாரா 3)

எண் 2: ஏசாயா 11:1-12

எண் 3: இவ்வுலகத்தினிடமும் இவ்வுலகத்தின் பாகமாக இருக்கிறவர்களிடமும் உண்மையான கிறிஸ்தவர்களின் மனப்பான்மை என்ன? (rs-TL பக். 437 பாரா 3–பக். 438 பாரா 4)

எண் 4: உண்மை கிறிஸ்தவர்கள் அர்மகெதோன் யுத்தத்தில் பங்கேற்க மாட்டார்கள்

டிச. 25 பைபிள் வாசிப்பு: ஏசாயா 17-23 பாட்டு எண் 53

பேச்சு பண்பு: நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல் (be-TL பக். 157 பாரா 1–பக். 158 பாரா 1)

வாய்மொழி மறுபார்வை

[அடிக்குறிப்புகள்]

a சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

b சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

c சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

d சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

e சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

f சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

g சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

h கொடுக்கப்பட்ட தகவலிலிருந்து, உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற முக்கியமான சில குறிப்புக்களைத் தேர்ந்தெடுங்கள்.

i கொடுக்கப்பட்ட தகவலிலிருந்து, உள்ளூர் பிராந்தியத்தின் தேவைகளை பூர்த்தி செய்கிற முக்கியமான சில குறிப்புக்களைத் தேர்ந்தெடுங்கள்.

j சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

k சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

l சகோதரர்களுக்கு மட்டுமே நியமியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்