ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) ஆகஸ்ட் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நடிப்பிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். ஒரு நடிப்பில், ‘நான் மிகவும் வேலையாயிருக்கிறேன்’ என்று சொல்லி உரையாடலை வீட்டுக்காரர் நிறுத்தும்போது எப்படி மறுமொழியளிப்பது என்று நடித்துக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 19-ஐக் காண்க.
15 நிமி: “யெகோவாவின் நற்குணத்தை பின்பற்றுங்கள்.”a தயவான செயல்கள் சாட்சி கொடுக்க வழிதிறந்ததைப் பற்றிய சுருக்கமான அனுபவங்களை சபையாரை சொல்லச் சொல்லுங்கள். உடன் விசுவாசிகளுக்கு உதவுவதற்கு அவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளுக்காக சபையாரை பாராட்டுங்கள்.
20 நிமி: “பயனியர் ஊழியத்தின் ஆசீர்வாதங்கள்.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள். பயனியர் ஊழியத்தில் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி சொல்லுமாறு ஓரிரு பயனியர்களிடம் கேளுங்கள். பயனியர் செய்ய ஆர்வமுள்ளவர்கள் செயலரிடமிருந்து விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிவியுங்கள்.
பாட்டு 11, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “திருப்தியான வாழ்க்கைக்கு வழி சிற்றேட்டை அளிக்க ஆலோசனைகள்” என்ற பெட்டியிலுள்ள விஷயங்களை கலந்தாலோசியுங்கள்; அந்த ஆலோசனைகளில் ஒன்றை திறமையான பிரஸ்தாபி நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
17 நிமி: “புத்துணர்ச்சியளிக்கும் வேலை.”c கிறிஸ்தவ ஊழியம் தங்களுக்கு எவ்வாறு புத்துணர்ச்சியளிக்கிறது என்பதைப் பற்றி சொல்ல இரண்டு, மூன்று பேரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
18 நிமி: “நம் ராஜ்ய மன்றத்தை பழுதின்றி பராமரிப்போமாக.”d (பாராக்கள் 1-5) கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைக் கேளுங்கள். பாராக்கள் 3, 4-ஐ கலந்தாலோசிக்கையில், ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்வது சம்பந்தப்பட்ட சபையின் ஏற்பாடுகளை கூறுங்கள். கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் அதை தெரிவியுங்கள். மெய் வணக்கத்திற்குரிய மன்றத்தை பராமரிப்பதற்கு கடினமாக வேலை செய்வதற்காக சபையாரை பாராட்டுங்கள்.
பாட்டு 114, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) செப்டம்பர் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நடிப்பிலும் ஒரு பத்திரிகையை மட்டும் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். இரண்டு நடிப்புகளுமே, பெற்றோர் ஒருவருடன், டீனேஜ் மகனோ மகளோ பத்திரிகை ஊழியத்திற்கு பழகிப் பார்ப்பது போல இருக்கட்டும். அவர்கள் பத்திரிகை அளிப்பு பகுதியிலுள்ள ஆலோசனையை சுருக்கமாக சொல்லிவிட்டு அதை நடித்துக் காட்டுகிறார்கள்.
15 நிமி: இளைஞர்கள் யெகோவாவை துதிக்கிறார்கள்! சபையார் கலந்தாலோசிப்பும் பேட்டிகளுமுள்ள பேச்சு. கூட்டங்களுக்கு இளைஞர்கள் நன்கு தயாரித்து வந்து பதில் சொல்வதைக் கேட்டு நாம் மகிழ்கிறோம். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் அவர்கள் முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவதைக் கண்டு இன்புறுகிறோம். அவர்கள் ஊழியத்தில் அருமையாக சாட்சி கொடுக்கையில் உண்மையான விசுவாசத்தை காட்டுகிறார்கள். கடவுள் பக்தியுள்ள அவர்களுடைய நடத்தை யெகோவாவை கனப்படுத்துகிறது. (yb88 பக். 53-4) அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றம் வருங்கால ஊழிய சிலாக்கியங்களுக்கு அடித்தளம் போடுகிறது. சபை நடவடிக்கைகளில் தவறாமல் பங்குகொள்ளும் கிறிஸ்தவ இளைஞர்களில் இரண்டு, மூன்று பேரை சுருக்கமாக பேட்டி காணுங்கள். சபையிலுள்ள இளைஞர்கள் யெகோவாவை துதிப்பதற்காக செய்யும் அருமையான காரியங்களுக்காக அவர்களை மனதார பாராட்டுங்கள்.
20 நிமி: தைரியத்தை ஒன்று திரட்டி பிரசங்கியுங்கள். (1 தெ. 2:2) பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ராஜ்ய செய்தியை பிறருக்கு சொல்ல ஏன் அநேகர் தயங்குகிறார்கள் என்று விளக்குங்கள். பல வருடங்களாக ஊழியத்தில் ஈடுபடுகிறவர்களும்கூட அப்படி தயங்குவது உண்மை. காவற்கோபுரம், டிசம்பர் 1, 1999, பக்கம் 25; காவற்கோபுரம், டிசம்பர் 15, 1999, பக்கம் 25; காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1996, பக்கம் 31 ஆகியவற்றில் காணப்படும் அனுபவங்கள் சிலவற்றை கூறுங்கள். பயந்து நடுங்கிய சந்தர்ப்பங்களில் நற்செய்தியைச் சொல்வதற்கு தங்களால் தைரியத்தை எப்படி ஒன்று திரட்ட முடிந்தது என்பதைக் கூறும்படி சபையாரிடம் கேளுங்கள். காவற்கோபுரம், டிசம்பர் 15, 1999, பக்கங்கள் 23-4-ன் அடிப்படையில், யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற உற்சாகப்படுத்தி, பேச்சை முடியுங்கள்.
பாட்டு 125, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஆகஸ்ட் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள். செப்டம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்புகளைக் குறிப்பிடுங்கள். மாநாடுகளின் சமயத்திலோ, விடுமுறைக்குச் சென்றிருந்த சமயத்திலோ, கோடை காலத்தின்போது வேறு சமயங்களிலோ, சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததால் கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களை ஓரிருவர் சொல்வதற்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: மறுபடியும் சந்திப்பதற்கு கொடுத்த வாக்கை நீங்கள் காப்பாற்றுகிறீர்களா? காவற்கோபுரம், செப்டம்பர் 15, 1999, பக்கங்கள் 10-11-ல், “வாக்குத் தவறாமல் இருக்க சில வழிகள்” என்ற தலைப்பின் கீழுள்ள விஷயத்தின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஆர்வம் காட்டும் ஒருவரை நாம் ஊழியத்தில் கண்டுபிடிக்கையில், பொதுவாக வேறொரு சந்தர்ப்பத்தில் வந்து கூடுதலான விஷயங்களைப் பேசுவதாக சொல்லிவிட்டு வருகிறோம். வாக்குக் கொடுத்தவாறே உண்மையில் மீண்டும் செல்கிறோமா? கொடுத்த வாக்கை காப்பாற்ற நம்மை உந்துவிக்கும் பைபிள் நியமங்களை மறுபார்வை செய்யுங்கள். சொன்னவாறே மறுசந்திப்பு செய்ததால் கிடைத்த பலன்களைப் பற்றிய அனுபவங்கள் இருப்பின் அவற்றை சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “நம் ராஜ்ய மன்றத்தை பழுதின்றி பராமரிப்போமாக.”e (பாராக்கள் 6-11) கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை கேளுங்கள். பக்கம் 5-ல் காணப்படும் பெட்டியிலுள்ள விஷயத்தை சிறப்பித்துக் காட்டி, ராஜ்ய மன்றத்தை நன்கு பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். உங்கள் ராஜ்ய மன்றத்தின் நிலையைப் பற்றிய சுருக்கமான ஓர் அறிக்கையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பழுது பார்க்கவோ, சீரமைக்கவோ திட்டங்கள் இருப்பின் அவற்றையும் தெரிவியுங்கள்.
பாட்டு 41, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.