ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
டிசம்பர் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். டிசம்பர் 20-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்ட கலந்தாலோசிப்புக்குத் தயாரிக்கும் வகையில் இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது என்ற ஆங்கில வீடியோவை பார்க்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1-க்கான விசேஷ வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்) டிசம்பர் 15 காவற்கோபுரத்தையும், டிசம்பர் 8 விழித்தெழு!-வையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மற்ற நடைமுறையான அறிமுகங்களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ‘எனக்கு ஏற்கெனவே உங்கள் வேலையைப் பற்றி நன்றாய்த் தெரியும்’ என்று சொல்லி உரையாடலை நிறுத்துவோரை வெவ்வேறு விதமாக சமாளிப்பதைப் போல காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 20-ஐக் காண்க.
15 நிமி: “உங்களுடைய உதவி தேவை.”a ஒரு மூப்பரை சுருக்கமாக பேட்டி காணுங்கள். சபையில் சேவை செய்வதற்கான இலக்கை நாடித்தொடர அவரை எது உற்சாகப்படுத்தியது, தகுதி பெற அவருக்கு எது உதவியது என அவரிடம் கேளுங்கள்.
20 நிமி: “உறவினர்களுக்குச் சாட்சி கொடுப்பது எப்படி?”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். உறவினர்களுடைய ஆர்வத்தைத் தூண்டி, அவர்களிடம் சாட்சி கொடுத்ததைப் பற்றி சபையாரைச் சுருக்கமாக குறிப்பு சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 17, முடிவு ஜெபம்.
டிசம்பர் 20-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “தேவராஜ்ய ஊழியப் பள்ளி நமக்கு எவ்வாறு பயனளிக்கிறது.” பள்ளிக் கண்காணி கொடுக்கும் பேச்சு. அக்டோபர் 2004 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் உள்ள குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பள்ளியின் மூலமாக தாங்கள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதைச் சொல்லும்படி ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
25 நிமி: “இரத்தமின்றி சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலை சந்திக்கிறது வீடியோவிலிருந்து நன்மை பெறுவீர்.” பக்கம் 3-ல் உள்ள கேள்விகளைப் பயன்படுத்தி இரத்தமின்றி சிகிச்சை வீடியோவைப் பற்றி சபையாருடன் கலந்தாலோசியுங்கள். பிற்பாடு, கடைசி பாராவை வாசியுங்கள். இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் ஒரு புதிய ஏற்பாட்டை பற்றிய கலந்தாலோசிப்பிற்கு அடுத்த வாரம் ஆஜராகும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 50, முடிவு ஜெபம்.
டிசம்பர் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. டிசம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 8-ல் உள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்) ஜனவரி 1 காவற்கோபுரத்தை அல்லது டிசம்பர் 8 விழித்தெழு!-வை எவ்வாறு அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
25 நிமி: இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியான கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதல். கிளை அலுவலகம் அளித்த ‘மேனுஸ்கிரிப்ட்’ அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. DPA அட்டைகளை உடனே பூர்த்தி செய்யக்கூடாது என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிடுங்கள். ‘மேனுஸ்கிரிப்ட்டை’ வாசிக்கையில், முக்கிய குறிப்புகளை வலியுறுத்த சுருக்கமான விளக்கங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கூடுதலான உதாரணங்களையோ, வசனங்களையோ சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நேரம் அனுமதிப்பதைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசிக்கவோ அல்லது குறிப்பிடவோ செய்யலாம். பொருத்தமான சமயங்களில் “இரத்தத்திற்கு விலகியிருக்க நமக்கு உதவும் ஒரு புதிய ஏற்பாடு” என்ற பெட்டியிலுள்ள குறிப்புகளுக்குக் கவனத்தை திருப்புங்கள். முழுக்காட்டப்பட்ட எல்லா பிரஸ்தாபிகளுக்கும் DPA அட்டைகளையும், ‘DPA அட்டையைப் பூர்த்தி செய்ய உதவும் அறிவுரைகளை’யும் செயலர் கொடுக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பகுதி கையாளப்படுகையில் சபையார் கவனிக்க உதவியாக இருக்கும். தேவையான அளவு அடையாள அட்டைகள் இருப்பதையும் செயலர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
10 நிமி: உங்கள் மனசாட்சி வகிக்கும் பாகம். ஜூன் 15, 2004 காவற்கோபுரம், பக்கங்கள் 23-4, பாராக்கள் 16-19-ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. மனசாட்சிக்கு விடப்பட்ட காரியங்களின் பேரில் நாம் செய்யும் தீர்மானங்கள் அதிமுக்கியமானவை என்பதை வலியுறுத்துங்கள், ஏனெனில் யெகோவாவுடன் உள்ள நம் உறவு அவற்றில் உட்படுகிறது.
பாட்டு 8, முடிவு ஜெபம்.
ஜனவரி 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பை குறிப்பிடுங்கள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 4.” முதல் பாராவின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு மிகாமல் முகவுரை கொடுங்கள். பிறகு, பைபிள் படிப்பு நடத்துபவர் பாடத்தைத் தயாரிக்க மாணாக்கருக்குப் பயிற்சியளிப்பது போல, பாராக்கள் 2-3-ன் அடிப்படையில் 5 நிமிட நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அறிவு புத்தகத்திலிருந்து அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராவை நடிப்பில் பயன்படுத்தச் சொல்லுங்கள். அதைத் தொடர்ந்து கட்டுரையின் 2 முதல் 5 வரையான பாராக்களை கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். அப்போது நடிப்பில் கண்ட முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “மாநாட்டு நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வதற்கான புதிய ஏற்பாடு.” பக்கம் 4-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அடுத்த வட்டார மற்றும் விசேஷ மாநாடுகள் நடக்கும் தேதிகள் தெரிந்திருந்தால் அவற்றைக் குறிப்பிடுங்கள். முழுக்காட்டப்பட விரும்புபவர்கள் இதைக் குறித்து நடத்தும் கண்காணியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
பாட்டு 28, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.