உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/03 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2003
நம் ராஜ்ய ஊழியம்—2003
km 8/03 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சந்தர்ப்பங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், திருப்தியான வாழ்க்கைக்கு வழி, நம்முடைய பிரச்னைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்​—⁠உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளையும் அளிக்கலாம். செப்டம்பர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” அல்லது இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? புத்தகத்தை அளிக்கலாம்; அது இல்லாவிட்டால், பழுப்பேறியோ நிறம் மாறியோ காணப்படும் 192 பக்க புத்தகத்தை அல்லது 1988-⁠க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவது ஒரு புத்தகத்தை அளிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளையும் அளியுங்கள். அக்கறை காட்டுகிறவர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். நவம்பர்: அறிவு புத்தகத்தையோ தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையோ அளியுங்கள். வீட்டுக்காரர்களிடம் இப்பிரசுரங்கள் ஏற்கெனவே இருந்தால், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தையோ, பழைய பிரசுரம் ஒன்றையோ அளியுங்கள்.

◼ 2003, அக்டோபர் 20-⁠ல் துவங்கும் வாரம் முதல் சபை புத்தகப் படிப்பில் ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை நாம் படிப்போம்.

◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை முடிந்ததும் அடுத்த முறை சபையில் கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, இதையும் சபையாருக்கு அறிவிக்க வேண்டும்.

◼ முடிந்தவரை ஆகஸ்ட் 31, 2003 தேதிக்குள் கையிருப்பிலுள்ள எல்லா புத்தகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் வருடாந்தர இன்வென்ட்ரி எடுக்க வேண்டும். பிரசுர ஒருங்கிணைப்பாளர் ஒவ்வொரு மாதமும் எண்ணிக்கையை சரிபார்ப்பதைப் போலவே இதுவும் உள்ளது. மொத்த எண்ணிக்கையை லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்மில் (S-18-TL) எழுத வேண்டும். கையிருப்பிலுள்ள மொத்த பத்திரிகைகளின் எண்ணிக்கையை பத்திரிகை ஊழியர்/கள் இடமிருந்து தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைப்பு சபையின் செயலர் இன்வென்ட்ரி எடுப்பதை மேற்பார்வை செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பு சபையின் செயலரும் நடத்தும் கண்காணியும் ஃபார்மில் கையொப்பமிடுவார்கள். ஒவ்வொரு ஒருங்கிணைக்கும் சபைக்கும் மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்ரி ஃபார்ம்கள் (S-18-TL) அனுப்பி வைக்கப்படும். தயவுசெய்து செப்டம்பர் 6-⁠ம் தேதிக்குள் ஒரிஜினலை சொஸைட்டிக்கு அனுப்பவும். கார்பன் நகல் ஒன்றை உங்களுடைய ஃபைல்களில் வைத்துக்கொள்ளவும். மூன்றாவது நகலை ‘ரஃப்’ ஷீட்டாக பயன்படுத்திக் கொள்ளவும்.

◼ 2003, ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் பெங்களூர் பெத்தேலில் கையிருப்பில் உள்ள எல்லா பிரசுரங்களுக்கும் இன்வென்ட்ரி எடுக்கப்படும். இதனால், அந்நாட்களில் சபைகளுக்கான பிரசுர ஆர்டர்கள் அனுப்பி வைக்கப்படாது.

◼ நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தின் திருத்திய பதிப்பு மலையாளத்தில் அச்சிடப்படுகிறது. சபைகள் அடுத்த முறை லிட்ரேச்சர் ரிக்குவெஸ்ட் ஃபார்மை அனுப்புகையில் தங்களுக்கு தேவைப்படும் எண்ணிக்கையை ஆர்டர் செய்யலாம்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) ​—⁠மிசோ

இயேசு கிறிஸ்து​—⁠யார்? (துண்டுப்பிரதி எண் 24) ​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மலையாளம், மிசோ, ஹிந்தி

பேசும் மற்றும் கற்பிக்கும் திறமையை வளர்க்க வழி ​—⁠அஸ்ஸாமீஸ், மிசோ

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? ​—⁠குஜராத்தி, பஞ்சாபி

எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் ​—⁠தமிழ், பஞ்சாபி, மலையாளம்

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) ​—⁠ஆங்கிலம், ஒரியா, கன்னடம், குஜராத்தி, கொங்கணி (ரோமன்), தமிழ், தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி

பைபிளின் மூல போதகங்கள் ​—⁠பஞ்சாபி, ஹிந்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்