விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைப் படித்தல்
2005-ல் மே 23 முதல் ஜூன் 20 வரையான வாரங்களில் உலகெங்கும் சபைகளில் விழிப்புடன் இருங்கள்! சிற்றேடு, புத்தகப் படிப்பில் கலந்தாலோசிக்கப்படும். இந்தக் கூட்டத்திற்குத் தயாரிப்பதற்கும் அதை நடத்துவதற்கும் பின்வரும் கேள்விகளைத் தயவுசெய்து பயன்படுத்துங்கள். படிப்பின்போது சிற்றேட்டிலுள்ளதை வாசியுங்கள், நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து வசனங்களை எடுத்து வாசியுங்கள்.
மே 23-ல் துவங்கும் வாரம்
◼ பக்கங்கள் 3-4: இங்கே பட்டியலிடப்பட்டுள்ள சூழ்நிலைகளில் எவை முக்கியமாய் உங்களைப் பாதித்திருக்கின்றன? இவை ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் தனித்தனி சம்பவங்கள் அல்ல என்பதை எது உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது?
◼ பக்கம் 5: கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை எது உங்களுக்கு உறுதிப்படுத்துகிறது? கடவுளைப் பற்றி நமக்கு எந்தளவு அக்கறை இருக்கிறது என்பதை எது காட்டலாம், அவர் என்ன செய்து வருகிறார்?
◼ பக்கங்கள் 6-8: தற்போதைய உலக நிலைமைகள் எதை அர்த்தப்படுத்துவதாக மத்தேயு 24:1-8, 14 சொல்கிறது? 2 தீமோத்தேயு 3:1-5-ன்படி நாம் தற்போது எப்படிப்பட்ட காலத்தில் வாழ்கிறோம்? இந்நாட்கள் எதற்கு கடைசி நாட்கள்? பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என எது உங்களுக்கு உறுதிப்படுத்துகிறது? நாம் எந்த ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்து வருகிறோம்?
◼ பக்கங்கள் 9-10: நம் அன்றாட தீர்மானங்களையும் வாழ்க்கையில் எவற்றிற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதையும் ஏன் கவனமாகச் சிந்திக்க வேண்டும்? (ரோ. 2:6; கலா. 6:7) பக்கம் 10-லுள்ள கேள்விகளை மறுபார்வை செய்யும்போது நீங்கள் செய்யும் காரியங்களில் செல்வாக்கு செலுத்த வேண்டிய என்ன வசனங்கள் உங்கள் நினைவுக்கு வருகின்றன?
மே 30-ல் துவங்கும் வாரம்
◼ பக்கம் 11: இந்தப் பக்கத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளைத் தனிப்பட்ட விதமாக நாம் ஏன் சிந்திக்க வேண்டும்? (1 கொ. 10:12; எபே. 6:10-18) இக்கேள்விகளுக்கான நம்முடைய பதில்கள், மத்தேயு 24:44-ல் இயேசு கொடுத்த புத்திமதிக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் தருகிறோம் என்பதைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன?
◼ பக்கம் 12-14: வெளிப்படுத்துதல் 14:6, 7-ல் குறிப்பிடப்பட்ட ‘நியாயத்தீர்ப்பு வேளை’ எது? ‘தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துவது’ எதை அர்த்தப்படுத்துகிறது? மகா பாபிலோன் என்றால் என்ன? அதற்கு என்ன சம்பவிக்கும்? மகா பாபிலோன் சம்பந்தமாக இப்போது நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? முன்னறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பு வேளையில் வேறெதுவும் உட்பட்டுள்ளது? நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதாகக் கடவுள் முன்னறிவித்துள்ள ‘அந்த நாளையாவது நாழிகையையாவது’ நாம் அறியாதிருப்பது நம்மை எப்படிப் பாதிக்கிறது? (மத். 25:13)
◼ பக்கம் 15: பேரரசுரிமை பற்றிய விவாதம் என்ன, இது தனிப்பட்ட விதமாக நம்மை எப்படிப் பாதிக்கிறது?
◼ பக்கங்கள் 16-19: ‘புதிய வானம்,’ “புதிய பூமி” என்றால் என்ன? (2 பே. 3:13) இவற்றைக் குறித்து வாக்குறுதி அளித்திருப்பவர் யார்? புதிய வானமும் புதிய பூமியும் என்ன மாற்றங்களை விளைவிக்கும்? அவற்றிலிருந்து நாம் தனிப்பட்ட விதமாக பயனடைவோமா?
ஜூன் 6-ல் துவங்கும் வாரம்
◼ பக்கம் 20-1: ஓடிப் போவது சம்பந்தமாக என்ன எச்சரிக்கையைத் தம்முடைய முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு இயேசு கொடுத்தார்? (லூக். 21:20, 21) எந்தச் சமயத்தில் அப்படி ஓடிப்போவது சாத்தியமானது? தாமதிக்காமல் ஏன் உடனடியாக தப்பியோட வேண்டியிருந்தது? (மத். 24:16-18, 21) எச்சரிக்கைகளை அநேகர் ஏன் அசட்டை செய்கிறார்கள்? சீனாவிலும், பிலிப்பைன்ஸிலும் இருந்த ஆயிரக்கணக்கானோர் நம்பகமான எச்சரிக்கைகளுக்குச் செவிசாய்த்ததால் எப்படிப் பயனடைந்தார்கள்? தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய பைபிளின் எச்சரிக்கைக்குச் செவிசாய்ப்பது ஏன் இன்னும் மிக அவசரமானதாக இருக்கிறது? இந்த அவசரத்தன்மையைக் கருத்தில் கொள்கையில் நமக்கு என்ன பொறுப்பிருக்கிறது? (நீதி. 24:11, 12)
◼ பக்கங்கள் 22-3: 1974-ல் ஆஸ்திரேலியாவிலும் 1985-ல் கொலம்பியாவிலும் பேரழிவு பற்றிய எச்சரிக்கைகளை அநேகர் ஏன் சட்டை பண்ணாமல் ஒதுக்கித் தள்ளினார்கள், அதன் விளைவு என்ன? இந்த எச்சரிக்கைகளுக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலித்திருப்பீர்கள் என நினைக்கிறீர்கள், ஏன்? நோவாவின் நாளைய எச்சரிக்கைக்கு நாம் செவிசாய்த்திருப்போமா என்பதை எது சுட்டிக்காட்டலாம்? பூர்வ சோதோமிலோ அதற்கு அருகிலோ வாழ்வதற்கு மக்கள் ஏன் ஆசைப்பட்டார்கள்? சோதோமுக்கு ஏற்பட்டதைக் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம் நாம் எப்படிப் பயனடையலாம்?
ஜூன் 13-ல் துவங்கும் வாரம்
◼ பக்கங்கள் 24-7: பக்கம் 27-லுள்ள ‘படிப்புக் கேள்விகளைப்’ பயன்படுத்துங்கள்.
ஜூன் 20-ல் துவங்கும் வாரம்
◼ பக்கங்கள் 28-31: பக்கம் 31-லுள்ள ‘படிப்புக் கேள்விகளைப்’ பயன்படுத்துங்கள்.
சிற்றேட்டை கலந்தாலோசிப்பது ‘விழிப்புடன் இருப்பதற்கும்,’ தயாராய் இருப்பதை நிரூபிப்பதற்கும் நமக்கு உதவும். “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என தேவதூதன் அறிவித்தபோது காட்டிய அவசரத் தன்மையை நம் பிரசங்க ஊழியம் எப்போதும் பிரதிபலிப்பதாக.—மத். 24:42, 44; வெளி. 14:7.