திருப்தியான வாழ்க்கைக்கு வழி சிற்றேட்டை அளிக்க ஆலோசனைகள்
◼ “அன்றாடம் எதிர்ப்படும் பிரச்சினைகளை பார்க்கும்போது, திருப்தியான வாழ்க்கை உண்மையிலேயே நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா? [பதில் சொல்லட்டும்.] மத்தேயு 5:5-ல் ஒரு ஞானமான ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. [வாசியுங்கள்] இப்படிப்பட்ட சாந்தகுணத்தை எப்படி வளர்த்துக் கொள்வது? நம் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது? இந்த பிரசுரத்தில் 9-ம் பக்கத்திலுள்ள படத்தையும் தலைப்பு வாசகத்தையும் கொஞ்சம் பாருங்களேன்.” பிறகு பக்கம் 8-ல் பாரா 11-க்கு கவனத்தை திருப்புங்கள்.
◼ “தரங்கெட்ட இந்த உலகில் பிள்ளைச் செல்வங்களை வளர்ப்பது பற்றி அநேக பெற்றோர் கவலைப்படுகிறார்கள் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் இல்லையா? [பதில் சொல்லட்டும்.] ஆபத்தான அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதற்காக பெற்றோர் என்ன செய்யலாம்?” நீதிமொழிகள் 22:6-ஐ வாசியுங்கள். பிறகு பக்கம் 5-க்குத் திருப்பி, மேலே உள்ள படத்தையும் 2-வது பாராவையும் கலந்தாலோசியுங்கள்.
◼ “இன்று நம்மில் அநேகர் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பெறுவதற்காக படாதபாடு படுகிறோம், ஆனாலும் அவற்றை பெறுவது கஷ்டம்தான். இவை கைநழுவி போவது ஏன் என்று நினைக்கிறீர்கள்? [பதில் சொல்லட்டும்.] மனிதரின் இன்றைய நிலை பற்றி யோபு 14:1, 2 என்ன சொல்கிறது என்று பாருங்களேன். நாம் நிஜமாகவே சந்தோஷமாய் இருப்பதற்கு எது உதவலாம்?” பக்கம் 22, பாரா 2-க்கு கவனத்தை திருப்புங்கள்; இந்தப் பக்கத்தில் உள்ள படங்களையும் கலந்தாலோசியுங்கள்.