ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி அக்டோபர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அக்டோபர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், அதிலுள்ள சில நல்ல அம்சங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். அதோடு, சபை பிராந்தியத்தில் உள்ளவர்களின் மனதைக் கவரக்கூடிய உப கட்டுரைகளிடமும் கவனத்தைத் திருப்புங்கள்.
15 நிமி: உங்களுக்கு நல்ல படிப்புப் பழக்கம் இருக்கிறதா? ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 21-6-லுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. எவற்றையெல்லாம் நம் வாசிப்பில் சேர்த்துக்கொள்ளலாம்? (பக். 21, பெட்டி) நாம் பெற்றுக்கொள்கிற பிரசுரங்களை வாசிப்பது ஏன் முக்கியம்? (பக். 23, பாரா 2) நல்ல படிப்புப் பழக்கத்தை விட்டுவிடாதிருப்பதற்கு உதவும் திறவுகோல் எது? (பக். 26, பாரா. 2-3) காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிப்பதற்கு நீங்கள் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்? அது உங்களுக்கு எவ்வாறு பயன் அளித்திருக்கிறது?
20 நிமி: “தேவவசனத்தைத் தொடர்ந்து தைரியமாகப் பேசுங்கள்.”a தைரியமாகச் சாட்சி கொடுப்பதைக் கடினமாக்குகிற சில சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். அப்படித் தைரியமாகச் சாட்சி கொடுக்க எது அவர்களுக்கு உதவியிருக்கிறது?
பாட்டு 78, முடிவு ஜெபம்.
அக்டோபர் 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலுள்ள 3-வது பகுதியின் அடிப்படையில், பைபிள் படிப்பு நடத்தும்போது வசனங்களை எப்படித் திறம்பட பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி ஓரிரண்டு குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: இன்டர்நெட்டின் ஆபத்துகளைத் தவிருங்கள். ஜனவரி 8, 2005, விழித்தெழு! பக்கங்கள் 18-21-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: “தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—தயவாக நடந்துகொள்வதன் மூலம்.”b ஊழியத்தின்போது மற்றவர்களிடம் நாம் எப்படித் தயவு காண்பிக்கலாம் என சபையாரிடம் கேளுங்கள். நாம் பிரசங்கிக்கிற ஆட்களிடம் இன்னும் என்னென்ன வழிகளில் தனிப்பட்ட அக்கறை காண்பிக்கலாம் என்ற விஷயங்கள் நம் ராஜ்ய ஊழியத்தின் இனிவரும் இதழ்களில் வெளிவரும்.
பாட்டு 2, முடிவு ஜெபம்.
அக்டோபர் 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஜனவரி 2005, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலுள்ள பிரசங்கங்களில் ஒன்றைப் பயன்படுத்தி அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறொரு பிரசங்கத்தைப் பயன்படுத்தி நவம்பர் மாதத்திற்கான பிரசுரங்களை அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.—ஜனவரி 2005, நம் ராஜ்ய ஊழியம், பக். 8, பாரா 5.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: நம்முடைய உடையிலும் தோற்றத்திலும் கடவுளுடைய தராதரங்களைப் பின்பற்றுதல். ஆகஸ்ட் 1, 2002 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 17-19-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். நம்முடைய நேர்த்தியான தோற்றம் சாட்சிகொடுக்க எப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என்பதைப் பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 153, முடிவு ஜெபம்.
அக்டோபர் 31-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். அக்டோபர் மாதத்திற்கான ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி நவம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் நவம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். “எமது அடுத்த இதழில்” என்ற பெட்டியிடம் கவனத்தைத் திருப்பி அடுத்த சந்திப்பிற்காக அஸ்திவாரம் போடுவதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.—நம் ராஜ்ய ஊழியம், அக்டோபர் 1998, பக். 8, பாரா. 7-8-ஐக் காண்க.
15 நிமி: ஆர்வத்தை வளர்க்க பத்திரிகை மார்க்கத்தைப் பயன்படுத்துங்கள். மே 2005, நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 8-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பத்திரிகை மார்க்கத்தை நாம் எப்படி ஆரம்பிக்கலாம்? (பாரா 1) ஒரேவொரு வசனத்தைப் பயன்படுத்தி கலந்தாலோசிப்பதற்கு எப்படித் தயாரிக்கலாம்? (பாரா 3) தேர்ந்தெடுத்த வசனத்தை வாசித்துக் காட்டுவது மட்டுமே ஏன் போதாது? (பாரா 4) நம்மிடம் தவறாமல் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்கிறவர் எவ்வாறு பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளலாம்? (பாரா 5) பத்திரிகை மார்க்கத்தில் சந்திப்பவரிடம் ஒரேவொரு வசனத்தைக் காட்டி பிரஸ்தாபி உரையாடுவது போன்ற ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: உறுதியான, ஆனால் மரியாதைமிக்க இளைஞர்கள். செப்டம்பர் 15, 2002, காவற்கோபுரம், பக்கங்கள் 23-4-ல், “மரியாதைக்குரிய விதத்தில் விலகியிருங்கள்” என்ற உபதலைப்பிலுள்ள பகுதியின் அடிப்படையில் ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு. பள்ளியில் தாங்கள் எதிர்ப்பட்டிருக்கிற சில பிரச்சினைகளைப் பற்றியும், அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க தங்களுக்கு எது உதவியிருக்கிறது என்பதைப் பற்றியும் சொல்வதற்கு ஓரிரண்டு இளைஞர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 222, முடிவு ஜெபம்.
நவம்பர் 7-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: சபை கூட்டங்களின்போது இன்னும் நன்கு கவனிக்க முயலுங்கள். செப்டம்பர் 15, 2002, காவற்கோபுரம், பக்கங்கள் 12-14, பாராக்கள் 11-14-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள், சபை கூட்டங்களிலிருந்து மிகச் சிறந்த விதத்தில் நன்மை அடைய எது தங்களுக்கு உதவியிருக்கிறது என்பதைப் பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “நியாயங்காட்டிப் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.”c சபை பிராந்தியத்தில் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களிடம் தங்களால் எப்படி நியாயங்காட்டிப் பேச முடிந்திருக்கிறது என்பதைச் சொல்லும்படி தேர்ந்தெடுத்த சில பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள்.
பாட்டு 50, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.