தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 25, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 25, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. வெளி ஊழியத்தில் கண்களைப் பார்த்துப் பேசுவதால் என்னென்ன நன்மைகள் உண்டு? [be-TL பக். 125 பாரா. 1-2; பக். 125 பெட்டி]
2. ஊழியத்திற்குச் செல்ல உங்களுக்கு பயமாக இருந்தால் என்ன செய்யலாம்? [be-TL பக். 128 பாரா. 4-5]
3. மேடையிலிருந்து பேச்சு கொடுக்கும்போது உரையாடல் பாணியில் இயல்பாக பேசுவதற்கு எது உங்களுக்கு உதவும்? [be-TL பக். 129 பாரா 2; பக். 129 பெட்டி]
4. லேவியராகமம் 16:4, 24, 26, 28; யோவான் 13:10; வெளிப்படுத்துதல் 19:8 ஆகியவற்றில் காணப்படும் நியமங்களை நம் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு எவ்வாறு பொருத்தலாம், இது ஏன் முக்கியம்? [be-TL பக். 131 பாரா 3; பக். 131 பெட்டி]
5. அடக்கமும் ‘தெளிந்த புத்தியும்’ உள்ளவர் எப்படிப்பட்டவர் என விவரியுங்கள். (1 தீ. 2:9, 10) [be-TL பக். 132 பாரா 1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் பொறுத்துப்போக வேண்டியிருந்தாலும், தங்கள் மத்தியில் எதை அவர்கள் பொறுத்துக் கொள்வதில்லை? (கொலோ. 3:13) [w-TL01 7/15 பக். 22 பாரா. 7-8]
7. சரியா தவறா: வரிசை எண் என்பது முழு எண் ஆகும். விளக்குக. [si-TL பக். 282 பாரா. 24-5]
8. கடவுளுடைய வார்த்தையை நாம் வாசிப்பதற்கு எது மிகத் தூய்மையான உள்நோக்கமாக இருக்க வேண்டும், அது ஏன் முக்கியமானது? [be-TL பக். 24 பாரா 1]
9. ஒரு ஞானவான் ‘அறிவை சேர்த்து வைப்பது’ எவ்வாறு? (நீதி. 10:14) [w-TL01 7/15 பக். 27 பாரா. 5-6]
10. யோபுவின் நல்ல பழக்கங்கள் ஏன் குறிப்பிடத்தக்கவை? (யோபு 1:1, 8; 2:3) [w-TL01 8/1 பக். 20 பாரா 4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. இரட்சிக்கப்படுவதற்கு புறஜாதியாராய் இருந்து விசுவாசிகளானவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளத் தேவையில்லை என்ற ‘ஒருமனப்பட்ட’ முடிவுக்கு ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் எப்படி வந்தார்கள்? (அப். 15:26)
12. மோசேயின் நியாயப்பிரமாணத்தை யெகோவா ரத்து செய்திருக்கையில், மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்திலுள்ள சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பவுலை ஏன் ஆளும் குழு கேட்டுக்கொண்டது? (அப். 21:20-26) [it-1 பக். 481 பாரா 3; it-2 பக். 1163 பாரா 6 – பக். 1164 பாரா 1]
13. அப்போஸ்தலன் பவுலுக்கு விரோதமாக சொல்லப்பட்ட என்ன பொய்க் குற்றச்சாட்டுகள், சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக பேசப்பட்ட பழிச்சொற்களை நமக்கு நினைப்பூட்டுகின்றன? (அப். 24:5, 6) [w-TL01 12/15 பக். 22 பாரா 7 – பக். 23 பாரா 2]
14. இரண்டு வருடங்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோதிலும், ராஜ்ய அறிவிப்பாளராக பவுல் எவ்வாறு முன்மாதிரி வைத்தார்? (அப். 28:30, 31)
15. ‘மேலான அதிகாரங்கள்’ எவ்வகையில் ‘தேவனுடைய நியமத்தின்’ பாகமாக இருக்கின்றன, இந்த விஷயம் கிறிஸ்தவர்களை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (ரோ. 13:1, 2) [w-TL00 8/1 பக். 4 பாரா 5]