ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில் சபையார் கலந்துகொண்ட ஓரிரு மாதங்களுக்குப் பின்பு, மாநாட்டைப் பற்றி கலந்தாலோசிப்பதற்காக ஊழிய கூட்டத்தில் (ஒருவேளை சபை தேவைகள் பகுதியில்) 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும். மாநாட்டில் கற்றுக்கொண்ட காரியங்கள் தங்களுடைய ஊழியத்திற்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்ததென்று அப்போது பிரஸ்தாபிகள் சொல்லலாம். இந்த விசேஷ ஊழியக்கூட்ட பகுதி, மாநாட்டில் கற்றுக்கொண்ட காரியங்களை நாம் எப்படிக் கடைப்பிடிக்கிறோம் என்றும், அப்படிக் கடைப்பிடிப்பதால் நம்முடைய ஊழியம் எந்தளவிற்குப் பலன் தந்திருக்கிறது என்றும் சொல்வதற்கு வாய்ப்பளிக்கும்.—ஏப்ரல் 2005 நம் ராஜ்ய ஊழியம் பக். 2-ஐ பார்க்கவும்.
ஆகஸ்ட் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். 2006 ஊழிய ஆண்டில் நடக்கவிருக்கும் வட்டார மாநாடு மற்றும் விசேஷ மாநாட்டின் தேதிகளை ஏற்கெனவே அறிந்திருந்தால் அதை பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்துங்கள்.
10 நிமி: “ராஜ்யமன்ற அழைப்பிதழ்களைப் பயன்படுத்துகிறீர்களா?” பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அழைப்பிதழ்களை உபயோகித்ததால் கிடைத்த நல்ல பலன்களைப் பற்றி சொல்லுமாறு சபையாரைக் கேளுங்கள். அதோடு அந்த அழைப்பிதழை உபயோகித்து ஆர்வமுள்ள ஒருவரைக் கூட்டத்திற்கு வரும்படி ஒரு பிரஸ்தாபி அழைப்பது போல் சுருக்கமாக நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
25 நிமி: “பிரசங்கிப்பதற்கு இதுவே சரியான நேரம்!”a பயனியர் சேவை செய்வதற்காகச் செய்த மாற்றங்களைப் பற்றியும், அதனால் கிடைத்த ஆசீர்வாதங்களைப் பற்றியும் சொல்லுமாறு ஓரிரண்டு ஒழுங்கான பயனியர்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு எண் 197, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஆகஸ்ட் 15 காவற்கோபுரத்தையும் ஆகஸ்ட் 8 விழித்தெழு!வையும் அளிப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள். ஒரு மூப்பரும் உடல்நலம் குன்றிய ஒரு பிரஸ்தாபியும் சேர்ந்து தொலைபேசியில் சாட்சி கொடுப்பது போல் அந்த நடிப்பு இருக்கட்டும்.
15 நிமி: உங்களுக்கு நினைவிருக்கிறதா? காவற்கோபுரம் ஏப்ரல்15, 2005 பக்கம் 30-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிக்கவும். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். இக்கட்டுரையின் நடைமுறையான பயன்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் ஒவ்வொரு இதழையும் கவனமாக வாசிக்குமாறு எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “வீட்டு வாசலிலும் தொலைபேசியிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்.”b தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து ஒரு பாராவை அல்லது இரண்டு பாராக்களை மட்டும் உபயோகித்து முதல் சந்திப்பிலேயே எவ்வாறு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதை சுருக்கமாக நடித்துக்காட்ட செய்யுங்கள். தொலைபேசியின் மூலம் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தது பற்றிய ஓரிரு ஊக்கமூட்டும் அனுபவங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
பாட்டு எண் 30, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும், நன்கொடைக்காக சங்கம் அனுப்பிய நன்றி மடலையும் வாசியுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “ராஜ்ய பிரசங்க வேலை—ஓர் அரிய சிலாக்கியம்.”c 4-வது பாராவை கலந்தாலோசிக்கும்போது, முதிர் வயதாலோ உடல்நலக் குறைவாலோ அதிக ஊழியம் செய்ய முடியாதவர்கள் 15-நிமிட நேர அளவுகளையும் அறிக்கையிடலாம் என்ற விசேஷ ஏற்பாட்டைப் பற்றி குறிப்பிடுங்கள்.—அக்டோபர் 2002 நம் ராஜ்ய ஊழியம், பக். 8, பாரா 6-ஐ பார்க்கவும்.
பாட்டு எண் 204, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, செப்டம்பர் 1 காவற்கோபுரத்தையும் செப்டம்பர் 8 விழித்தெழு!வையும் அளிப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள். ஒரு நடிப்பு, பத்திரிகை மார்க்கத்தில் மறுசந்திப்பு செய்வது போல் இருக்கட்டும்.
15 நிமி: “வார்த்தைகளின்றி சாட்சி கொடுத்தல்.”d கடவுளுடைய ஜனங்களின் நல்நடத்தை எவ்வாறு யெகோவாவின் ஊழியர்களாக மாற தங்களுக்கு உதவியது என்று சில பிரஸ்தாபிகளைச் சொல்லச் சொல்லுங்கள்.
20 நிமி: முதல் சந்திப்பிலேயே பைபிள் வசனங்களை காட்டிப் பேசுங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். முதல் சந்திப்பிலேயே கடவுளுடைய வார்த்தையான பைபிளிடம் கவனத்தைத் திருப்புவதற்கு செப்டம்பர் 2004 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 4, பாரா 2-லுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு அளிப்புகளை உபயோகித்து செப்டம்பர் மாத பிரசுரங்களை எவ்வாறு கொடுக்கலாம் என்று நடித்துக் காட்ட செய்யுங்கள். நேரம் இருந்தால் ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளைப் பற்றியும் கலந்தாலோசித்து, நடித்துக் காட்ட செய்யலாம்.
பாட்டு எண் 71, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 12.”e முன்னேறுகிற பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கவும் அதைத் தொடர்ந்து நடத்தவும் எது உதவியதென்று சொல்லும்படி ஓரிரு பிரஸ்தாபிகளிடம் முன்கூட்டியே சொல்லி வையுங்கள்.
20 நிமி: முதியோருக்கு உதவ காரியங்களை ஒழுங்கமைத்தல். ஆகஸ்ட் 15, 1993, காவற்கோபுரம், பக்கங்கள் 28-9, “ஒழுங்கமைப்பது பயனுள்ளது” என்ற உபதலைப்பின் அடிப்படையில் ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு. நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவ சபை செய்துள்ள ஏற்பாடுகளைக் குறித்துச் சொல்லுங்கள்.
பாட்டு எண் 164, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.