தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 25, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 7 முதல் ஏப்ரல் 25, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சுப் பண்புகள்
1. பேச்சு கொடுப்பதற்குத் தயாரிக்கையில் நமக்கு நியமிக்கப்பட்ட தகவலை எவ்வாறு நன்கு பயன்படுத்தலாம், இது ஏன் முக்கியம்? [be-TL பக். 234 பாரா. 1-3, பெட்டிகள்]
2. நமக்கு நியமிக்கப்பட்ட பேச்சில் எவ்வளவு தகவலை நாம் அளிக்க வேண்டும்? [be-TL பக். 234 பாரா 4 – பக். 235 பாரா 1]
3. வெளி ஊழியத்தில் உரையாடலைத் தூண்டுவதற்குக் கேள்விகளை எப்படி பயன்படுத்தலாம்? (அப். 8:30) [be-TL பக். 236 பாரா. 2-5]
4. மாணாக்கர் தங்களுடைய “நியாயங்காட்டி பேசும் திறமையை” பயன்படுத்துவதற்கு உதவியாக நாம் எவ்வாறு கேள்விகளைப் பயன்படுத்தலாம்? (ரோ. 12:1, NW) [be-TL பக். 238 பாரா 1]
5. ரோமர் 8:31, 32-லும் ஏசாயா 14:27-லும் உள்ள கேள்விகளின் பயன் என்ன? [be-TL பக். 239 பாரா. 1-2]
பேச்சு நியமிப்பு எண் 1
6. நம்முடைய சீஷராக்கும் வேலையில் எப்படி ‘கிறிஸ்துவை அஸ்திவாரமாக வைக்கலாம்’? (1 கொ. 3:11) [be-TL பக். 278 பாரா. 1-2]
7. 1914-ல் ஆளும் அதிகாரம் முழுவதையும் யெகோவா தமது குமாரனுக்கு கொடுத்திருப்பதால், “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று நாம் ஜெபிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? (மத். 6:9, 10) [be-TL பக். 279 பாரா 4]
8. வாசிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஏன் எல்லா கிறிஸ்தவர்களும் கவனம் செலுத்த வேண்டும், இவ்விஷயத்தில் இயேசு எப்படி முன்மாதிரி வைத்தார்? [w-TL03 3/15 பக். 10 பாரா 5; பக். 12 பாரா 2]
9. யோசியா மற்றும் இயேசுவின் உதாரணங்கள் ஆன்மீக ரீதியில் முன்னேற இளைஞர்களுக்கு எவ்வாறு உதவலாம்? [w-TL03 4/1 பக். 8 பாரா. 3-4; பக். 10 பாரா 3]
10. கடவுள் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்? (நீதி. 3:5, 6) [w-TL03 11/1 பக். 4 பாரா. 6-7]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. இஸ்ரவேலை ஆள எந்த அரசரும் இல்லாதிருக்கையில் யெகோவா ‘தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு பெலன் அளிக்கும்படி’ அன்னாள் ஏன் ஜெபித்தாள்? (1 சா. 2:10)
12. உடன்படிக்கை பெட்டி அவர்கள் மத்தியில் இருந்தும்கூட இஸ்ரவேலர் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? (1 சா. 4:3, 4, 10)
13. ஒன்று நாளாகமம் 2:13-15-ல் தாவீதை ஈசாயின் ஏழாம் குமாரன் என்றும் 1 சாமுவேல் 16:10, 11-ல் எட்டாம் குமாரன் என்றும் குறிப்பிடுவது ஏன்?
14. என்ன “பொல்லாத ஆவி” சவுலை கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது? (1 சா. 16:14)
15. எந்தோரில் இருந்த ஆவி மத்தியஸ்தர் மூலம் “சாமுவேல்” கொடுத்த முன்னறிவிப்பு துல்லியமாக இருந்ததா? (1 சா. 28:16-19)