உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/05 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 4/05 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல் 1-17: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். சபைக்குத் தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கு அல்லது/மற்றும் வேறு ஏதாவது விசேஷ தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து போகிற நபர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிக்க கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் நபர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏப்ரல் 18-மே 15: விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் விசேஷ வினியோகிப்பு. மே 16-31 காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். சபைக்குத் தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கு அல்லது/மற்றும் வேறு ஏதாவது விசேஷ தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து போகிற நபர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிக்க கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் நபர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்று வீட்டுக்காரர்கள் சொன்னால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்).

◼ அனைத்து நடத்தும் கண்காணி, செயலர் ஆகியோரின் தற்போதைய விலாசங்களும் தொலைபேசி எண்களும் கிளை அலுவலகத்திடம் இருப்பது அவசியம். எப்போதாவது இவற்றில் மாற்றம் இருந்தால், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) சபையின் ஊழியக்குழு பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு உடனடியாக கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தொலைபேசி ஏரியா கோட் நம்பரில் மாற்றம் இருந்தால் அதையும் இப்படிவத்தின் மூலம் தெரிவிக்க வேண்டும்.

◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205) துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவத்தையும் (S-205b) சபை செயலர்கள் போதுமானளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) இவற்றை ஆர்டர் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தேவையானவை கைவசம் இருக்க வேண்டும். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

◼ பெங்களூரில் 2005, ஆகஸ்ட் 26-28-⁠ல் நடைபெற உள்ள ஆங்கில மாவட்ட மாநாட்டில் காது கேளாதவர்களுக்காக சைகை மொழியிலும் பேச்சுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

◼ லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) பட்டியலிடப்பட்டுள்ளவற்றில் ஒரு வருடத்திற்குத் தேவைப்படும் எல்லா படிவங்களுக்கான ஆர்டரை ஏப்ரல் மாத ஆர்டருடன் சேர்த்து தயவுசெய்து அனுப்புங்கள். படிவங்களுக்காக மட்டுமே தனியாக ஒரு கடிதத்தையோ லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மையோ அனுப்பாமல் ஏப்ரல் மாத ஆர்டருடன் சேர்த்து அனுப்புங்கள். கூடுதல் தகவல் பெற தயவுசெய்து, உவாட்ச்டவர் பிரசுரங்களை வரவழைக்கும் முறை என்ற கையேட்டில் பிரிவு 4, பக்கம் 1-ஐக் காண்க.

◼ 2005-⁠க்கான மாவட்ட மாநாட்டு பேட்ஜ் கார்டுகள் ஆர்டர் செய்யப்படாமலே பிரசுரங்களுடன் அனுப்பி வைக்கப்படும். உங்கள் சபையின் முக்கிய மொழி தவிர வேறு மொழியில் தேவைப்பட்டால் மட்டுமே அதற்காக நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும். உங்கள் சபையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 25 கார்டுகள் உடைய கட்டுகளாக அனுப்பி வைக்கப்படும். இன்னும் அதிக பேட்ஜ் கார்டுகள் சபைக்குத் தேவைப்பட்டால் லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் (திருத்தப்பட்டது) ​—⁠கன்னடம்

குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்​—⁠நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும் ​—⁠கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்