உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/05 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 9/05 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) அது இல்லாவிட்டால், உயிர்​—⁠எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? புத்தகத்தை அளிக்கலாம் அல்லது 192 பக்க பழைய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை அளிக்கலாம். வீட்டுக்காரர் புத்தகத்தை வாசிக்க விரும்பாவிட்டால் விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டை அளிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பிரதிகளை அளியுங்கள். ஆர்வம் காட்டப்பட்டால், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை தயவுசெய்து அளியுங்கள். நவம்பர்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற புத்தகத்தை அளியுங்கள். வீட்டில் சிறுபிள்ளைகள் யாரும் இல்லையென வீட்டுக்காரர் சொன்னால், அறிவு புத்தகத்தையோ அல்லது பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியையோ அளியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் பைபிள்​—⁠கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா?, என்னுடைய பைபிள் கதைப் புத்தகம், அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற புத்தகங்கள் சபை கையிருப்பில் இருந்தால் வழங்கலாம்.

◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்குக் கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை கிளை அலுவலகத்திற்கு அனுப்புமுன் ஒவ்வொரு மாதமும் அதை சபையாருக்கு அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். தங்களுக்கென பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய இந்த ஏற்பாடு உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.

◼ சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது அமைப்பிலிருந்து தொடர்பறுத்துக் கொண்டவர்கள் மீண்டும் சபைக்குள் வர விரும்பினால், அவர்களுக்கு உதவ பிப்ரவரி 1, 1992, காவற்கோபுரம், 20-1 பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

◼ 2006-ம் ஆண்டின் நினைவு ஆசரிப்புக் காலத்தில் விசேஷப் பேச்சு, ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 30-⁠ம் தேதி கொடுக்கப்படும். அந்தப் பேச்சின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும். சபைகளில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு இருந்தாலோ, அந்த வாரக் கடைசியில் மாநாடு ஏதாவது இருந்தாலோ, அதற்கு மறுவாரத்தில் விசேஷப் பேச்சு கொடுக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 30, 2006-க்கு முன் எந்தச் சபையிலும் விசேஷப் பேச்சு கொடுக்கப்படக் கூடாது.

◼ அக்டோபரில் ஐந்து சனி-ஞாயிறுகள் வருவதால், அது துணைப் பயனியர் சேவை செய்ய மிகச் சிறந்த மாதம்.

◼ 2006 ஊழிய ஆண்டில், சபைகளை வட்டாரக் கண்காணி சந்திக்கும் வாரத்தின்போது துணைப் பயனியர் சேவை செய்யும் அனைவரும் பயனியர்களுக்காக நடத்தப்படும் கூட்டத்தின் முதல் பாதி கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய முடிந்த எல்லாரும் இந்த விசேஷ ஏற்பாட்டிலிருந்து பயனடையும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

◼ புதிய ஊழிய ஆண்டில் தேவைப்படும் போதிய ஃபார்ம்கள் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அனுப்பி வைக்கப்படும் ஃபார்ம்கள் அடுத்த ஊழிய ஆண்டிற்கு போதுமானளவு இருக்கிறதா என்று செயலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு ஃபார்ம் அதிகம் தேவைப்பட்டால் செப்டம்பர் மாத பிரசுர ரிக்வெஸ்டோடு சேர்த்து ஒரேடியாக அனுப்பி வையுங்கள்.

◼ நிலையான பகராள் செயலுரிமை (durable power of attorney [DPA]) ஆவணம் என்றென்றும் செல்லுபடியாகும் என்பதால் ஒவ்வொரு வருடமும் அதை மாற்றவேண்டிய அவசியமில்லை. அதோடு, இந்த ஆவணத்தை பல வருடங்களுக்கு உபயோகிக்க வேண்டியிருப்பதால் இது விசேஷமான பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது. எனவே DPA அட்டைகளும், “DPA அட்டையைப் பூர்த்தி செய்வதற்குரிய அறிவுரைகளும்” (dpai) வருடாந்தர ஆர்டரில் அனுப்பி வைக்கப்படாது. ஒவ்வொரு சபைக்கும் எவ்வளவு அட்டைகள் தேவைப்படுமோ அதை பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தின் (S-14) மூலம் ஆர்டர் செய்யலாம். சபைக்குத் தேவையான DPA அட்டைகளும் அதைப் பூர்த்திசெய்ய உதவும் அறிவுரைகளும் எப்போதும் சபை கையிருப்பில் இருக்கும்படி செயலர் பார்த்துக்கொள்ள வேண்டும். அது தீர்ந்துபோகாதபடி முன்கூட்டியே போதுமானளவு ஆர்டர் செய்ய வேண்டும். DPA அட்டை ஆங்கிலத்தில் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் அதைப் பூர்த்திசெய்ய உதவும் அறிவுரைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிடைக்கும்.

◼ கிடைக்கக்கூடிய புதிய சிடி-ரோம்:

உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2004 பதிப்பு ​—⁠ஆங்கிலம்.

பொதுமக்களுக்கு, பள்ளி லைப்ரரிகளுக்கு, அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளில் ஆர்வம் இருப்பதாக வெறுமனே சொல்பவர்களுக்கு இதை விநியோகிக்க கூடாது என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள். உவாட்ச்டவர் லைப்ரரி, கம்ப்யூட்டர் வைத்திருக்கும் சபை அங்கத்தினர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டிருக்கிற ஓர் ஏற்பாடாகும். இதை சபை மூலமாகத்தான் பெற்றுக்கொள்ள முடியும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்