பாதுகாத்திடுங்கள்
முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
இந்த உட்சேர்க்கை, முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துவது சம்பந்தமாக நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த தொடர் கட்டுரைகளிலுள்ள முக்கிய குறிப்புகளின் தொகுப்பாகும். இந்த உட்சேர்க்கையை எல்லோருமே பத்திரமாக வைத்துக்கொள்ளும்படியும் பைபிள் படிப்புகளை நடத்துகையில் உபயோகிக்கும்படியும் ஊக்குவிக்கிறோம். அதோடு, இந்த உட்சேர்க்கையில் உள்ள குறிப்புகளை வெளி ஊழியத்திற்கான கூட்டத்தில் சிறப்பித்துக்காட்டலாம். ஊழியக் கண்காணிகள், புத்தகப் படிப்பு குழுக்களைச் சந்திக்கும்போது இதன் அடிப்படையில் பேச்சுகளைத் தரலாம்.
பகுதி 1: பைபிள் படிப்பு என்றால் என்ன?
பரிந்துரைக்கப்பட்ட பிரசுரங்களோடு பைபிளை வைத்து, ஒழுங்காகவும் கிரமமாகவும் கலந்துரையாடினால், அது சுருக்கமாக இருந்தாலும்கூட, அது ஒரு பைபிள் படிப்பே. பைபிள் படிப்பு ஏற்பாட்டை விளக்கிய பின் இரண்டு முறை நீங்கள் படிப்பு நடத்தினால், ஒருவேளை அந்தப் படிப்பு தொடரும் என்று நம்புவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தால், நீங்கள் அதை அறிக்கை செய்யலாம்.—km-TL 7/04 பக். 1.
பரிந்துரைக்கப்படும் பிரசுரங்கள்
◼ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
◼ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
◼ ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
◼ நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்! என்ற சிற்றேட்டை உபயோகித்து, அதிக படிப்பறிவு இல்லாதவர்களிடமும் நன்கு வாசிக்கும் திறமை இல்லாதவர்களிடமும் நீங்கள் படிக்கலாம்.
பகுதி 2: படிப்பை நடத்துவதற்கு தயாரித்தல்
மாணாக்கரின் இருதயத்தை உந்துவிக்கும் விதத்தில் அந்தத் தகவலை தெரிவிப்பது அவசியம். எனவே மாணாக்கரை மனதில் வைத்து முழுமையாக தயாரிக்க வேண்டும்.—km-TL 8/04 பக். 1.
எப்படித் தயாரிப்பது
◼ அதிகாரத்தின் அல்லது பாடத்தின் தலைப்பையும், உபதலைப்புகளையும், படங்களையும் ஆராயுங்கள்.
◼ கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடியுங்கள். அதிலுள்ள முக்கிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் மட்டும் குறித்துக்கொள்ளுங்கள்.
◼ படிப்பின்போது எந்த வசனங்களை வாசிப்பது எனத் தீர்மானியுங்கள். பிரசுரத்திலுள்ள மார்ஜினில் சுருக்கமாகக் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
◼ முக்கிய குறிப்புகளை மீண்டும் சுருக்கமாகத் தயாரித்துக்கொள்ளுங்கள்.
நபருக்கேற்ப படிப்பை நடத்துதல்
◼ மாணாக்கருக்காகவும் அவருடைய தேவைகளுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.
◼ என்னென்ன குறிப்புகள் மாணாக்கருக்குப் புரிந்துகொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கலாம் என்பதை முன்கூட்டியே யோசித்து வையுங்கள்.
◼ சிந்தியுங்கள்: ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அவர் எதைப் புரிந்துகொள்ள வேண்டும், அல்லது எதில் உழைக்க வேண்டும்? அவருடைய இருதயத்தைத் தொடும் விதத்தில் நான் எப்படிப் பேசலாம்?
◼ ஒரு குறிப்பின் அல்லது ஒரு வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணத்தை, விளக்கத்தை, அல்லது சில கேள்விகளைத் தயாரிக்கலாம்.
பகுதி 3: வசனங்களைத் திறம்பட பயன்படுத்துதல்
பைபிள் படிப்புகளை நடத்துவதன் நோக்கமே ஜனங்களை ‘சீஷராக்குவது’தான். இதை நாம் எவ்வாறு செய்கிறோம்? அவர்கள் பைபிள் போதனைகளைப் புரிந்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுவதன் மூலம் இதைச் செய்கிறோம். (மத். 28:19, 20; 1 தெ. 2:13) ஆகவே, பைபிள் படிப்பில் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.—km-TL 11/04 பக். 4.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து போதியுங்கள்
◼ தன்னுடைய சொந்த பைபிளிலிருந்தே வசனங்களை எப்படி எடுப்பது என்பதை மாணாக்கருக்குக் காட்டுங்கள்.
◼ நம் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் வசனங்களைப் படித்து அவற்றைக் கலந்தாலோசியுங்கள்.
◼ கேள்விகளைக் கேளுங்கள். பைபிள் வசனங்களை நீங்கள் விளக்குவதற்குப் பதிலாக மாணாக்கரை விளக்கச் சொல்லுங்கள்.
◼ எளிய நடையில் விளக்குங்கள். ஒரு வசனத்தின் எல்லா அம்சங்களையும் விளக்கத் தேவையில்லை. சிந்திக்கப்படும் விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவசியமானவற்றை மட்டும் சொன்னால் போதும்.
◼ நடைமுறையில் பொருத்திக்காட்டுங்கள். பைபிள் வசனங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாமென மாணாக்கருக்குக் காட்டுங்கள்.
பகுதி 4: தயாரிக்க மாணாக்கருக்குப் பயிற்சியளித்தல்
பாடத்தை முன்கூட்டியே படித்து, பதில்களைக் குறித்துக்கொண்டு, சொந்த வார்த்தையில் எப்படிப் பதிலளிக்கலாம் என யோசிக்கும் மாணாக்கர் மிக விரைவாக ஆவிக்குரிய ரீதியில் முன்னேறுவார். ஆகவே, ஒருவர் தொடர்ந்து பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டவுடனே, அவருடன் சேர்ந்து ஒரு பாடத்தைத் தயாரியுங்கள், இதன் மூலம் படிப்புக்குத் தயாரிக்க நீங்கள் அவருக்குக் கற்றுக்கொடுக்கலாம். பெரும்பாலும், ஒரு முழு அதிகாரத்தையோ அல்லது பாடத்தையோ சேர்ந்து தயாரிப்பது மாணாக்கருக்கு உதவியாக இருக்கும்.—km-TL 12/04 பக். 1
கோடிடுவதும் குறிப்பு எழுதுவதும்
◼ கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு நேரடியான பதிலை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்பதை விளக்குங்கள்.
◼ முக்கிய சொற்களையும், சொற்றொடர்களையும் மட்டுமே நீங்கள் குறித்திருப்பதை உங்களுடைய புத்தகத்திலிருந்து மாணாக்கருக்குக் காட்டுங்கள்.
◼ மேற்கோள் காட்டப்படாத ஒவ்வொரு வசனமும் பாராவில் உள்ள ஒரு குறிப்பை ஆதரிக்கிறது என்பதைக் காண மாணாக்கருக்கு உதவுங்கள். சுருக்கமான குறிப்புகளை ஒரு ஓரத்தில் எவ்வாறு எழுதிக்கொள்ளலாம் என்பதையும் காண்பியுங்கள்.
சுருக்கமான ஆய்வும் மறுபார்வையும்
◼ மாணாக்கர் பாடத்தை நன்கு தயாரிப்பதற்கு முன்பாக, அந்த அதிகாரத்தின் தலைப்பு, உப தலைப்புகள், படங்கள் போன்றவற்றை எவ்வாறு கவனமாக ஆராயலாம் என்பதைக் காட்டுங்கள்.
◼ தயாரிப்பை முடிப்பதற்கு முன்பு, பாடத்தின் முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்ய மாணாக்கரை ஊக்குவியுங்கள்.
பகுதி 5: எவ்வளவு விஷயத்தைப் படிப்பது என தீர்மானித்தல்
எவ்வளவு விஷயத்தைப் படிப்பது என்பது படிப்பை நடத்துபவர், படிக்கிற மாணாக்கர் ஆகிய இருவரின் திறமையையும் சூழ்நிலைகளையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.—km-TL 1/05 பக். 1.
உறுதியான விசுவாசத்தைப் பெற உதவுங்கள்
◼ மாணாக்கர் கடவுளுடைய வார்த்தையைத் தெளிவாகப் புரிந்துகொண்டாரா இல்லையா என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் நாம் சீக்கிரமாய் படிப்பை நடத்தி முடித்துவிடக் கூடாது.
◼ கற்றுக்கொள்ளும் விஷயத்தை மாணாக்கர் நன்கு புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுகிறதோ அவ்வளவு நேரம் செலவிடுங்கள்.
◼ போதனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் வசனங்களைச் சிந்திப்பதற்குப் போதிய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
படிப்புதான் உங்கள் குறி:
◼ மாணாக்கர் சொந்த விஷயங்களைப் பேசிக்கொண்டே இருப்பவரானால் படிப்பு முடிந்தபின் பேசும்படி நாம் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கலாம்.
◼ படிப்பு நடத்தும்போது அதிகம் பேசாமலிருப்பது நல்லது. கூடுதல் குறிப்புகளையோ அனுபவங்களையோ சொல்வதைக் குறைத்துக்கொள்ளலாம். ஏனெனில், மாணாக்கர் அடிப்படை பைபிள் போதனைகளின் திருத்தமான அறிவைப் பெறுவதற்கு அது தடங்கலாக இருக்கும்.
பகுதி 6: மாணாக்கர் கேள்வி கேட்கையில்
பைபிள் படிப்பை முறைப்படி ஆரம்பித்த பிறகு, ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்திற்குத் தாவாமல், பைபிள் போதனைகளை கிரமமாய்க் கலந்தாலோசிப்பதே மிகச் சிறந்தது. இது, திருத்தமான அறிவை அஸ்திவாரமாகப் போடவும், ஆன்மீகத்தில் முன்னேறவும் மாணாக்கருக்கு உதவும்.—km-TL 2/05 பக். 6.
பகுத்தறியுங்கள்
◼ படிக்கும் விஷயத்தோடு சம்பந்தப்பட்ட கேள்விகளை மாணாக்கர் கேட்டால் உடனுக்குடன் பதிலளிக்கலாம்.
◼ படிக்கும் விஷயத்துக்குச் சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டால், அல்லது அது நன்கு ஆராய்ச்சி செய்து பதில் சொல்லவேண்டிய கேள்வியாக இருந்தால், வேறொரு சந்தர்ப்பத்தில் பதில் சொல்வதே சிறந்தது. அப்படிக் கேட்கப்படும் கேள்வியை உடனே எழுதி வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும்.
◼ மாணாக்கருக்கு ஒரு போதனையை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தால், அதைப் பற்றி விளக்கமாகக் கலந்தாலோசிக்கும் வேறு பிரசுரங்களை உபயோகித்து நீங்கள் பேசலாம்.
◼ ஒருவேளை விளக்கிய பின்பும் மாணாக்கர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதை வேறொரு சமயத்தில் கலந்தாலோசிக்கலாம் எனச் சொல்லி வழக்கம்போல் படிப்பைத் தொடரலாம்.
அடக்கம் தேவை
◼ ஒரு கேள்விக்குச் சரியான பதில் உங்களுக்குத் தெரியாவிட்டால், ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிடுவதைத் தவிருங்கள்.
◼ ஆராய்ச்சி செய்ய மாணாக்கருக்குப் படிப்படியாகக் கற்பியுங்கள்.
பகுதி 7: படிப்பின்போது ஜெபிப்பது
பைபிள் மாணாக்கர்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு யெகோவாவின் ஆசீர்வாதம் நிச்சயம் தேவை. எனவே, பைபிள் படிப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஜெபம் செய்வது பொருத்தமானது.—km-TL 3/05 பக். 8.
எப்போது ஜெபத்துடன் படிப்பை ஆரம்பிக்கலாம்
◼ ஆட்கள் கிறிஸ்தவ ஜெபங்களைப் பற்றி அறிந்திருந்தால் பெரும்பாலும் முதல் படிப்பையே ஜெபத்துடன் ஆரம்பிக்கலாம்.
◼ மற்றவர்களுக்கு, எப்போது ஜெபத்துடன் ஆரம்பிப்பது பொருத்தமானது என்பதை விவேகத்துடன் தீர்மானிக்க வேண்டும்.
◼ சங்கீதம் 25:4, 5; 1 யோவான் 5:14 ஆகிய வசனங்களைப் பயன்படுத்தி, ஜெபம் செய்வதன் அவசியத்தைப் புரிய வைக்கலாம்.
◼ யோவான் 15:16-ஐ உபயோகித்து, இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவாவிடம் ஜெபிப்பதன் அவசியத்தை விளக்கலாம்.
ஜெபத்தில் என்ன விஷயங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்
◼ போதனைகளுக்கு ஊற்றுமூலர் யெகோவா என்பதால் அவருக்குத் துதி செலுத்துவது பொருத்தமானது.
◼ மாணாக்கர்மீது நமக்கிருக்கும் உண்மையான கரிசனையைப் பற்றி சொல்லலாம்.
◼ யெகோவா பயன்படுத்துகிற அமைப்பிடம் நமக்கிருக்கும் போற்றுதலைச் சொல்லலாம்.
◼ கற்றுக்கொள்வதைக் கடைப்பிடிப்பதற்கு மாணாக்கர் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்கலாம்.
பகுதி 8: மாணாக்கர்களை அமைப்பிடம் வழிநடத்துவது
மாணாக்கர்களுக்கு பைபிள் கோட்பாடுகளைப் போதிப்பது மட்டுமல்ல, அவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாய் ஆக உதவுவதும் பைபிள் படிப்பின் இலக்காக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் படிப்பின்போது யெகோவாவின் அமைப்பைப் பற்றி ஒரு குறிப்பைச் சொல்ல சில நிமிடங்களைச் செலவிடுங்கள்.—km-TL 4/05 பக். 8.
சபை கூட்டங்கள்
◼ ஒவ்வொரு சபை கூட்டத்தைப் பற்றியும் விளக்குங்கள். படிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலிருந்தே கூட்டங்களுக்கு வரும்படி அழையுங்கள்.
◼ கூட்டங்களில் கேட்ட சிறந்த குறிப்புகளைப் பற்றி அவர்களிடம் சொல்லுங்கள்.
◼ நினைவுநாள் ஆசரிப்பு, மாநாடுகள், வட்டாரக் கண்காணியின் சந்திப்பு போன்றவற்றைப் பற்றி விளக்கி, அதில் கலந்துகொள்ள ஆர்வத்தைத் தூண்டுங்கள்.
◼ நம் பிரசுரங்களிலுள்ள படங்களைக் காட்டி கூட்டங்கள் எப்படி நடக்கின்றன என்பதை அவர்கள் கண்முன் நிறுத்த முயலுங்கள்.
◼ யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டை வாசிக்குமாறு அவர்களை ஊக்குவியுங்கள்.
போற்றுதலை வளர்க்க வீடியோக்களை உபயோகியுங்கள்
◼ யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்கு பின்னுள்ள அமைப்பு
◼ நம் சகோதர கூட்டுறவு
◼ தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல்
◼ பூமியின் கடைக்கோடிகளுக்கு
பகுதி 9: சந்தர்ப்ப சாட்சி கொடுக்க மாணாக்கர்களைத் தயார்படுத்துதல்
பைபிள் படிக்கும் மாணாக்கர்கள் தாங்கள் கற்றுக்கொள்ளும் காரியங்களை விசுவாசிக்க ஆரம்பிக்கும்போது அவர்களால் அதைப் பற்றி பேசாமலிருக்க முடியாது.—km-TL 5/05 பக். 1.
சாட்சி கொடுக்க அவர்களை ஊக்குவியுங்கள்
◼ பைபிள் படிப்பில் சேர்ந்துகொள்ளும்படி நண்பர்களையும் வீட்டிலுள்ள மற்றவர்களையும் அவர்கள் அழைக்க முடியுமா?
◼ பைபிள் படிப்பதற்கு ஆர்வமிருப்பதாக அவர்களுடன் வேலை செய்பவர்களோ, பள்ளி தோழர்களோ, அவர்களுக்குத் தெரிந்தவர்களோ, எப்பொழுதாவது சொல்லியிருக்கிறார்களா?
தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி பேச பயிற்றுவியுங்கள்
◼ பைபிள் படிப்பு நடத்துகையில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், “உங்கள் குடும்பத்தாருக்கு இந்தச் சத்தியத்தை பைபிளிலிருந்து எப்படி விளக்கிக் காட்டுவீர்கள்?” என்று மாணாக்கரிடம் கேளுங்கள்.
◼ யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது மரியாதையோடும் தயவோடும் பேச வேண்டும் என்பதை மாணாக்கர் புரிந்துகொள்ள உதவுங்கள்.
◼ யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? என்ற சிற்றேட்டை உபயோகித்து பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகளையும் செயல்களையும் பற்றிய திருத்தமான தகவலை மாணாக்கர் தன்னுடைய நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் விளக்கலாம்.
பகுதி 10: வெளி ஊழியத்தில் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்தல்
பைபிள் படிக்கும் மாணாக்கர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்குத் தகுதியானவர் என மூப்பர்கள் தீர்மானித்த பிறகு அவர் சபையாருடன் சேர்ந்து பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பிக்கலாம்.—km-TL 6/05 பக். 1.
ஒன்றாகச் சேர்ந்து தயாரிப்பது
◼ மாதிரிப் பிரசங்கங்கள் எங்கே உள்ளன என்பதை மாணாக்கருக்குக் காட்டுங்கள்.
◼ சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமாக உள்ள எளிய பிரசங்கத்தைத் தேர்ந்தெடுக்க மாணாக்கருக்கு உதவுங்கள்.
◼ ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்த அவரை உற்சாகப்படுத்துங்கள்.
◼ ஒன்றுசேர்ந்து ஒத்திகை பாருங்கள். பிராந்தியத்தில் உள்ளவர்கள் பொதுவாக எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்று சொல்லி, அவற்றை அவர் சாமர்த்தியமாகச் சமாளிப்பதற்குக் கற்றுக்கொடுங்கள்.
ஒன்றாகச் சேர்ந்து பிரசங்கிப்பது
◼ நீங்கள் இருவருமாகச் சேர்ந்து தயாரித்த பிரசங்கத்தை நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதை மாணாக்கர் கவனிக்கட்டும்.
◼ மாணாக்கரின் சுபாவத்தையும் திறமைகளையும் கவனத்தில் வையுங்கள். சில சமயங்களில் முழு பிரசங்கத்தையும் அவரைச் சொல்ல வைப்பதற்கு பதிலாக அதன் ஒரு பகுதியை மட்டும் சொல்ல வைப்பது நல்லதாக இருக்கும்.
◼ புதிய பிரஸ்தாபி தவறாமல் ஊழியத்தில் பங்குகொள்ள அட்டவணை போடுவதற்கு உதவுங்கள்.
பகுதி 11: மறுசந்திப்புகளைச் செய்ய மாணாக்கருக்கு உதவுதல்
மறுசந்திப்பு செய்வதற்கான அடித்தளத்தை முதல் சந்திப்பிலேயே அமைக்க வேண்டும். அதற்கு வீட்டுக்காரர்மேல் உள்ளப்பூர்வமான அக்கறை காட்ட மாணாக்கரை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். வீட்டுக்காரரை மனந்திறந்து பேச வைக்கவும், அவர் சொல்வதை நன்கு கவனித்துக் கேட்கவும், அவருடைய ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களை அறிந்துகொள்ளவும் மாணாக்கரைப் படிப்படியாகப் பயிற்றுவிக்க வேண்டும்.—km-TL 7/05 பக். 1.
மறுசந்திப்பு செய்ய தயாரித்தல்
◼ முதல் சந்திப்பில் எழுதிய குறிப்புகளைப் புதிய பிரஸ்தாபியுடன் சேர்ந்து எடுத்துப் பாருங்கள், பிறகு எந்த அம்சம் வீட்டுக்காரரின் கவனத்தைக் கவருமென கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுங்கள்.
◼ பொருத்தமான ஒரு பைபிள் வசனத்தையும், படிப்புக்கான பிரசுரத்திலிருந்து ஒரு பாராவையும் வீட்டுக்காரரிடம் காட்டி சுருக்கமாகப் பேச தயார்செய்யுங்கள்.
◼ முடிவில் கேட்டுவிட்டு வருவதற்கு ஒரு கேள்வியை முன்கூட்டியே தயார்செய்யுங்கள்.
சிரத்தையுடன் மறுசந்திப்பு செய்யுங்கள்
◼ அக்கறை காட்டும் எல்லோரையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகச் சென்று சந்திக்க மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள்.
◼ சந்திக்க முடியாத ஆட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் விடாமுயற்சி தேவைப்படுகிறது என்பதை மாணாக்கருக்கு உணர்த்துங்கள்.
◼ அடுத்த சந்திப்புகளுக்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று சொல்லித் தாருங்கள். தீர்மானித்தபடியே மீண்டும் சென்று சந்திப்பதன் அவசியத்தை உணர்த்துங்கள்.
பகுதி 12: பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, அவற்றைத் தொடர்ந்து நடத்த மாணாக்கர்களுக்கு உதவுதல்
இயேசுவைப் பின்பற்றி ஊழியத்தில் நீங்கள் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருப்பது மிக அவசியம். உங்களுடைய முன்மாதிரியைக் கவனிக்கும் மாணாக்கர்கள், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதுதான் மறுசந்திப்பின் முக்கிய நோக்கம் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.—km-TL 8/05 பக். 1.
ஒரு பைபிள் படிப்பை அளித்தல்
◼ பொதுவாக பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படும் என்ற நீண்ட விளக்கத்தைக் தர வேண்டிய அவசியமில்லை என்று மாணாக்கருக்கு விளக்குங்கள்.
◼ அதற்குப் பதிலாக, படிப்புக்கான புத்தகத்திலிருந்து ஓரிரண்டு பாராவை மட்டும் உபயோகித்து படிப்பு எப்படி நடத்தப்படும் என்று வீட்டுக்காரருக்குக் காட்டலாம்.
◼ பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஓர் ஆலோசனையைப் படித்துப் பழகிக்கொள்ளலாம்.—km-TL 8/05 பக். 8; km-TL 1/02 பக். 6.
மாணாக்கர்களைப் போதகர்களாக்க பயிற்றுவித்தல்
◼ தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேரும்படி மாணாக்கர்களை உற்சாகப்படுத்துங்கள்.
◼ புதிய பிரஸ்தாபிகளை உங்களுடைய மற்ற பைபிள் படிப்புகளுக்கு அழைத்துச் சென்று, ஓரிரு குறிப்புகள் சொல்ல அவர்களை அனுமதியுங்கள்.